கர்ப்பத்திற்கு முன் ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்!

Subscribe to Boldsky

கர்ப்பம் தரிக்கும் முன்னர் பெண் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பது தவறு. ஆண்களும், கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலை, மன நிலை, பொருளாதாரம் என பெண்களை விட ஆண்கள் கர்ப்பம் சார்ந்து அறிந்துக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.

நமது இப்போதைய செலவு குழந்தையை வளர்க்கும் அளவு பத்துமா. குழந்தையை நல்லப்படியாக வளர்க்க பொருளாதார ரீதியாக நாம் எவ்வளவு வளர்ச்சி அடைய வேண்டும், எதை எல்லாம் திட்டமிட வேண்டும் என்பது குறித்து பெற்றோர் என்ற கடமையில் நீங்கள் சிலவற்றை முழுமையாக தெரிந்துக் கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கவனம்:

கருத்தரிக்க வேண்டும் எனில், முதலில் நீங்கள் நாட்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆம், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் கரு எந்த நாட்களில் வலுவாக ஆரோக்கியமாக இருக்குமோ அந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். மாதவிடாய் நாட்கள் ஆரம்பிக்கும் 5 நாட்களுக்கு முன்னரே கரு வலுவிழக்க ஆரம்பித்துவிடும். எனவே, அந்நாட்களில் நீங்கள் கருத்தரிக்க நினைத்து உறவில் ஈடுபட்டாலும், வாய்ப்புகள் மிகவும் குறைவாக தான் இருக்கும்.

சேமிப்பு:

குழந்தை பெற்றுக் கொள்ள எண்ணும் முன்னர், நீங்கள் சேமிப்பை பற்றி சற்று யோசிக்க வேண்டும். உங்களது அன்றாட செலவுகள் இரட்டிப்பு மடங்கு ஆகும். பிரசவத்திற்கு முன்னர் மருத்துவம், ஆரோக்கியமான உணவுகள்,மற்றும் பிரசவத்திற்கு பிறகு குழந்தை பராமரிப்பு என செலவுகள் சார்ந்து நீங்கள் சேமிப்பை ஆரம்பிக்க வேண்டியது அவசியம்.

எதிர்கால திட்டங்கள்:

சேமிப்பு மட்டுமின்றி, எதிர்கால திட்டங்களை நீங்கள் தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும். உனக்காக நா, எனக்காக நீ என்பதை தாண்டி, அவன் / அவளுக்காக நாம் என்ற வாழ்க்கையை நோக்கிய பயணம் தான் குழந்தைகள். எனவே, உங்களது எதிர்காலத்துடன், அவர்களது எதிர்காலம் நன்றாக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை பற்றிய திட்டமிடுதல் அவசியம்.

அன்பும், பாசமும்:

ஆண் அல்லது பெண் குழந்தை தான் வேண்டும் என்று முன்னரே ஆசைப்படுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இருவரும் உங்கள் உயிர் தான். நீங்கள் எதிர்பார்த்த ஆண் / பெண் குழந்தை பிறக்கவில்லை என கடைசியில் மன வருத்தம் அடைய வேண்டாம். இது, முன்பே நிச்சயிக்கப்படும் செயல் அல்ல.

மனநிலை:

எந்த கட்டத்திலும், மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவரது மனநலம் குன்றும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம். இது குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள முனையும் முன்னர் உங்கள் கோபத்தை மூட்டை கட்டி வைக்க வேண்டியது அவசியம்.

பண்பு:

பணம், பாசம், அன்பு மட்டுமின்றி நல்ல பண்புகள், நன்னெறி, கலாச்சாரம் கற்றுக்கொடுத்து வளர்ப்பேன் என்பதை உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய தலைமுறைக்கு கிடைக்காமல் இருப்பது இதுதான். நல்லதை கற்றுக் கொடுத்து நல்லவர்களாக வளர்க்க வேண்டியது தான் பெற்றோரின் முதன்மை கடமை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Men Must Know Before Pregnancy

Things Men Must Know Before Pregnancy, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter