இந்த மருந்து மாத்திரைகள் தான் உங்களை கருத்தரிக்க முடியாமல் செய்கிறது என்று தெரியுமா?

தற்போது நிறைய தம்பதிகளால் கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கு எடுத்து வரும் மருந்து மாத்திரைகள் முக்கிய காரணமாகின்றன. இங்கு அந்த மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? ஆனால் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் உடனே மனம் தளராதீர்கள். ஏனெனில் கருத்தரிப்பதற்கு நீங்கள் உட்கொண்டு வரும் சில மருந்துகளும் இடையூறை ஏற்படுத்தும்.

எனவே நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளைத் தவிர்த்திடுங்கள். இதனால் கருத்தரிப்பதில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை அம்மருந்துகளை எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் உங்கள் திட்டம் குறித்து கூறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெராய்டுகள்

ஸ்டெராய்டுகள்

ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் அல்லது லூபஸ் போன்ற பிரச்சனைகளுக்கு ஸ்டெராய்டு மருந்தான prednisolone எடுப்பவரா? ஸ்டெராய்டுகள் கருத்தரிப்பதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள், அதுகுறித்து பேசுங்கள்.

ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்

ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்

ஆர்த்ரிடிஸ் மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றை சரிசெய்ய ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான meloxicam and diclofenac போன்றவை ஓவுலேசனில் இடையூறை ஏற்படுத்தும்.

மன இறுக்கத்தை எதிர்க்கும் மருந்துகள்

மன இறுக்கத்தை எதிர்க்கும் மருந்துகள்

மன இறுக்கத்தைத் தடுக்கும் மருந்துகள் பாலுணர்ச்சி மற்றும் உறவில் ஈடுபடும் எண்ணத்தைப் பாதிக்கும். எனவே கருத்தரிக்க நினைத்தால், மன இறுக்கத்தைக் குறைக்க வேறுசில வழிகளை நாடுங்கள்.

சைக்ளோபாஸ்பைமடு

சைக்ளோபாஸ்பைமடு

சைக்ளோபாஸ்பைமடு என்பது லூபஸ் போன்ற சரும பிரச்சனைக்கான அழற்சி நீக்க மருந்து. இதனை ஒருவர் அதிகம் எடுத்தால், அது ஓவுலேசனில் இடையூறை ஏற்படுத்தி, கருவுற முடியாமல் செய்யும்.

ஆன்டி-சைகோட்டிக்

ஆன்டி-சைகோட்டிக்

Amisulpride மற்றும் Risperidone போன்ற ஆன்டி-சைகோடிக் மருந்துகள், பிட்யூட்டரி சுரப்பியை பாதித்து, மாதவிடாய் சுழற்சியை நிறுத்தும் அல்லது இடையூறை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medications That Can Ruin Your Chances Of Getting Pregnant

Here are some medications that can ruin your chances of getting pregnant. Read on to know more...
Story first published: Monday, October 24, 2016, 14:53 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter