ஆண்களின் கருவளம், விந்து எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க சில டிப்ஸ்...

Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் 15 சதவீத தம்பதிகளால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த தம்பதிகளுள் ஆண்களின் கருவளம் செழிப்பாக இல்லாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களின் கருவளத்தைப் பாதிப்பது குறைவான விந்தணு உற்பத்தி, சரியாக வடிவமைப்பு பெறாத விந்து, மோசமான விந்து இயக்கம் போன்றவை தான்.

ஆண்களின் உடலினுள் உற்பத்தியாகும் வந்து சரியான வடிவதைப் பெறாமல் இருந்தால், விந்துவால் கருமுட்டை வரை பயணித்து செல்ல முடியாமல் போய், கருவுறுவதில் இடையூறு ஏற்படும். விந்தணுக்கள் பாதிக்கப்படுவதற்கு ஆண்களின் மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், உடலில் அதிகப்படியான நச்சுக்களின் தேக்கம் போன்றவை தான் காரணங்களாகும்.

எனவே ஆண்கள் தங்களது கருவளம், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டியது அவசியம். இங்கு அதற்காக ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நல்ல கொழுப்புள்ள உணவுகள்

பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் விந்துவிற்கு நல்ல வடிவத்திற்கும், இயக்கத்திற்கும் ஆதரவாக இருந்து, கருவளத்தை மேம்படுத்தும். எனவே ஆண்கள் இந்த பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த ஸ்பைரூலினா என்னும் கடல் பாசி கேப்ஸ்யூலை தினமும் எடுத்து வந்தால், விந்தணுக்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, விந்து ஆரோக்கியமாக இருக்கும்.

ஜிங்க் உணவுகள்

கடல் சிப்பியில் ஜிங்க் என்னும் தாது அதிகம் உள்ளது. ஆண்களின் உடலில் ஜிங்க் குறைபாடு ஏற்பட்டால், அதனால் அவர்களின் கருவளமும் பாதிக்கப்படும். எனவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த கடல் சிப்பி, திணை போன்ற உணவுகளை அவ்வப்போது உட்கொண்டு வருவது நல்லது.

வைட்டமின் சி உணவுகள்

விந்தணுக்களுக்கு நல்ல பாதுகாப்பை வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் வழங்கும். இந்த வைட்டமின் சி ஆண்களின் உடலில் குறைவாக இருப்பின், அதன் காரணமாக கருவளம் குறைய ஆரம்பிக்கும். ஆகவே வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, அன்னாசி போன்றவற்றை அன்றாடம் ஆண்கள் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 உணவுகள்

ஆண்களின் உடலில் வைட்டமின் பி12 வளமாக இருந்தால், விந்துவும் வளமாக இருக்கும் மற்றும் ஃபோலேட் குறைவாக இருந்தால், அதனால் விந்துவின் டி.என்.ஏ பாதிக்கப்படும். ஆகவே ஆண்கள் ஆட்டு ஈரல், பசலைக்கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், விந்தணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, ஆண்களின் கருவளம் சிறப்பாக இருக்கும்.

உடற்பயிற்சி

இன்றைய கால ஆண்கள் வாரத்திற்கு 5 நாட்கள் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சியை செய்து, மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், கருவளம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம் என அமெரிக்க சமூகத்தின் இனப்பெருக்க மருத்துவம் கூறுகிறது.

இரசாயனப் பொருட்களில் இருந்து விலகி இருப்பது

தற்போது எதை எடுத்தாலும் இரசாயனக் கலப்பு உள்ளது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டில் தண்ணீர், செயற்கை ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் பழங்கள், மது, காப்ஃபைன், ஜங்க் உணவுகள் போன்றவற்றால் விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இவற்றில் இருந்து ஆண்கள் சற்று விலகி இருப்பது, அவர்களின் கருவளத்திற்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to Boost Male Fertility, Sperm Quantity and Sperm Quality

Here are some natural tips to boost male fertility, sperm quantity and sperm quality. Read on to know more...
Story first published: Thursday, August 4, 2016, 16:50 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter