For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கவனமாக இருக்க வேண்டிய 7 விஷயங்கள்!

|

கர்ப்பம் தரிக்க வைப்பது மட்டும் அல்ல ஆண்களின் வேலை. நீங்கள் ஓர் நல்ல கணவன் என்பது, கர்ப்ப காலத்தில் உங்களது மனைவியை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதோடு இது நின்றுவிடாது.

கர்ப்பத்திற்கு முன் ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள்!

மன ரீதியாக, உடல் ரீதியாக நீங்கள் வெறும் பதியாய் மட்டுமின்றி, அவர்களின் பாதியாய் இருந்து அரவணைத்து, அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் எப்போதுமே, அவர்களுக்கு பிடித்தமான நபர்கள், அவர்களிடம் அதிக அன்பு செலுத்த வேண்டும், அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றுக்கொள்ளுங்கள்!

கற்றுக்கொள்ளுங்கள்!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு என்னென்ன உடல்நல மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக சந்திக்கும் சவால்கள் என்னென்ன. உணவு, ஊட்டச்சத்துக்கள், மருத்துவ தேவைகள், சீரான சிகிச்சைகள் என என்னென்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

தாம்பத்தியம்!

தாம்பத்தியம்!

தாம்பத்திய வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும். எந்த மாதத்தில் இருந்து உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்கும். எனவே, அந்த நேரத்தில், அவர்களது மன அழுத்தம் குறைய நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும். அவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

காதல்!

காதல்!

கர்ப்ப காலத்தில் நூறு சதவீத அன்பை நீங்கள் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவர்களது மனம் புண்படும்படி நடந்துக் கொள்ள கூடாது. இது கர்ப்பிணியை மட்டுமின்றி, சிசுவையும் பாதிக்கும்.

நேர்மறை!

நேர்மறை!

கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு நிறைய நேர்மறை எண்ணங்கள் வளரும்படி பேச வேண்டும், நடந்துக் கொள்ள வேண்டும். இந்த நேர்மறை எண்ணங்கள் தான் அவர்களது மன தைரியத்தை ஊக்குவிக்கும். பயத்தை குறைக்கும்.

உணவு!

உணவு!

அவர்கள் விரும்பும் உணவு என்று மட்டுமின்றி, அவர்களுக்கு உகந்த உணவு எது, எந்த உணவுகள் அவர்கள் சாப்பிட கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு தேவை என அனைத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கேட்க வேண்டும்!

கேட்க வேண்டும்!

கர்ப்பிணி பெண்கள் என்ன கூறுகின்றனர், எப்படி உணர்கின்றனர் என நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களிடம் நிறைய நேரம் செலவழித்து பேசுங்கள். அரவணைப்பாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: basics அடிப்படை
English summary

Seven Ways a Husband Can Support His Pregnant Wife

Seven Ways a Husband Can Support His Pregnant Wife
Desktop Bottom Promotion