For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டீஸ்க்கு வயிற்றில் பிரச்சினையா? இஞ்சி மிட்டாய் கொடுங்க!

By Mayura Akilan
|

Ginger Home Remedy
நம் உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெரியவர்களுக்கு மலச்சிக்கல் என்றால் அதற்கேற்ப ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு அதை சரி செய்து விடுவோம். ஆனால் சின்னக்குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்றால் எதையுமே சாப்பிடாது. உம் என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். சமயத்தில் சில குழந்தைகள் வாந்தி கூட எடுப்பார்கள். அவர்களுக்கு சில பாட்டி வைத்திய முறைகளை செய்தால் சட்டென்று சரியாகிவிடும்.

விளக்கெண்ணெய் வைத்தியம்

மலம் வெளியேராத குழந்தைகளுக்கு இளம் சூடான நீரை அடிக்கடி கொடுக்கவும் இதனால் வயிற்றில் மலம் இறுகிப் போயிருந்தாலும் இளக்கம் கொடுக்கும். விளக்கெண்ணையை எடுத்து வயிற்றில் சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும் ஆட்டோமேட்டிக் ஆக ஒரு ரிலீஃப் கிடைக்கும்.

சுக்கு டீ கொடுங்க

டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.

ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ருகாம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.

வயிற்றுச் சிக்கலை தீர்ப்பதில் இஞ்சிக்கு நிகர் எதுவுமில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் இஞ்சி மிட்டாய் உண்ணத் தரலாம். இது வயிற்றுப் பிரச்சினையை சரியாக்கும்.

ஆலிவ் எலுமிச்சை

வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்து உலர்ந்து போனாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே எலுமிச்சையானது மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கக் கூடியது. எனவே பயணம் செல்லும் போது .கூட எலுமிச்சையை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது நறுக்கி ஜூஸ் செய்து பருக தரலாம். இதனால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்.

மணிக்கட்டில் அழுத்தம்

இது அக்கு பிரசர் முறையோடு ஒத்தது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ள குழந்தைக்களின் மணிக்கட்டில் உள்பகுதியில் நன்றாக அழுத்தம் கொடுக்கவும். இதனால் வயிற்றில் இளக்கம் கொடுக்கும் சிக்கல் தீரும். ஒவராக பயணம் செய்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே நன்றாக ஓய்வெடுக்க விடவேண்டும். இதனால் குழந்தைகளின் மலச்சிக்கல் தீரும்.

ரசம் சாதம் கரைசல்

கெட்டியான உணவை தவிர்க்கவும். ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும். அப்படியும் பிரச்சினை தீரவில்லை என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிடாத குழந்தைகளுக்கு அல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

English summary

Home Remedy for Motion Sickness | குட்டீஸ்க்கு வயிற்றில் பிரச்சினையா? இஞ்சி மிட்டாய் கொடுங்க!

Motion sickness is an ailment that impacts people who travel by water, land and air. The inner ear sends mixed signals to the brain, causing increased sensory confusion. Symptoms include dizziness, vomiting and nausea.
Story first published: Friday, May 25, 2012, 10:19 [IST]
Desktop Bottom Promotion