For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தான உணவா கொடுங்க!... குட்டீஸ் சமத்தா சாப்பிடுவாங்க!!

By Super
|

நன்கு உண்ணும் குழந்தைகள் படிப்பிலும், விளையாட்டிலும் சுட்டியாக விளங்குகின்றனர் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிள்ளைகளின் படிப்பை மட்டுமே கவனிக்கும் பெற்றோர்கள் அவர்களின் உணவு பழக்கத்தையும் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளை சாப்பிட வைப்பதென்பது எளிதான காரியமில்லை. பெற்றோர் அனைவரும் வேளைக்கு செல்வதால் பிள்ளைகளை ஒழுங்காக சாப்பிட வைக்க நேரம் இருப்பதில்லை. இதனால் பிள்ளைகள் உணவு உண்ணும் பழக்கத்தை அடியோடு வெறுக்கின்றனர். இதுவே தொடர்ந்தால் சத்து குறைபாட்டால் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்கள் வளர்ச்சி தடைப் பட்டுவிடும்.

எனவே ஊட்டச் சத்து மிக்க உணவுகளை கவனமாக தேர்வு செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதோடு ருசியாகவும், கலை நயத்துடனும் அவற்றை சமைத்தும் கொடுக்க வேண்டும். நொருக்கு தீனியை குறைத்து உணவு உட்கொள்ள செய்தால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து பிள்ளைகளை காக்க முடியும்.

பிள்ளைகளை சாப்பிட வைக்க சில முக்கிய டிப்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிள்ளைகளின் பின் ஓடாதீர்கள்

பிள்ளைகளின் பின் ஓடாதீர்கள்

ஒவ்வொரு தாயும் பிள்ளை ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று எண்ணி அவர்கள் பின்னே ஓடி ஓடி ஊட்டுகின்றனர். இது தேவையில்லை. அவைகள் சாப்பிட மறுத்தால் விட்டு விடுங்கள்.

பொருட்படுத்த வேண்டாம்

பொருட்படுத்த வேண்டாம்

பிள்ளைகள் சாப்பிட அடம்பிடித்து சண்டித்தனம் செய்தாலோ, எதையாவது தூக்கி எறிந்தாலோ கண்டு கொள்ள வேண்டாம்.

அதிகமாக செல்லம்

அதிகமாக செல்லம்

அம்மா என்ற நிலையில், கண் மூடித்தனமாக பாசத்தை காட்டினாலும் ஓவராக செல்லம் கொடுக்க வேண்டாம். அது மேலும் அவர்களை முரட்டுத்தனமாக ஆக்கிவிடும்.

சுய ஒழுக்கம்

சுய ஒழுக்கம்

பிள்ளைகள் சாப்பிட அடம்பிடித்தால் அடுத்த வேளை வரை இடையில் உணவு தரமாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறிவிடுங்கள். முதலில் அடம்பிடித்தாலும் பின்பு ஒழுங்கு நிலைக்கு வந்து விடுவார்கள்.

பசியை உணரட்டும்

பசியை உணரட்டும்

பிள்ளைகள் உணவு வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள். சிலர் இது கொடூரமானது என்று கூறினாலும் பிள்ளையை ஒழுங்கு நிலைக்கு எடுத்து செல்லும் வழி இதுவே. பசியைஅவர்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.

சத்துள்ள உணவு

சத்துள்ள உணவு

குழந்தைகள் ஏற்று கொள்ளும் விதத்தில் சத்துள்ள உணவுகளை பற்றி கூறுங்கள். அதன் பின்னர்பிள்ளைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.

பெற்றோர்கள் கவனம்

பெற்றோர்கள் கவனம்

பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். பெரியவர்கள் செய்வதை அப்படியே செய்ய பழகி கொள்வர். ஆகையால் முதலில் பெற்றோர் நல்ல உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உணவு பழக்கத்தை மேற்கொள்ள வில்லையென்றால் அவர்களும் உங்களை போன்றே உணவு உண்ண ஈடுபாடு செலுத்தமாட்டார்கள்.

விளையாட்டாய் உணவு

விளையாட்டாய் உணவு

உணவு உண்ணும் நேரத்தில் அவர்களுக்கு பாடம் எடுத்தும் மிரட்டியும் கெடுத்தால் பிள்ளைகள் முற்றிலுமாக உணவு உண்பதை வெறுத்து விடுவார்கள். மாறாக அந்நேரத்தில் விளையாட்டு காட்டியும் கதை சொல்லியும் உணவு உண்ண செய்தால் வெற்றி தான்.

அலங்கரிக்கப்பட்ட உணவு

அலங்கரிக்கப்பட்ட உணவு

கொஞ்சம் அழகுணர்ச்சியும் வேண்டும் பிள்ளைகளை உண்ண வைக்க. நன்கு சிந்தித்து உணவை தயாரிக்க வேண்டும். பிரட் ஜாமில் அல்லது உலர்ந்த பழங்களில் சிரிப்பது போன்ற அலங்கரித்து பறிமாறினால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

பலவித உணவுகளை கொடுங்கள்

பலவித உணவுகளை கொடுங்கள்

ஒரே மாதிரியான உணவை கொடுத்தால் அவர்களுக்கு போர் அடித்து விடும் ஆகவே உணவை ருசியாகவும், பல விதங்களில் செய்து கொடுங்கள். அப்புறம் தட்டில் உணவு எங்கே என்று தேடவேண்டும்.

எல்லாவற்றையும் அன்போடும் பொறுமையோடும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways to Handle Your Child’s Fussy Eating Habits

Making your child eat can be a ‘Mission Impossible’ task for you. These days kids are very picky and tend to have fussy eating habits. With worries about nutrition on your mind and hectic personal and professional schedules, things may become very difficult for you.
Desktop Bottom Promotion