For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!

By Maha
|

Child Care
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா!!!

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகள்...

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

பெர்ரி பழங்கள்...

மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.

முட்டை மற்றும் நட்ஸ்...

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

தானிய வகைகள்...

வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மீன்கள்...

மீன்களில் அதிகமாக கொழுப்பு உள்ள மீன் என்றால் அது சமன் மீன் தான். இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.

மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

English summary

brain food for your child | குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!

Do you want your child to fare better in exams this time? Well, studies is not the only arena you need to focus on. Treat your child with proper brain food as whatever we eat not only affects our body but also our brain. Brain food increases memory and skills thus making your child more adept in memorizing or remembering things. They might not be your child's favourite, but a slow incorporation of healthy foods in your kids daily diet is essential.
Story first published: Monday, June 18, 2012, 15:55 [IST]
Desktop Bottom Promotion