For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்து அடர்த்தியா இல்லையா? ஏன் தெரியுமா?

|

ஒவ்வொரு ஆணுக்கும் தங்களது விந்தணுவைப் பற்றிய பயம் மனதில் இருக்கும். விந்து கெட்டியாக இருப்பது தான் ஆரோக்கியம், நீர்மமாக இருந்தால் ஆரோக்கியமல்ல என்ற ஒரு எண்ணம் ஆண்களிடையே உள்ளது.

ஆனால் இதுவரை எந்த ஒரு ஆய்விலும் விந்துவின் கெட்டித்தன்மைக்கும், கருவளத்திற்கும் தொடர்புள்ளது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. விந்துவில் உள்ள குறிப்பிட்ட நொதிகள், ஃபுருக்டோஸ் மற்றும் விந்து செல்கள் உள்ளது. விந்து வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு அதில் உள்ள புரோட்டீன் தான்.

நீர்மமான விந்து ஆண்களுக்கு குறைவான கருவளம் இருப்பதை உணர்த்தாது. குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சனைகளாலும் ஆண்களுக்கு விந்து நீர்மமாக இருக்கும். எனவே உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சரி இப்போது விந்து நீர்மமாக இருப்பது குறித்த சில உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

விந்தணு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு விந்து நீர்மம் போன்று இருக்கும் என்பது உண்மை தான். அதற்காக நீர்மமாக விந்து இருந்தால், அது விந்தணு குறைபாட்டினால் தான் என்று எப்போதும் நினைக்க வேண்டாம்.

உண்மை #2

உண்மை #2

தவறான உணவுமுறையும் விந்துவின் அடர்த்தியைப் பாதிக்கும். அதிலும் உணவில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அதன் காரணமாகவும் விந்துவின் அடர்த்தி குறைந்து நீர்மமாக இருக்கும்.

உண்மை #3

உண்மை #3

நீரிழிவு, புரோஸ்டேட் நோய்த்தொற்று மற்றும் சில மருந்துகளாலும், விந்துவின் அடர்த்தி குறையும்.

உண்மை #4

உண்மை #4

சில நேரங்களில் விந்து குழாயினுள் சிறு கொப்புளங்கள் இருந்தாலும், அது விந்துவின் அடர்த்தியைக் குறைக்கும்.

உண்மை #5

உண்மை #5

விந்துவின் அடர்த்தி குறைவதுடன், துர்நாற்றத்துடன் இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் விந்து மிகவும் துர்நாற்றத்துடன் இருந்தால், அது நோய்த்தொற்று இருப்பதைக் குறிக்கும்.

உண்மை #6

உண்மை #6

விந்துவின் அடர்த்தி குறைவதற்கு, அடிக்கடி சுயஇன்பம் காண்பது ஒரு காரணியாகும். எனவே உங்கள் விந்து அடர்த்தியின்றி நீர்மமாக இருந்தால், அதற்கு நீங்கள் அதிகம் காணும் சுயஇன்பம் என்பதை மறவாதீர்கள்.

உண்மை #7

உண்மை #7

இறுக்கமான உள்ளாடை அல்லது அந்தரங்க பகுதியில் வெப்பம் அதிகம் இருந்தால், அது விந்து உற்பத்தியைப் பாதித்து, விந்துவின் அடர்த்தியைக் குறைக்கும்.

உண்மை #8

உண்மை #8

ஆண்களின் உடலில் உள்ள டெஸ்ரோஸ்டிரோன் அளவும் விந்துவின் உற்பத்தியைப் பாதிக்கும். அதுமட்டுமின்றி உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், அது விந்துவின் அடர்த்தியைக் குறைக்கும். எனவே விந்து நீர்மமாக இருப்பதற்கான சரியான காரணத்தைக் கண்டறிவது என்பது இயலாதது. மருத்துவரால் மட்டுமே சரியாக கூற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: basics அடிப்படை
English summary

Is Your Semen Watery? Worried?

Most of the men seldom know about the reasons for watery semen. There are many factors that affect semen thickness. Let us discuss about them...
Desktop Bottom Promotion