For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தி 2019: கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணன் வேடம் போட்ட சில செல்லக்குட்டிகள்!!!

By Maha
|

கிருஷ்ணன் பிறந்த நாளைத் தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். இந்த வருட கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளன்று அனைவரும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல் அலங்கரித்து வீட்டில் விளையாட வைப்பார்கள். மேலும் பல பலகாரங்களை செய்து, கடவுளுக்கு படைத்து படைப்பார்கள்.

அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு அவ்வாறு கிருஷ்ணன் வேடம் போட்டு விட்டு, பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை நீரில் கலந்து, அந்த மாவில் குழந்தைகளின் காலைப் பதித்து, வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தைகளின் கால் தடத்தைப் பதிப்பார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம், இம்மாதிரி செய்வதால், கிருஷ்ணனே வீட்டிற்குள் வருவது போன்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போன்று அலங்கரித்து விட்டு செய்யும் போது, அப்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

மேலும் குழந்தைகளை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணன் வேடம் மட்டுமின்றி, ராதை வேடத்திலும் அலங்கரிக்கலாம். இப்போது அந்த மாதிரி கிருஷ்ணன் மற்றும் ராதை வேடம் போட்ட சில குழந்தைகளின் படங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணெய் சாப்பிடும் கிருஷ்ணன்

வெண்ணெய் சாப்பிடும் கிருஷ்ணன்

இது கிருஷ்ணன் வெண்ணெய் சாப்பிடும் போது எடுத்த போட்டோ.

அழகு நடை

அழகு நடை

இது கிருஷ்ணன் அழகாக நடக்கும் போது எடுத்தது.

க்யூட் கிருஷ்ணன்

க்யூட் கிருஷ்ணன்

இது கிருஷ்ணன் பானையில் உள்ள வெண்ணெயை எடுத்து சாப்பிட பானையை எடுப்பது போன்று உள்ளது தானே!

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணன்

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணன்

இதில் கிருஷ்ணண் புல்லாங்குழலை எடுத்து ஊதுவதற்கு தயாராகிறார்.

குறும்புக்கார கிருஷ்ணன்

குறும்புக்கார கிருஷ்ணன்

இது தான் குறும்புத்தனத்துடன் கிருஷ்ணன் இருப்பது போன்ற போஸ்.

குர்தாவில் கிருஷ்ணன்

குர்தாவில் கிருஷ்ணன்

கிருஷ்ணனுக்கு நல்ல நீல நிறம் என்றால் பிடிக்கும். அதிலும் இவர் சற்று மார்டனான கிருஷ்ணன். எனவே தான் நீல நிற குர்தா மற்றும் சிவப்பு நிற வேஷ்டி அணிந்துள்ளார்.

வெண்ணெய் திருடன்

வெண்ணெய் திருடன்

வெண்ணெய் திருடன் தான் கிருஷ்ணன். ஆனால் இந்த செல்லக்குட்டி கிருஷ்ணனுக்கு வெண்ணெயை ஊட்டி விட வேண்டியுள்ளது.

ராதை

ராதை

கிருஷ்ணனின் உயிர் மற்றும் நெருங்கிய தோழி தான் ராதை. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைகளுக்கு ராதை வேடத்தையும் போட்டுவிடலாம்.

கோகுல கிருஷ்ணன்

கோகுல கிருஷ்ணன்

ராதையை மயக்கும் வண்ணம் கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்ய வேண்டுமா? அப்படியெனில் இந்த மாதிரி அலங்கரிக்கலாம்.

கோகுலத்து பெண்

கோகுலத்து பெண்

கிருஷ்ணன் கோகுலத்து பெண்களுடன் விளையாட ஆசைப்படுவார். எனவே உங்கள் குழந்தைக்கு இந்த படத்தில் உள்ள கோகுலத்துப் பெண் போல் அலங்கரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Baby Krishna Costumes For Janmashtami

Krishna costumes are something that parents can take a look at before Janmashtami. It is important to know the salient features of a baby Krishna outfit first. Here are some of the main elements of Krishna costumes for kids.
Desktop Bottom Promotion