For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

உங்கள் குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது கடுமையான நேரத்தை எதிர்கொள்ள வேண்டி வரும். உங்களுக்கும் அது சந்தோஷம் தராது. குழந்தைகள் வெவ்வேறு மூடில் இருக்கும் போது வெவ்வேறு வகையான உணவினை கேட்பார்கள். உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க நீங்கள் சமைத்த உணவு நன்றாக இருக்க வேண்டும். குளிர்கால உணவு வகைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் முயற்சித்து பார்க்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளை கண்டு பிடித்து பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவு உண்ண அவர்களை உற்சாகப்படுத்துவது அவசியம். ஆனால் தேவையில்லாத சில விஷயங்களை அவர்களிடம் சொல்லக்கூடாது. சில நேரங்களில் ஒரு சில நல்ல விஷயங்கள் கூட கெட்ட விஷயங்களாக மாறுவதுண்டு. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை கொடுப்பது உங்கள் குழந்தைகளை உண்ண வைக்க சிறந்த வழியாகும். உங்கள் குழந்கை ஆரம்பத்தில் ஒரு வகை உணவை உண்ணவில்லை என்றால் அவர்களை திட்ட வேண்டாம். போகப் போக சரியாகிவிடும் மற்றும் விரைவில் அந்த உணவை உண்ண நீயே விருப்ம்புவாய் என சொல்ல வேண்டும். உங்கள் குழந்தை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வகை என்றால் அவர்கள் மிகவும் விரும்பும் உணவை செய்து கொடுங்கள். உணவை வண்ணமயமாகவும், நன்றாகவும் செய்து அவர்கள் உண்ண விரும்பும் வகையில் செய்ய வேண்டும். அவர்களிடம் அவர்கள் மிகவும் விரும்பும் விளையாட்டு பொருளை தருவதாகவோ அல்லது பிடித்த இடத்திற்கு அழைத்து செல்வதாகவோ கூறி ஒழுங்காக சாப்பிடச் சொல்லுங்கள். அவர்களை குஷிப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு ஏற்ற சில குளிர்கால உணவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீஸ் பாஸ்தா

சீஸ் பாஸ்தா

இது குழந்தைகள் மிகவும் விரும்பும் உணவுகளில் ஒன்றாகும். இது எளிதில் சமைக்கக் கூடியதாகவும் மற்றும் கேட்டு வாங்கி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்றாகவும் உள்ளது. இதை செய்வதற்கு சராசரியாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இது குளிர்காலத்தில் பரிமாற வேண்டிய சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.

விரல் வடிவ உணவுகளை (Finger Food) முயற்சியுங்கள்

விரல் வடிவ உணவுகளை (Finger Food) முயற்சியுங்கள்

குழந்தைகளுக்கு விரல் வடிவ உணவுகள் பிடிக்கலாம். 'ரைஸ் ரோல் அப்ஸ்' இந்த வகையை சார்ந்ததும் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதுமான உணவாகும். இதை தயாரிக்க கொஞ்சம் கேரட், இனிப்பு மற்றும் புளிப்பு வகை சாஸ், கொஞ்சம் உப்பும், பழுப்பு அரிசியும் தேவை. இதனை சமைத்து விரல் வடிவில் உருட்டவும். இது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகளில் சிறந்த உணவாகும்.

சூப் செய்யுங்கள்

சூப் செய்யுங்கள்

குழந்தைகள் உணவுகளை சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளவில்லையெனில் அவர்களுக்கு சூப் செய்து கொடுக்கலாம். அது அவர்களுக்கு சுலபமானதாக இருக்கும். அவர்களுக்கு விருப்பமான உணவை சமைப்பது எளிதான ஒன்றாகும். கொஞ்சம் காய்கறிகளை வைத்து அருமையான சூப் செய்து கொடுங்கள். இதுவும் குளிர்காலத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த உணவாகும்.

பூசணிக்காய் சீஸ் கேக்

பூசணிக்காய் சீஸ் கேக்

கேக் செய்து அவர்களுக்கு கொடுத்து பாருங்கள். அதை அவர்கள் விரும்பலாம். இது அவர்களை குஷிப்படுத்த ஏற்ற ஒரு சிறந்த குளிர்கால உணவாகும். பூசணிக்காயும் பாலாடையும் (Cheese) சேர்த்த கேக்கை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். இந்த மிருதுவான கேக் அவர்களை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.

காய்கறி மற்றும் சிக்கன்

காய்கறி மற்றும் சிக்கன்

வழக்கமான உணவு வகைகளை அவர்கள் உண்ண விரும்பவில்லையெனில், கொஞ்சம் சிக்கனை காரம் குறைவாக வேக வைத்து, சிறிது காய்கறிகளை சேர்த்து அவர்களை உண்ண வையுங்கள். இது குழந்தைகள் விரும்பும் எளிய வகை உணவு. இதை முயற்சி செய்து பாருங்கள். இதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள்.

கபாப் செய்யுங்கள்

கபாப் செய்யுங்கள்

உங்கள் குழந்தைகளின் மனம் கவர்ந்த உணவாக கபாப் இருக்கும். வண்ணமயமான சிக்கன் கபாப் கொஞ்சம் காய்கறியோடு சேர்த்து செய்யுங்கள். அந்த கலரையும், சுவையையும் அவர்கள் விரும்புவார்கள், பின் அதை சாப்பிடவும் தயாராக இருப்பார்கள். இதுவும் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த குளிர்கால உணவு வகைகளில் ஒன்று தான்.

சிக்கன் பிங்கர்ஸ்

சிக்கன் பிங்கர்ஸ்

மொறுமொறுவென சிக்கன் செய்து கொடுங்கள். இது குழந்தைகளுக்கான விருப்ப உணவுகளில் ஒன்றாகும். அவர்கள் அதை விரும்பலாம். அவர்களை இந்த உணவை சுலபமாக உண்ண வைக்கலாம். உங்கள் குழந்தை உணவு விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டால், இந்த உணவை முயற்சி செய்து பாருங்கள். சிக்கன் பிங்கரை உண்ண அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். இதுவும் குளிர்கால உணவு வகைகளில் முயற்சிக்க வேண்டிய ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Winter Kid-friendly Foods

If your kid is a picky eater, then make foods that he really enjoys. Make the food colorful and attractive, that he really feels s like eating. Tell him that you will buy him his favorite toy or take him for an outing if he has his food properly. Try to woo him. Here are some of the best winter kid-friendly foods. Take a look.
Story first published: Tuesday, December 3, 2013, 17:15 [IST]
Desktop Bottom Promotion