For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணைவர் இல்லாமல் வேலைக்கு செல்லும் அம்மாவா? அப்ப இத படிங்க...

By Super
|

துணைவர் இல்லாமல் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் நிறைய அழுத்தத்தையும், தவிப்பையும் உணர்கிறார்கள். மேலும் வீட்டில் சமையல் செய்ய வேண்டும், பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவ வேண்டும், அவர்களை குளிப்பாட்டிவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும், நாள் முழுவதும் கடினமாக வேலை செய்ய வேண்டும், பின்னர் அடுத்த நாளுக்காக தயாராக வேண்டும் என்று ஒரு நாள் வேலைக்கு செல்லும் முன், இத்தனை வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அத்தகைய தாய்மார்களுக்கு அனைத்து வேலைகளையும் கச்சிதமாகவும், எந்த ஒரு டென்சன் இல்லாமலும் செயல்பட ஒரு சில குறிப்புக்களை கொடுத்துள்ளோம்.

How to Be More Organized when You're a Single Working Mom

குறிப்புகள்

1. சமையல் செய்யும் மண் பாத்திரங்களை சுத்தம் செய்து, அதை கொண்டு இரவு உணவை தயார் செய்யவும். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். மேலும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அருமையான வாசனை வரவேற்கும்.

2. ஒன்று இரண்டு பொருட்களை வாங்குவதற்காக தினந்தோறும் கடைக்கு செல்லாமல், வாரத்திற்கு ஒருமுறை கடைக்கு சென்று எல்லா மளிகை சாமான்களையும் வாங்கிவிட வேண்டும். என்ன சமையல் என்பதை முன்பே திட்டமிடவும். தாமதமாக வரும் சமயங்களில், மாலை உணவுக்காக காலையில் சமைத்து ஒரு டப்பாவில் போடப்பட்ட அல்லது உறைந்த உணவு வகைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு செல்லும் வழியில் துரித உணவகத்தில் வாங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டாம்.

3. பள்ளிக்கு தேவையான பொருட்களை மாலையிலேயே வாங்கி வைக்க வேண்டும். இரவு உணவு சாப்பிடும் போது, பாதியில் எழுந்து காகிதங்கள், எழுதுகோல்கள் மற்றும் பிள்ளைக்கு தேவையான பிற பொருட்களை வாங்க விரைந்து செல்ல வேண்டாம்.

4. பிள்ளைகள் வீட்டுப்பாடத்தை முடித்தவுடன், அடுத்த நாளுக்கு தேவையானதை அவர்கள் பையில் அடுக்கி வைக்கச் செய்யுங்கள். கையழுத்து போட வேண்டிய அனுமதி சீட்டுகள், ஆசிரியருடைய குறிப்புகள், பணம் கொண்டு வர சொல்லும் வேண்டுகோள்கள், போன்றவை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

5. நூலக புத்தகங்களுக்காக ஒரு கூடை அல்லது பெட்டியை நிர்ணயம் செய்ய வேண்டும். படிக்காத நேரத்தில் புத்தகங்களை, இதன் பெட்டியிலேயே வைக்கும்படி பிள்ளைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

6. மறு நாளுக்கு தேவையான உடைகளை எடுத்து வைக்க வேண்டும். கையுறைகள், குடைகள் போன்றவற்றை தேடாதபடி ஆடைகளை ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

7. வாரக் கடைசியில் ஒரு பெரிய மூட்டை நிறைய துணிகளை சேர்த்து வைத்து துவைக்காமல், தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக துணிகளை துவைப்பது நல்லது.

8. பாத்திரங்களை கழுவவும், குப்பைகளை வெளியே கொட்டவும், வெளியே செல்லும் முன்பே நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பரபரப்பாக அவற்றை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

9. சுத்தம் செய்யும் பழுவை குறைக்க, தினந்தோறும் சிறிதளவு சுத்தம் செய்யுங்கள்.

10. பள்ளியின் வலைதள நாள்காட்டியில் வரவிருக்கும் நிகழ்வுகளை பார்த்து, நாள்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள்.

English summary

How to Be More Organized when You're a Single Working Mom | துணைவர் இல்லாமல் வேலைக்கு செல்லும் அம்மாவா? அப்ப இத படிங்க...

Single working moms often feel overwhelmed and stressed. After a busy day at work, they must cook dinner, oversee homework and baths, and prepare for the next day. Here are a few tips to become better organized.
Desktop Bottom Promotion