அபார்ஷனுக்கு பிறகு??? நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு ஆரோக்கியமாய் இருப்பதும் எளிதல்ல. அபார்ஷனுக்கு பிறகு?? நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்.

Subscribe to Boldsky

நீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல... சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டியது சமூகத்தின் கடமை.

The shocking truth about abortion aftercare

அபார்ஷன் என்பது பிறக்கும் முன்னரே ஒரு உயிரை கொல்வது. திருமணத்திற்கு பிறகோ, முன்னரோ கருத்தரிக்க விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த தவற வேண்டாம். அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இளம் வயதில்!

பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.

வலிமை!

ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூற கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.

சிறிய அளவிலான பாதிப்புகள்...

வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு
குமட்டல்
வாந்தி
வயிற்றுப்போக்கு
இரத்தப்போக்கு

பெரிய அளவிலான பாதிப்புகள்...

அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு
தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு
கருப்பை வாய் சேதம்
கருப்பை புறணி வடுக்கள்
கருப்பை துளை
மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு
இறப்பு

உடல் ரீதியான பக்கவிளைவுகள்...

எழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுத்தும்
சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும்
பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும்
100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The shocking truth about abortion aftercare

The shocking truth about abortion aftercare
Please Wait while comments are loading...
Subscribe Newsletter