For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருத்தரிக்க முயலும் பெண்ணின் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

By Maha
|

தற்போது கருத்தரிப்பது என்பது பல தம்பதிகளால் முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு இன்றைய தலைமுறையினரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். இதனால் கருத்தரிக்க முயன்றும் முடியாத நிலையில் உள்ளனர்.

ஆனால் கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், கருமுட்டைக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை கிடைத்து, விரைவில் கருத்தரிக்க உதவும்.

இங்கு கருத்தரிக்க முயலும் பெண்ணின் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

கருமுட்டையின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தால், அதனால் ஓவுலேசன் பாதிக்கப்பட்டு, அதனால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. எனவே தினமும் சிறிது பீன்ஸ் அல்லது பருப்பு வகைகளை உணவில் சேர்த்து வாருங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வைட்டமின் பி6 குறைபாட்டின் காரணமாகவும், கருமுட்டையின் தரம் மற்றும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி நடைபெறும். எனவே தினமும் 2 வாழைப்பழத்தை உட்கொண்டு, உடலில் வைட்டமின் பி6 சத்தை சீரான அளவில் பெறுங்கள். இந்த வைட்டமின் கருப்பையகத்தை வலிமைப்படுத்தி, கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

முட்டை

முட்டை

கருமுட்டையின் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன்கள் மிகவும் முக்கியமானது. கர்ப்பமாக நினைக்கும் பெண்கள் முட்டையை உட்கொண்டு வந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் முட்டையில் வைட்டமின் டி சத்தும் இருப்பதால், இது மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ளும்.

மீன்

மீன்

மீன்களில் சால்மன், டூனா, கானாங்கெளுத்தி போன்றவற்றை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் உட்கொண்டு வர ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் மீனில் கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் உள்ளது. மேலும் முட்டையில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, இன்றை பெண்களைத் தாக்கும் பிசிஓஎஸ் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கேல்

கேல்

கேல் கீரையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து கருமுட்டைக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் கேல் கீரையில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட் இன்டோல்-3-கார்பினோல், ஈஸ்ட்ரோஜென் அளவை சமநிலையில் பராமரிக்கும்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

பெண்கள் போதிய அளவு வைட்டமின் டியை பெற வேண்டியது அவசியம். ஏனெனில் வைட்டமின் டி தான் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் கருத்தரிக்க சிகிச்சை மேற்கொண்டு வரும் பெண்கள், வைட்டமின் டி நிறைந்த அவகேடோ பழத்தை உணவில் சேர்த்து வர, கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எள்

எள்

எள்ளில் உள்ள ஜிங்க் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கருமுட்டைக்கு காரணமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவும். மேலும் எள் விதையில் உள்ள அதிகப்படியான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், முட்டையின் உற்பத்திக்கு முக்கியமானது. எனவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் எள்ளை அதிகம் உட்கொள்வது நல்லது.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கருமுட்டையை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். ஆகவே வாரத்திற்கு ஒருமுறையாவது பெர்ரிப் பழங்களை உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Superfoods To Boost The Quality Of Eggs When Trying To Conceive

Here are some superfoods to boost the quality of eggs when trying to conceive. Read on to know more....
Desktop Bottom Promotion