ஒருமுறை உடலுறவில் ஈடுப்பட்டு இரண்டு முறை கருத்தரித்த பெண்!

ஒருமுறை கருவுற்று இரட்டையர் ஈன்றேடுப்பது இயல்பு. ஆனால், அரிய சம்பவமாக ஒரு பெண் ஒருமுறை உடலுறவில் ஈடுப்பட்டு இரண்டு முறை கருதரித்துள்ளார்.

Subscribe to Boldsky

குழந்தை பெற்றெடுக்கும் அந்த கர்ப்ப காலமே, சொல்ல முடியாத வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு அற்புத உணர்வை தரவல்லது தான். அதிலும், இரட்டை குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் இரட்டை குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை.

சில சமயங்களில் கர்ப்ப காலத்தில், குழந்தைகள் பிறக்கும் போது சிலருக்கு வியப்பை அளிக்கும் அரிய சம்பவங்கள் நடக்கும். மூன்று குழந்தைள் பிறப்பது. ஆண், பெண் இரட்டையர்கள் போல. ஆனால், ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கும் "அதுக்கும் மேல" ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிரிஸ்பேன்!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியை சேர்ந்தவர் கேட் ஹில்ஸ். இவர் ஒருமுறை உடலுறவில் ஈடுப்பட்டு இரண்டு முறை கருத்தரித்த சம்பவம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரே பிரசவத்தில் இரட்டையர்கள் கருத்தரிப்பதை நாம் கண்டிருப்போம். ஆனால், ஒரே ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டு இரண்டு முறை கருத்தரித்த சம்பவம் மக்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

10 நாட்களில் இரண்டு முறை!

கேட் ஹில்ஸ் பத்து நாட்களில் இரண்டு முறை கருத்தரித்துள்ளார்.இதை மருத்துவர்கள் மருத்துவ முறையில் சூப்பர்ஃபெட்டேஷன் (Superfetation) என குறிப்பிடுகிறார்கள். இது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவமாகும்.

மருத்துவ சிகிச்சைக்கு பிறகு!

இந்த அதிசயம் கேட் ஹில்ஸ்க்கு பல்பையுரு கருப்பை நோய்க்குறி (polycystic ovarian syndrome) எனும் கோளாறின் போது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்ட பிறகு நடந்துள்ளது.

கேட் ஹில்ஸ்!

கருத்தரித்த பத்தாவது நாளில் மீண்டும் கரு முட்டை கேட் ஹில்ஸ்-க்கு வெளியாகியுள்ளது. ஆக்டிவாக இருந்த இவரது கணவரின் விந்து, மீண்டும் புதிய முட்டையோடு இணைந்து இரண்டாம் முறை இவர் கருத்தரித்துள்ளார்.

பொதுவாக கருத்தரித்த பிறகு பெண்களுக்கு கரு முட்டை வெளிவராது. ஆனால் கேட் ஹில்ஸ்க்கு கருமுட்டை மீண்டும் உருவானதால் தான் இவருக்கு சூப்பர்ஃபெட்டேஷன் எனும் இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இரட்டையர்கள் அல்ல!

ஒரே நாளில் கேட் ஹில்ஸ்க்கு குழந்தைகள் இருவரும் பிறந்தாலும். அவர்கள் இரட்டையர்கள் அல்ல. இருவரும் ஒரே மாதிரி உருவ தோற்றமும் கொண்டிருக்கவில்லை. இருவரும் எடை, வடிவம், கர்ப்பக்காலமும் வேறுபட்டு தான் இருந்தது.

இதுவரை இந்த சூப்பர்ஃபெட்டேஷன் எனும் அரிய வகை சம்பவம் உலகில் பத்து பேருக்கு தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Has Intercource Once and Conceived Twice

Woman Has Intercource Once and Conceived Twice
Story first published: Monday, November 21, 2016, 14:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter