For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகள்!!!

By Maha
|

ஒவ்வொருவருக்கும் கால்சியம் நிறைந்த உணவுகள் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக பெண்களுக்கு அவசியமான ஒன்று. ஏனெனில் பெண்கள் இறுதி மாதவிடாய் மற்றும் பிரசவத்தின் போது. நிறைய கால்சியம் சத்துக்களை இழக்கின்றனர். எப்படி பெண்களுக்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாததோ, இதேப் போன்று அதை விட அதிகமாக, வளரும் குழந்தைகளுக்கு முக்கியமானது. ஏனென்றால் வளரும் குழந்தைகளின் எலும்புகள் வலிமையுடன் இருப்பதற்கு, கால்சியம் முக்கியமானது. எனவே குழந்தைகள் நன்கு உயரமாகவும், வலிமையுடனும் வளர வேண்டுமெனில், அவர்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

வேண்டுமெனில் குழந்தைகளுக்கு என்று கடைகளில் விற்கப்படும் உணவுகளில் கூட கால்சியம் சத்து அதிகம் இருப்பதைக் காணலாம். எப்படி கால்சியம் முக்கியமானதோ, அதேப் போன்று வைட்டமின் டி சத்தும் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்பட வேண்டுமெனில், வைட்டமின் டி சத்தும் அத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் வைட்டமின் டி சத்து தான் கால்சியத்தை உறிஞ்ச பயன்படுகிறது.

இப்போது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலை விட அதிகமாக கால்சியம் சத்து நிறைந்த உணவு எதுவும் இல்லை. எனவே தினமும் தவறாமல் இரண்டு டம்ளர் பாலைக் கொடுக்க வேண்டும்.

சீஸ்

சீஸ்

பால் பொருட்களில் ஒன்றான சீஸில் கூட கால்சியம் அதிகம் உள்ளது. ஏனெனில் பாலில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல், சீஸ் வருவதால், அதிலும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து உள்ளது. மேலும் குழந்தைகளுக்கும் சீஸின் சுவை பிடிக்கும். எனவே அதனை பிரட் உடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

மத்தி மீன்

மத்தி மீன்

மத்தி மீனில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு மத்தி மீனை சிறு வயதில் இருந்தே கொடுத்து வருவது நல்லது.

கேல்

கேல்

கீரைகளில் ஒன்றான கேல் கீரையில் சிறிது கால்சியம் இருப்பதால், அதனை கொடுத்தால், கால்சியம் சத்துடன் மற்ற சத்துக்களும் கிடைத்து, குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தயிர்

தயிர்

தயிரிலும் நல்ல வளமான அளவில் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் இதனை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் கால்சியம் சத்துடன், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் நிறைந்துள்ளது. எனவே இதனையும் குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பொதுவாக கீரையில் இரும்புச்சத்து தான் அதிகம் இருக்கும். ஆனால் பசலைக் கீரையில் கால்சியம் சத்துடன், வைட்டமின் கே போன்றவை நிறைந்துள்ளது. ஆனால் குழந்தையை கீரை சாப்பிட வைப்பது, உங்கள் கையில் தான் உள்ளது.

சோயா பால்

சோயா பால்

சோயா பாலிலும் கால்சியம் அதிகம் உள்ளது. லாக்டோஸ் இன்டாலரண்ட் உள்ள குழந்தைகளால் பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை ஜீரணிக்க முடியாது. எனவே அத்தகைய குழந்தைகளுக்கு சோயா பால் சிறந்த மாற்றாக உள்ளது.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸிலும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

ஹெர்ரிங்

ஹெர்ரிங்

ஹெர்ரிங் என்பதும் ஒருவகையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த மீனாகும். இத்தகைய மீனை க்ரில் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் சிறந்தது.

டோஃபு

டோஃபு

டோஃபு ஒரு சோயா பொருள். இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய டோஃபுவை மசாலா போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை பீன்ஸில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே தினமும் குழந்தைகளுக்கு 1/2 கப் வெள்ளை பீன்ஸை வேக வைத்து கொடுத்து வந்தால், அவர்களுக்கு 100 கிராம் கால்சியம் கிடைக்கும். இதனால் அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக விளங்குவது தான் ஓட்ஸ். இத்தகைய ஓட்ஸை பாலுடன் சேர்த்து, குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்து வந்தால், அவர்களுக்கு வேண்டிய கால்சியம் சத்து கிடைத்து, நன்கு வளர்வார்கள்.

உலர்ந்த மூலிகைகள்

உலர்ந்த மூலிகைகள்

சில உலர்ந்த மூலிகைகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக தைம் மற்றும் ரோஸ்மேரி போன்றவற்றில் நல்ல அளவில் கால்சியம் உள்ளது. எனவே இத்தகைய உலர்ந்த மூலிகைகளை நூடுல்ஸ், பாஸ்தா, பிட்சா போன்றவற்றில் தூவி கொடுப்பது மிகவும் நல்லது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர, கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து வருவது, அவர்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Calcium Rich Foods For Growing Kids

If your kids have to grow taller and broader, they need calcium rich foods in their diet. And you should choose foods for kids that naturally have a high dose of calcium and Vitamin D. While having calcium rich foods, it is important to make sure that your kids get Vitamin D too. Here are some of the most suitable calcium rich foods that growing kids must have.
Story first published: Thursday, September 19, 2013, 18:48 [IST]
Desktop Bottom Promotion