For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஏற்படும் சரும அலர்ஜியை நீக்க 7 சூப்பர் டிப்ஸ்...

By Super
|

குழந்தைகள் என்றால் ஓடியாடி விளையாடி கொண்டு தான் இருப்பார்கள். அதுவும் ஒரு இடத்தில் அல்ல. வீடு முழுவதும், வீட்டு வாசலில், பூங்கா என பல இடங்களில் ஓடியாடி திரிவார்கள். அதனால் தூசி மற்றும் புழுதியில் அவர்கள் அடிக்கடி வெளிப்பட்டு கொண்டிருப்பது சாதாரணம் தான். அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கினாலும், சில பிரச்சனைகளையும் உண்டாக்கும். அப்படி ஒரு முக்கிய பிரச்சனை தான் சிரங்கு மற்றும் படை.

படை அல்லது சிரங்கு என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுவது தான். தூசியில் இருக்கும் சிற்றுண்ணி, மகரந்தம், கம்பளி ஆடைகள், சில உணவுகள், மாசு, பாக்டீரிய தொற்று, சலவை தூள் மற்றும் சோப்பு போன்றவைகளால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த அலர்ஜியை சமாளிப்பது என்பது குழந்தைகளுக்கு கடிமான ஒன்று தான். கீழ்கூறிய டிப்ஸை பின்பற்றி ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைக்கு இந்த அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதை நீக்கிட உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்களே சிகிச்சை அளிக்காதீர்கள்

நீங்களே சிகிச்சை அளிக்காதீர்கள்

குழந்தை படை அல்லது சிரங்கு அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை ஒரு மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள். நீங்களே ஏதாவது மருந்தை தடவாதீர்கள். ஏனெனில் அலர்ஜிகள் பல வகைப்படும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிகிச்சை முறையை கையாள வேண்டும்.

நன்றாக தூங்க விடுங்கள்

நன்றாக தூங்க விடுங்கள்

சருமத்தில் அரிப்பு ஏற்படுவதால் குழந்தைக்கு தூங்குவதில் சிரமம் ஏற்படும். ஆகவே பருத்தியால் செய்த போர்வையை பயன்படுத்துங்கள். அவர்கள் அறையையும் குளுமையாக வைத்திடுங்கள். குழந்தை தூங்க செல்வதற்கு முன்பாக, அவர்களின் சருமத்தில் மாய்ஸ்சுரைசரை தடவுங்கள். நாய் அல்லது பூனை போன்ற செல்லப் பிராணிகளை படுக்கை அறைக்குள் அனுமதிக்காதீர்கள்.

சருமத்தை சொறிவதை தடுத்து நிறுத்துங்கள்

சருமத்தை சொறிவதை தடுத்து நிறுத்துங்கள்

அலர்ஜி ஏற்பட்ட சருமம் சொறிய தூண்டுவதால், குழந்தைகள் அதை செய்ய முற்படுவார்கள். அதனை தடுத்திடுங்கள். இல்லையென்றால் இரத்தக் கசிவு அல்லது புண் ஏற்பட்டுவிடும். சொறிய வேண்டும் என்று தோன்றும் போது, கைகளை இறுக்கி பிடித்து கொள்ளச் சொல்லுங்கள். அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கும் அவர்களின் நகங்களையும் வெட்டிவிடுங்கள்.

இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்

இறுக்கமான ஆடைகள் அரிப்பை ஏற்படுத்தும். குழந்தைகளின் சருமம் மூச்சு விட விடுங்கள். அதனால் கம்பளி ஆடைகளுக்கு பதிலாக பருத்தி வகை ஆடைகளையே அணிவித்து விடுங்கள். அது எரிச்சல் தன்மையை குறைக்கும்.

கடுமையான ஷாம்பு அல்லது சோப்புகளை பயன்படுத்தாதீர்கள்

கடுமையான ஷாம்பு அல்லது சோப்புகளை பயன்படுத்தாதீர்கள்

கடுமையான சோப்புகள் சருமத்தை வறட்சியாக்கும். வாசனையற்ற மிதமான ஷாம்பு மற்றும் சோப்புகளுக்கு மாறுங்கள். சரும மருத்துவரை ஆலோசித்து குழந்தைக்கு சரியான பொருளை தேர்ந்தெடுங்கள். குழந்தை குளித்த பின்பு ஸ்டெராய்டு இல்லாத க்ரீம் அல்லது லோஷனை அவர்களின் சருமத்தில் தடவி விடுங்கள்.

அலர்ஜியை தூண்டும் பொருட்களில் இருந்து விலகியே இருங்கள்

அலர்ஜியை தூண்டும் பொருட்களில் இருந்து விலகியே இருங்கள்

செல்லப்பிராணிகள், தூசி, குப்பை கூளம் மற்றும் மகரந்தம் போன்றவைகள் அலர்ஜியை ஏற்படுத்தும். படை அல்லது சிரங்கு போன்றவற்றை தூண்டும் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டால் அவைகளை தவிர்த்திடுங்கள். வெளியில் செல்லும் போது பாதுகாப்பான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள். அதே போல் தூசி மிகுந்த பொருட்களை தொட்டு விளையாடினால், கைகளை கழுவி விடுங்கள்.

ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள்

ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள்

வீட்டில் நிலவும் வறண்ட காற்று நிலைமை இன்னும் மோசமாக்கும். ஈரப்பதத்தை அதிகரிக்க ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள். ஈரப்பதம் பாக்டீரியாவை ஈர்த்து, அதனை பசையாக்கிவிடும். அதனால் ஈரப்பதமூட்டியை சுத்தமாக வைத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Tips to Get Rid of Eczema in Kids

Eczema is common among children. This allergy is caused due to dust mites, pollens, woollen clothing, some foods, pollution, bacterial infection, detergents and soaps. It is difficult for a child to cope up with this allergy. As a parent, you can help your lil champ to get rid of it by adopting this tips.
Story first published: Sunday, October 6, 2013, 15:52 [IST]
Desktop Bottom Promotion