For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆனான் - கற்பழிப்பு வழக்கில் பரபரப்பு!

கேரளாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தந்தை ஆன சம்பவம், கேரளாவில் பரபரப்பு!

|

காலையில் எழுந்ததும் டிவியில், நாளிதழில் ஏதோ இராசிபலன் பார்ப்பது போல தினந்தோறும் கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் செய்திகளில் வந்தவண்ணமே உள்ளன.

பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிப்பை உண்டாக்கும் ஆண்கள் மத்தியிலும் கூட வயது வரம்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று வயது குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாதிக்கப்படுகின்றனர்.

இச்சை என்றால் என்ன என்று தெரியாத, பதின் வயதை கூட எட்டாத ஒரு 12 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்து, அப்பா ஸ்தானம் அடைகிறான் என்றால்... நமது சமூகம் எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்கவே அச்சமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரளா!

கேரளா!

கொச்சி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், 17 வயது பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தையான சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்ற நவம்பர்!

சென்ற நவம்பர்!

12 வயது நிரம்பிய அந்த சிறுவன் சென்ற நவம்பர் மாதம் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

பெண் குழந்தை!

பெண் குழந்தை!

மரபணு பரிசோதனையில், பிறந்த பெண் குழந்தையின் தந்தை அந்த 12 வயது சிறுவன் தான் என தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய பிறகு தான் அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் சீர்திருத்த பள்ளி!

சிறுவர் சீர்திருத்த பள்ளி!

சிறுவனின் வயதை கருதி வழக்கு நீதி வாரியத்தின் கீழ் நடக்கவுள்ளது. மேலும், சிறுவன் இப்போது ஜாமீனில் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இப்படி?

எதனால் இப்படி?

கற்பழிப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதில்லை என்ற போதிலும், இது போன்ற விசித்திர வழக்குகள் இன்று அதிகமாகி வருகிறது. பதின் வயதை கூட எட்டிடாத ஒரு சிறுவன் கற்பழித்தது மட்டுமின்றி, 12 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையும் ஆகியுள்ளான் என்பது பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? கற்பழிப்பு வழக்குகளில் சிக்குபவர்களுக்கு என்ன பெரிதாக தண்டனை கிடைத்துவிட போகிறது என்ற அச்சமின்மையா? ஊடகங்கள், சினிமாக்கள் கற்பழிப்பு என்பதை அதிகம் கவனம் செலுத்தி வெளிச்சமிட்டு காட்டும் பிம்பமா?

பெற்றோரும், சமூகமும்!

பெற்றோரும், சமூகமும்!

இந்த வயதில் இப்படி தான் இருக்க வேண்டும், இந்த செயல்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கற்பிக்க பெற்றோருக்கு நேரமில்லை. தாத்தா, பாட்டி உறவும் இல்லை.

தன் குழந்தையையே சரியாக வளர்க்க நேரம் இல்லாமல் வாழும் இவர்கள், சமூகத்தில் வளரும் குழந்தையின் நலன் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவார்களா என்ன?

முந்தைய தலைமுறை!

முந்தைய தலைமுறை!

முந்தைய தலைமுறையில், நாலு தெரு தள்ளி குடியிருக்கும் குழந்தைகள் கூட, யாருடைய பிள்ளை, அவரது குடும்பம் என்ன என்ற விவரம் தெரியும். எனவே, அவனை வேறு இடத்தில் கண்டால் கூட அதட்டி வீட்டுக்கு அனுப்புவர். ஆனால், இன்றோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.

இப்படிப்பட்ட சமூக மாற்றமும், பெற்றோர் வளர்ப்பு தவறுகளும் தான் இது போன்ற தவறுகள் சமூகத்தில் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 YO Boy Becomes Father in Kerala!

12 YO Boy Becomes Father in Kerala!
Desktop Bottom Promotion