எப்போது உடலுறவு கொண்டால் வேகமாக கருத்தரிக்க முடியும்?

பெண்ணிற்கு கருவளமிக்க நாட்களானது 4-5 ஆவது நாட்களில் ஆரம்பமாகி, அதே சுழற்சியின் 19 ஆவது நாள் வரை ஆகும். இங்கு எந்த காலத்தில் உறவு கொண்டால் எளிதில் கருத்தரிக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினம். இதற்கு நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைத் தான் காரணமாக கூற வேண்டும். ஆனால் நாம் சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபட்டால், வேகமாக கருத்தரிக்க முடியும் என்பது தெரியுமா?

What's The Best Time To Get Pregnant?

பெண்ணிற்கு கருவளமிக்க நாட்களானது 4-5 ஆவது நாட்களில் இருந்து ஆரம்பமாகி, அதே சுழற்சியின் 19 ஆவது நாள் வரை ஆகும். இங்கு எந்த காலத்தில் உடலுறவு கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான விடையை கீழே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஓவுலேசனுக்கு பின் அல்லது ஓவுலேசனுக்கு முன்

ஓவுலேசன் காலம் என்பது கருமுட்டை வெளிவர தயாராக இருக்கும் காலமாகும். ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பும், ஓவுலேசன் முடிந்து 2 நாட்கள் கழித்தும், உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். இருப்பினும் ஒவ்வொரு பெண்ணிற்கும் இது வேறுபடும். உங்களது ஓவுலேசன் காலத்தைத் தெரிந்து கொள்ள, முதலில் உங்களது மாதவிடாய் சுழற்சியை குறைந்தது 2-3 மாதங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஓவுலேசன் காலத்தை எப்படி அறிவது?

ஓவுலேசன் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடும். ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் காலம் என்றால், மார்பகங்கள் மென்மையாகவும், சற்று வலியுடனும் இருக்கும்.

இன்னும் சில பெண்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் அசௌகரியத்தை உணரக்கூடும். வேறுசில பெண்களுக்கு பாலுணர்வு அதிகமாகவும், யோனியில் வெள்ளைப்படுல் அதிகமாகவும் இருக்கும்.

சொல்லப்போனால் இம்மாதிரியான மாற்றத்தை, அடுத்த மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு 10-12 நாட்களுக்கு முன் உணரக்கூடும்.

 

உண்மையில் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்குமா?

பெண்களுக்கு ஓவுலேசன் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருக்கும். இது கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே ஒவ்வொரு பெண்ணும் தங்களது மாதவிடாய் சுழற்சியையும், ஓவுலேசன் காலத்தையும் சரியாக கவனித்து, உறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கருத்தரிப்பதற்கு இடையூறை ஏற்படுத்தும் காரணிகள்:

வாழ்க்கை முறை

உங்கள் வாழ்க்கை முறையில் மது, போதைப் பொருட்கள், சிகரெட் போன்றவை இருந்தால், அது கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். அதிலும் சிகரெட் மற்றும் மது போன்றவை கருமுட்டை மற்றும் விந்தணுக்களைப் பாதித்து, கருத்தரிக்க முடியாமல் செய்யும். எனவே இப்பழக்கங்கள் இருந்தால், உடனே அதைத் தவிர்க்க வேண்டும்.

 

மன அழுத்தம்

ஒரு பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தால், அது அப்பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். எனவே பெண்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

உறவு கொள்ளும் முறை

எத்தனை முறை உடலுறவு கொள்கிறோம் என்பதைப் பொறுத்தும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீங்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்களாயின், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு இல்லாமல், எப்போதாவது என்றால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's The Best Time To Get Pregnant?

Whats the right time to conceive? When is the best time to get pregnant? Well, read on to know the answers...
Story first published: Friday, November 4, 2016, 13:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter