For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களுக்கு ஒற்றை குழந்தையாக இருப்பவர்கள் மீதுள்ள 8 தவறான கருத்துக்கள்!!!

By Super
|

குழந்தை பேறு என்பது தம்பதிகள் பெரும் பெரிய வரமாக கருதப்படுகிறது. இருப்பினும் பல தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல் இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பொக்கிஷமாக கருதப்படும் பிள்ளை வரத்தை பெற்றவர்கள், மருத்துவ மற்றும் குடும்ப சூழலை பொறுத்து குழந்தைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறார்கள். உடம்பு ஒத்துழையாமை, பொருளாதார சூழல், தனிப்பட்ட சிக்கல்கள் என்ற பல காரணங்களுக்காக பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். அப்படி ஒற்றை குழந்தையாக வளர்வதால் சில நல்லதும் உண்டு, சில சிரமங்களும் உண்டு. அது பார்ப்பவர்களின் எண்ணத்தை பொருத்தது.

ஒற்றை குழந்தையாக வளரும் குழந்தையுடைய வாழ்க்கை முறைக்கும், உடன்பிறப்புகளுடன் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால் பல பேரின் மத்தியில் தனியாக வாழும் குழந்தைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் நிலவி கொண்டிருக்கிறது. அது உண்மை என்றும் ஆணித்தனமாக நம்புகிறார்கள். அது எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாகவே உள்ளன. அந்த எண்ணங்களில் உண்மை இல்லாமலும் இருக்கலாம். இப்போது பல பேரின் மனதில், ஒற்றை குழந்தையாக வளரும் பிள்ளைகளைப் பற்றிய சில தவறான கருத்துக்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயநலமிக்கவர்கள்

சுயநலமிக்கவர்கள்

பெற்றோருக்கு ஒற்றை குழந்தையாக உள்ளவர்கள், தங்களின் பொருட்கள், நேரம் மற்றும் தங்கள் பெற்றோரின் கவனம் தங்கள் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநல குணத்துடன் இருப்பார்கள் என்று தான் பலரும் நம்புகின்றனர். இப்படி பொதுவான முறையில் குழந்தைகளை வகைப்படுத்துவது தவறான ஒன்றாகும். மேலும் குழந்தை பருவத்தை தாண்டியும் கூட, இன்னமும் பலர் சுயநலவாதிகளாகவே உள்ளனர். ஒரு குழந்தை சுயநலவாதியாக வளர்வதற்கும், தன்னலமில்லாமல் வளர்வதற்கும், அந்த குழந்தை வளரும் சூழலை பொறுத்தே அமையும்.

தனிமையில் வளர்வது

தனிமையில் வளர்வது

ஒற்றை குழந்தைகளாக உள்ளவர்கள் தனிமையில் வாடுவதால், ஒரு துணைக்காக ஏங்குவார்கள் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. அது முழுவதுமாக உண்மை கிடையாது. இதற்கு எதிர்நிலையாக, அவர்கள் தங்களை எதிலாவது சுறுசுறுப்புடன் ஈடுபடுத்திக் கொண்டு தான் இருப்பார்கள். ஒற்றை குழந்தைகளாக இருப்பவர்கள், தங்களை தானே மகிழ்வித்து தனிமையை ரசிக்க பழகி கொள்வார்கள்.

சமுதாயத்தோடு ஒன்றி வாழ முடியாதவர்களாக இருப்பார்கள்

சமுதாயத்தோடு ஒன்றி வாழ முடியாதவர்களாக இருப்பார்கள்

ஒற்றை குழந்தைகளாக உள்ளவர்கள் சமுதாயத்தில் ஒழுங்காக ஒன்றி வாழ மாட்டார்கள் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. யாருடன் பழக வேண்டும் என்பதில் அவர்கள் குறிப்பாக இருக்கலாம். சமுதாயத்தோடு ஒன்றி பழகாமலும் இருக்கலாம். ஆனால் குடும்பம் என்ற பின்னணியை அவர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள். மேலும் வெகு சிலரையே நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். குறிப்பிட்ட சில பேருடன் மட்டுமே அவர்கள் நெருங்கி பழகுவதால், சமுதாயத்தில் ஒன்றி வாழ அவர்கள் லாயக்கில்லை என்று சொல்லி விட முடியாது.

கெட்டு விடுவார்கள்

கெட்டு விடுவார்கள்

ஒற்றை குழந்தையாக இருப்பதால், தங்களின் குழந்தைக்கு அதிக செல்லம் கொடுத்தால் அவர்கள் கெட்டு போய் விடுவார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் இது வெறும் நம்பிக்கை தான். பெற்றோர்களின் வளர்ப்பு முறையே ஒரு குழந்தை கெடுவதற்கு காரணமாக விளங்கும். அதற்கு ஒற்றை குழந்தையாய் இருப்பதை எல்லாம் காரணம் காட்ட முடியாது. பல நேரங்களில் இரண்டு குழந்தைகள் உள்ள போதிலும், அவர்கள் கெட்டு போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெற்றோர்களின் அதிக கவனம் இருக்காது

பெற்றோர்களின் அதிக கவனம் இருக்காது

ஒற்றை குழந்தையாக இருக்கும் போது, பெற்றோர்களின் பாசம் பங்கு போடப்படாமல், அந்த குழந்தையின் மீதே இருக்கும். ஆனால் பெற்றோர்களின் அயராத பணியின் காரணமாக, அவர்கள் தங்கள் குழந்தையின் மீது கவனத்தை செலுத்த முடியாமல் போகும் வாய்ப்புகளும் இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் ஒற்றை குழந்தையாக உள்ளவர்கள், தங்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்று ஏங்குவதோடு, தனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லையே என்று வருத்தப்படவும் செய்வார்கள்.

அன்புக்கு ஏங்குவது

அன்புக்கு ஏங்குவது

இதுவும் கூட ஒரு பொதுவான வகையே. இதற்கும் ஒற்றை குழந்தையாய் இருப்பதை காரணம் காட்ட முடியாது. ஒரு குழந்தை மற்றவர்களின் கவனம் தன் மீது பட வேண்டும் என்று ஏங்கினால், அது அக்குழந்தையின் குணாதிசயமே. பல நேரங்களில் இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில், முதல் குழந்தை தன் மீது கவனத்தை திசை திருப்ப ஏங்குவது இங்கு நடக்கவில்லையா என்ன?

பிறர் சார்பற்று இருப்பார்கள்

பிறர் சார்பற்று இருப்பார்கள்

ஒற்றை குழந்தையாக இருக்கும் குழந்தைகள், தற்சார்புடைய குணத்துடன் அனைவரையும் விட சிறந்த குழந்தையாக விளங்கும் என்ற தவறான கருத்தும் உள்ளது. உடன்பிறப்புகள் உள்ள குழந்தைகளை விட இக்குழந்தைகள் தான் அதிக தற்சார்புடைய குணத்துடன் இருப்பார்கள் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் இது அனைத்து நேரங்களிலும் உண்மையாகாது. ஒற்றை குழந்தையாக இருக்கும் பல குழந்தைகள் முழுவதுமாக தங்களின் பெற்றோர்களை நம்பியே வாழ்கின்றனர்.

நினைத்தை அடைபவர்கள்

நினைத்தை அடைபவர்கள்

ஒற்றை குழந்தையாக உள்ளவர்கள், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து ஆடம்பரங்களுடன் வாழ்கிறார்கள் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. அப்படிப்பட்ட குழந்தைகள் நினைத்த ஆடம்பர வாழ்க்கை/பொருட்களை அடைபவர்களாக இருப்பார்கள் என்றும் நம்புகின்றனர். ஆனால் ஒற்றை குழந்தைகளாக இருப்பவர்களின் பெற்றோர்கள் அனைவருமே வசதியுடன் இருப்பார்கள் என்று சொல்ல முடியாதல்லவா. ஒருவேளை வசதி வாய்ப்புகள் இருந்தும், குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கி தருபவர்களாக இல்லாமலும் கூட இருக்கலாம் அல்லவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Common Misconceptions About Only Children

Being an only child is not always as easy or as difficult as it is perceived to be. The fact is that the childhood of an only child is very similar to that of a kid who has siblings. We give you some of the misconceptions that people have about only children.
Desktop Bottom Promotion