For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!!!

By Maha
|

குழந்தைகள் தினமும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். அதிலும் பள்ளிக்கு சென்றால் புத்தக அறிவுடன், விளையாட்டு மற்றும் பல விஷயங்களை கற்கின்றனர். அதுவும் இந்த காலத்தில் எல்.கேஜி படிக்கும் குழந்தைகளின் புத்தகங்களைப் பார்த்தால், நாம் பிளஸ் 2 படிக்கும் புத்தகத்தின் அளவிற்கு சிறுவயதிலேயே அதிகமாக மூளையில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் சில சமயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆகவே அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு, அவர்களுக்கு பெற்றோர்கள் நல் ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும். மேலும் ஆய்வு ஒன்றில், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகள் அனைத்திலுல் வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு, அவை மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, குழந்தைகளின் மூளையின் வளர்ச்சியை சீராக வைத்துக் கொள்கிறது.

குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை காலை வேளையில் கொடுப்பது மிகவும் சிறந்தது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை குழந்தைகளுக்கு கொடுத்து, உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

முட்டையில் மூளைச் செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கோலைன் என்னும் சத்து நிறைந்துள்ளது. மேலும் இது ஞாபக சக்திக்கு சிறந்த உணவும் கூட. ஆகவே தினமும் காலையில் குழந்தைகளுக்கு முட்டையை வேக வைத்து கொடுப்பது மிகவும் நல்லது.

தயிர்

தயிர்

தயிரிலும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சத்து அதிகம் உள்ளது. மேலும் தயிரானது மூளைச்செல்கள் சரியாக தகவல்களை கடத்துவதற்கு உதவியாக உள்ளன. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் தயிரைக் கொடுத்து வாருங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். அதே சமயம், உடலில் உள்ள ஆற்றலின் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

மீன்

மீன்

மீனில் உள்ள வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளையை பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பதோடு, ஞாப சக்தியை அதிகரிக்கும். அதிலும் சால்மன், மூனா போன்ற மீன்கள் இன்னும் சிறந்தது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி

இவைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்கள் புரியும் திறனை அதிகரிக்கும். அதிலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நீண்ட நாட்கள் மூளையை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.

பால்

பால்

பாலில் உள்ள புரோட்டீன், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். எனவே குழந்தைகளுக்கு தினமும் 2 டம்ளர் பாலை தவறாமல் கொடுக்க வேண்டும்.

ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ்

ஆப்பிள் மற்றும் ப்ளம்ஸ்

இந்த இரண்டு பழங்களிலும் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், குழந்தைகளின் புலனுணர்விற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது.

நட்ஸ்

நட்ஸ்

புரோட்டீன், ஃபேட்டி ஆசிட் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ், குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்னும் பொருள், மூளையின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன. அதுமட்டுமின்றி, இது ஞாபக மறதி ஏற்படுவதை முற்றிலும் தவிர்த்துவிடும்.

இறைச்சி

இறைச்சி

இறைச்சி கொடுக்கும் போது, நன்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் கொடுக்காமல், நன்கு ப்ரஷ்ஷாக இருக்கும் இறைச்சியைக் கொடுத்தால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் அவர்களின் எலும்புகளும் நன்கு வலிமையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods For Your Kids' Brain Development

Leading nutritionists have researched and found out a list of foods which are excellent for your child's brain development. These foods provide the needed nutrients which are essential for the growing years of your kid. Here are 10 foods which are excellent for your kids' brain development.
Story first published: Monday, September 23, 2013, 17:02 [IST]
Desktop Bottom Promotion