For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவது ஏன்? - பிரிட்டன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

|

இன்றைய காலகட்டத்தில் அவசியம் பேசப்பட வேண்டிய ஒன்று குழந்தையின்மை. இதற்கு பல்வேறு சூழ் நிலைகள் காரணமென்றாலும், காலம் தாழ்த்தி மணம் செய்வது, குழந்தை பெறுவது, முதல் குழந்தையை தள்ளிப் போடுவது இவையெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதன் தொடர்பாக ஒரு ஆய்வு நிருபித்திருக்கின்றது.

One in eight women infertile- in Britain

பிரிட்டனில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மலட்டுத் தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. அதுவும் 35 - 44 வரை உள்ள பெண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. ஆண்களுக்கு 35- 54 வயது வரை உள்ளது.

அதுவும் குறிப்பாக 25 வயதில் தாயாகும் ஒரு பெண்ணைவிட 35 வயதில் தாயாகும் ஒரு பெண், இந்த குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆளாகிறாள். பத்தில் ஒருவருக்கு இந்த வயதில் குழந்தைப் பேறில் இடையூறு வருகிறது என்று கணக்கெடுப்பு கூறுகின்றது.

முதல் குழ்ந்தைக்கே காலம் தாழ்த்துவது, குழந்தைப்பேறிற்கு வழிவகுக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அதுவும் சமூகத்தில் அந்தஸ்து வசதி படைத்தவர்களுக்கே குழந்தைம் பேறின்மை அதிகமாகி வருகிறது. இதற்கு காரணம், அதிகப்படியான வேலைப் பளு, மன அழுத்தம், குழந்தை பேறினை தள்ளி வைத்தல் இதெல்லாம்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதில் 42.7 சதவீத பெண்கள், அல்லது 46.8 சதவீத ஆண்கள் இந்த பிரச்சனைக்கு மருத்துவரை நாடாமலிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் படித்து நல்ல வேலையில் இருப்பவர்களே.

ஆனால் தக்க தருணத்தில் மருத்துவரை நாட வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களுக்கில்லை என்று லண்டனிலுள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியருமான ஜெஸிகா கூறுகிறார்.

இவர்கள் ஏன் மருத்துவர்களை நாடிச் செல்லவில்லையென்றால், , குழந்தையின்மை பற்றிய தயக்கம், அதற்காகும் செலவு மற்றும் கர்ப்பம் ஆவதை விரும்பாமல் இருப்பது ஆகியவற்றை காரணமாக சொல்கிறார்கள். காலம் தாழ்த்தி மருத்துவரை நாடுவதும் கூட மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணம் .

இந்த ஆய்வு பற்றிய முழுத் தகவல்களும், ஹியூமன் ரிப்ரொடக்ஷன் என்ற இதழில் வெளியிடப்படுள்ளது.

English summary

One in eight women infertile- in Britain

One in eight women infertile- in Britain
Story first published: Thursday, July 14, 2016, 17:43 [IST]
Desktop Bottom Promotion