For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

By Maha
|

சில குழந்தைகள் மிகவும் குறைவான உடல் எடையைக் கொண்டிருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பல்வேறு உணவுப்பொருட்களைக் கொடுப்பார்கள். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த பொருட்களை கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகளின் எடையை அதிகரிப்பதற்கு, அப்படி கொழுப்புக்கள் நிறைந்த கண்ட கண்ட பொருட்களை கொடுத்தால், பிற்காலத்தில் குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவார்கள்.

ஆகவே குழந்தைகளின் எடையை அதிகரிக்க முயலும் பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான உணவை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். மேலும் அப்படி கொடுக்கும் உணவுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்திருக்கும் படியான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

இப்போது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், அவர்களின் எடையை அதிகரிக்கவும் உதவும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் கலோரிகள்அதிகம் இருப்பதோடு, அதில் நல்ல கொழுப்புக்களும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு மில்க் ஷேக் போன்று செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பார்கள். இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. அதிலும் எலும்பை வலுவாக வைத்துக் கொள்ளும் கால்சியம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதற்கு தேவையான கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும் இவற்றை குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம். அளவாக கொடுப்பதே சிறந்தது.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். அதிலும் ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆகவே இதனை தினமும் வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயிலும் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.

இறைச்சி

இறைச்சி

இறைச்சியிலும் புரோட்டீன், கால்சியம் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட்டும் அதிகம் உள்ளது. ஆகவே இதனையும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்கலாம்.

இனிப்புகள்

இனிப்புகள்

இனிப்புகள் என்றதும் சாக்லெட்டை அதிகம் கொடுக்க வேண்டாம். இனிப்புக்களில் சரியான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இனிப்புக்களை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, வாழைப்பழ ஸ்மூத்தி, புரூட் ரோல் போன்றவை.

பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில்

பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில்

பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள்

உலர் பழங்களில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும். ஆகவே உலர் பழங்களான முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டும். குறிப்பாக தினமும் அளவாக கொடுக்க வேண்டும்.

செரில்

செரில்

செரில்களில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் போதிக அளவில் நிறைந்துள்ளன. ஆகவே தினமும் காலையில் செரில்களை பாலில் போட்டு கொடுத்து வாருங்கள்.

பிரட்

பிரட்

குழந்தைகளுக்கு வெள்ளை நிற பிரட் கொடுப்பதற்கு பதிலாக, ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட பிரட்டைக் கொடுத்தால், அது அவர்களுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, அவர்களின் எடையையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Foods To Help Kids Gain Weight

Being underweight is a common problem among kids these days. It generally occurs when your kid does not consume the right amount of calories and nutrients that are required for the proper growth. Have a look at these few foods which will help kids gain weight.
Desktop Bottom Promotion