For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசு வளர்ச்சியை பாதிக்கும் பாரசிட்டமால் - ஆய்வில் அதிர்ச்சி!

|

சமீபத்தில் பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாரசிட்டமால் மாத்திரையை கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் உட்கொண்டு வந்தால் அது அவர்களது வருங்கால சந்ததியினரின் கருவளத்தை சீர்குலைய செய்கிறது என்றும் முட்டை / விந்தின் தரத்தை குறைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

முக்கியமாக வலிநிவாரணி மாத்திரைகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் அவசியம் என்றால் மருத்துவரிடம் ஆலோசித்து உட்கொள்ளுங்கள் என்றும். அதிலும் குறைந்த அளவிலான டோஸ் மட்டும் எடுத்துக்கொள்ளும் படி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி

ஆராய்ச்சி

கர்ப்பகாலத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது அடுத்த தலைமுறையின் கருவளத்தை பாதிப்படைய செய்கிறது என அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்பகாலத்தில் வலிநிவாரணிகள் வேண்டாம்

கர்ப்பகாலத்தில் வலிநிவாரணிகள் வேண்டாம்

கரு வயிற்றில் வளரும் போது அதிகமான மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டாம். எனவும், இவை சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக அமைகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

எலிகளின் மேல் பரிசோதனை

எலிகளின் மேல் பரிசோதனை

இந்த ஆய்வு எலிகளின் மீது பரிசோதனை செய்யப்பட்டது. இரு இனத்தின் இனப்பெருக்க மண்டலமும் ஒத்துப் போகிறது என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, தாக்கங்களில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்

ஆய்வாளர்

இந்த ஆய்வை நடத்திய எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்ஆய்வாளர் ரிச்சர்ட் (Richard Sharpe), "எலி மற்றும் மனிதர்களின் இனப்பெருக்க மண்டலம் ஒரே மாதிரியானவை, இதனால் தான் இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தலைமுறையை பாதிக்கும்

அடுத்த தலைமுறையை பாதிக்கும்

கர்ப்பகாலத்தில் வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வது அவர்களது மகள் அல்லது பேத்தியை கண்டிப்பாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பாரசிட்டமால்

பாரசிட்டமால்

எலியின் மீது பாரசிட்டமால் மற்றும் இண்டோமெதேசின் எனும் இரண்டு வகை வலிநிவாரணி மாத்திரைகள் ஆராய்ச்சியின் போது பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

மேலும், வலிநிவாரணி மாத்திரைகள் நாள்பட தான் தனது பக்கவிளைவுகளை வெளிப்படுத்தும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இவற்றை கர்ப்பகாலத்தில் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். மிகவும் அவசியம் எனும் கட்டத்தில் மிக குறைவான டோஸ் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்" என ஆய்வாளர் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paracetamol May Harm Your Fertility During Pregnancy

Paracetamol May Harm Your Fertility During Pregnancy, Try and avoid painkiller as much as you can.
Desktop Bottom Promotion