For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் தினமும் ராத்திரி படுக்கையில் 'சுச்சு' போறாங்களா? அதை நிறுத்த இதோ சில டிப்ஸ்...

By Maha
|

குழந்தைகளுக்கு இருக்கும் பொதுவாக பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது. இந்த பிரச்சனை பல குழந்தைகளுக்கு 10 வயது வரை கூட இருக்கும். ஆகவே இந்த பிரச்சனையில் இருந்து சரியாக குழந்தைகளை பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும். இல்லாவிட்டால் அதுவே பழக்கமாகி, பிற்காலத்தில் அவர்களுக்கு அசிங்கத்தை தேடித் தரும்.

இவ்வாறு சிறுநீர் கழிப்பதற்கு குழந்தைகள் எதையாவது பார்த்து பயந்திருக்கலாம் அல்லது ஒருசில உணவுகளினாலும் சிறுநீர் கழிக்கலாம். ஆகவே குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், அவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.

ஆகவே குழந்தைகள் இரவில் படுக்கையில் சுச்சு போவதை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி நடந்தால், நிச்சயம் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் கழிக்கும் பழக்கம்

சிறுநீர் கழிக்கும் பழக்கம்

தினமும் இரவில் படுக்கும் முன், குழந்தைகளை சிறுநீர் கழிக்குமாறு பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், நடுராத்திரியில் சிறுநீர் கழிக்காமல் தடுக்கலாம். மேலும் இந்த பழக்கம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

அலாரம் வைப்பது

அலாரம் வைப்பது

ஒரு வாரம் தொடர்ந்து நடு இரவில் ஒருமுறை அலாரம் வைத்து, அவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்க வைக்கலாம். இப்படி ஒரு வாரத்திற்கு செய்யும் போது, குழந்தைகள் அதற்கு பழகிவிடுவார்கள். பின் நாளடைவில் அவர்களே அலாரம் வைக்காமல் எழுந்து, சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.

டையப்பர்

டையப்பர்

ஒரு குறிப்பிட்ட வயது வரை டையப்பர் வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் விவரம் தெரிந்த பின்னரும் அப்படி செய்தால், அவர்களிடம் என்ன டையப்பர் வைத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, பின் அவர்களது ரியாக்ஷனைப் பாருங்கள்.

திட்ட வேண்டாம்

திட்ட வேண்டாம்

பெரும்பாலான பெற்றோர்கள், சிறுநீர் கழித்துவிட்டால் குழந்தைகளை திட்டுவார்கள். ஆனால் இவ்வாறு பெற்றோர்கள் திட்டுவது என்பது தவறு. இதனால் அவர்களுக்கு கோபம் தான் அதிகரிக்கும். எனவே அவர்களுக்கு இது தவறான பழக்கம் என்று சொல்லி புரிய வையுங்கள்.

மருத்துவரை அழையுங்கள்

மருத்துவரை அழையுங்கள்

அளவின்றி அடிக்கடி சிறுநீர் கழித்தால், அவர்களுக்கு உடலில் பிரச்சனை என்று அர்த்தம். எனவே அப்போது குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தையின் பிரச்சனையை சொல்லி, தீர்வு காணுங்கள்.

சிறுநீரகப் பிரச்சனை

சிறுநீரகப் பிரச்சனை

பொதுவாக சிறுநீரகப் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இத்தகைய பிரச்சனையை உடனே சரிசெய்ய வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இருக்குமாயின், உடனே அதனை பரிசோரித்து சரிசெய்ய முயல வேண்டும்.

வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்கவும்

வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்கவும்

சில குழந்தைகள் இரவில் அதிகப்படியான குளிரால் சிறுநீர் கழிப்பார்கள். எனவே குழந்தைகளை படுக்க வைக்கும் போது, அவர்களுக்கு நல்ல வெதுவெதுப்பான சூழலை உருவாக்கும் போர்வையை போர்த்தி விட வேண்டும். இதனாலும் சிறுநீர் கழிக்காமல் இருப்பார்கள்.

பானங்களை தவிர்க்கவும்

பானங்களை தவிர்க்கவும்

குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் முன், அவர்களுக்கு பானங்கள் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான பானங்களை குடிப்பதாலும், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது.

பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்

குறிப்பாக சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை குழந்தைகள் கைவிட உதவும் போது, பெற்றோர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு பொறுமையாக இருந்து பழக்கப்படுத்தினால், நிச்சயம் குழந்தைகள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bed Wetting Toddlers Need Help

Take a look at some of the ways parents can help their toddlers from wetting the bed. These easy parenting tips will be good for you to make your child understand that wetting the bed is a bad habit and should be stopped.
Desktop Bottom Promotion