முன்கூட்டியே வெளிப்படும் விந்தை தடுக்க பயிற்சி அளிக்கும் மொபைல் ஆப்!

விந்துதள்ளல் எனப்படும் முன்கூட்டியே வெளிப்படும் விந்து பிரச்சனையை சரி செய்ய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது.

Subscribe to Boldsky

முன்கூட்டியே விந்து வெளிப்படுவது பல ஆண்கள் எதிர் கொள்ளும் தாம்பத்திய பிரச்சனை, இதற்கு மருத்துவ தீர்வுகள் பல இருப்பினும், இப்போது இதை எளிதாக சரிசெய்ய ஒரு மொபைல் ஆப் வெளியாகியுள்ளது.

மொபைல் மற்றும் ஆன்லைன் துறை மிக வேகமாக உறைந்து நிற்கிறது. வெறுமென தொடர்புக் கொள்வதற்கு என்று மட்டுமில்லாமல், படிப்பதற்கு, கேளிக்கைக்கு, அறிவியலுக்கு, மருத்துவத்திற்கு என பலவற்றுக்கு பயன்படுகிறது ஸ்மார்ட் போன் வளர்ச்சி.

இதோ இப்போது தாம்பத்திய பிரச்சனைக்கும் தீர்வளிக்க வந்துவிட்டது மொபைல் ஆப்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பீ (Pea)!

பீ (Pea) என்பது தான் இந்த மொபைல் ஆப்பின் பெயர். இது முன்கூட்டியே விந்து வெளிப்படும் தாம்பத்திய பிரச்சனைக்கு தீர்வளிக்கும் செயலியாக வெளியாகியுள்ளது. இந்த செயலியை ப்ரன்னன் பெலிச் என்பவர் உருவாக்கியுள்ளார்.

நீண்ட கால பிரச்சனை!

ஆயுர்வேதா, ஆங்கில மருத்துவ முறைகள் என பலவன இருந்தாலும் முன்கூட்டியே விந்து வெளிப்படுதலுக்கு சரியான தீர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை.

பயிற்சி தான் அவசியம்!

இதற்கு காரணம், இது ஒரு பிரச்சனையோ, குறைபாடோ அல்ல. மனம் மற்றும் உடலை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலே இதற்கான தீர்வை பெற்றுவிடலாம். இதற்கு பயிற்சிகள் தான் தேவையே ஒழிய, மருந்துகள் அல்ல.

செயலி உருவாக்கியவர்!

கல்லூரி படிக்கும் போதே இந்த செயலியை உருவாக்கிய பெலிச் இந்த விஷயத்திற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும் என எண்ணியுள்ளார். இந்த மாமேதைக்கு இந்த பிரச்சனையால் யாரும் அவதிப்பட கூடாது என்ற உயர்ந்த உள்ளம் அப்போதே இருந்துள்ளது.

பீ அளிக்கும் பயிற்சிகள்!

உணர்ச்சி ஊட்டுதல், தூண்டுதல், சுய இன்பம் காந்தள் போன்றவைக்கு இந்த மொபைல் செயலி பயிற்சி அளிக்கிறது. இந்த ஆப் அளிக்கும் பயிற்சியை பின்பற்றினால் முன்கூட்டியே விந்து வெளிப்படுதலை கட்டுப்படுத்த முடியும் என பெலிச் கூறுகிறார்.

இந்த ஆப் ஆப்பிள் மற்றும் வெப் ஆப்பாக மட்டுமே கிடைக்கிறது. அண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இந்த ஆப் கிடையாது.

பீ(Pea) செயலி பெற

ஏகபோக வளர்ச்சி!

இது ஒன்றும் புதிதல்ல, நீங்கள் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும், எப்படி உடல் பயிற்சி செய்ய வேண்டும் எல்லாவற்றுக்கும் மொபைல் செயலிகள் இருக்கின்றன. இப்படியே போனால், அறுவை சிகிச்சை தவிர மற்ற அனைத்தும் மொபைல் செயலிகளை வந்துவிடும் போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: basics, அடிப்படை
English summary

Now There is an App To Stop Premature Ejaculation

Now There is an App To Stop Premature Ejaculation
Story first published: Thursday, November 10, 2016, 16:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter