For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் நன்கு சுரக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?

By Hemalatha
|

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்தும, எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில்தான் உள்ளது. வேறெந்த பாலிலும் இல்லை என்பதை அடித்து சொல்லமுடியும்.

Home remedies to stimulate breast milk

அத்தகைய பால் சில சமயங்களில் தாய்க்கு சுரக்காமல் போவதுண்டு. பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சிலர் வாய்வு தரும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். அது முற்றிலும் தவறு. எல்லா வகை காய்களையும் சாப்பிடலாம்.

தாய்ப்பால் சுரக்காததிற்கு காரணம் :

போதிய ஊட்டச்சத்து இல்லாம இருந்தால் , கோபம் , டென்ஷன் ஆகியவைகளிலாலும் அல்லது காரணங்களே இல்லாமலும் பால் சுரப்பது குறையும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. தாய்ப்பாலின் சுரப்பை தூண்டும் உணவுவகைகள் நிறைய உள்ளன. அவற்றை நாள் தோறும் உணவில் சேர்த்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே பால் நன்றாக சுரக்கும்.

பூண்டு :

பூண்டு பால் சுரப்பினை அதிகப்படுத்தும் அமிலத்தினைக் கொண்டுள்ளது. அந்த காலங்களில் பூண்டை நெய்யில் வதக்கி அம்மாக்களுக்கு கொடுப்பார்கள். தினமும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் பால் கட்டாயம் சுரக்கும். முயன்று பாருங்கள்.

சிவப்பு காய்கறிகள் :

சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அவை பால் சுரப்பிகளை தூண்டி விடுகின்றன. இதனால் பால் நன்றாக சுரக்கும்.
கேரட் , பீட்ரூட், பப்பாளி , சர்க்கரை வள்ளிக் கிழங்கு , அரசாணிக்காய் போன்ற காய்களை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

நட்ஸ் மற்றும் பழங்கள் :

முந்திரி பாதாம் , வேர்க்கடலை உலர் திராட்சை ஆகியவை பால் சுரப்பினை அதிகப்படுத்தும். அவற்றை வறுத்து சாப்பிடலாம். பாதாப் பால் குடிக்கலாம். மேலும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் வராமல் இருக்க நிறைய நீர் குடிக்க வேண்டும்.

திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும் :

பழச்சாறுகள் , நிறைய நீர் ,கஞ்சி ஆகியவற்றை போதிய இடைவெளியில் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது தாயின் உடலில் நீர் வற்றாமலும், ரத்தத்தை சுத்தம் செய்து ரத்த விருத்தியாகும்.இதனால் பால் அதிகம் சுரக்கும்.

வெந்தயம் :

வெந்தயத்தில் அதிகமாய் இரும்பு சத்துக்களும் , கால்சியம் , விட்டமின் அதிகம் உள்ளது. ஆகவே வெந்தயத்தை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் பால் அதிகம் சுரக்கும். வெந்தயத்தை முந்தைய இரவில் ஊற வைத்து , மறு நாள் அந்த நீரினை குடிக்கலாம். ஊறிய வெந்தயத்தை சமையலில் சேர்த்துக் கொண்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கருப்பு எள் :

கருப்பு எள்ளில் கால்சியம் மற்று காப்பர் உள்ளது. இது பால் சுரப்பினை தூண்டும்.ஆகவே அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள் :

ரத்த சோகை ஏற்பட்டாலும் தாய்ப்பால் சுரக்காது. ஆகவே இரும்பு சத்தி நிறைந்த காய்கறிகள் சாப்பிட வெண்டும். இது ரத்தத்தை விருத்தியாக்கும்.


தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைக்கு ஊட்டம் , அறிவு மற்றும் வாழ் நாள் முழுவதும் வாழத்தேவையான அடிப்படை சத்துக்களை கொடுக்கிறது. மேலும் மன அமைதியோடு பால் கொடுக்கும்போது அதன் சத்துக்கள் முழுவதும் குழந்தைக்கு போய் சேர்வதாக ஆய்வு கூறுகின்றது.

ஆகவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கூடுமானவரை வேற்றுப்பாலை தவிர்த்து விடுங்கள். தாய்ப்பால் சுரக்க மேலே சொன்ன வழிகளை பின்பற்றி மகிழ்ச்சியோடு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திடுங்கள்.

English summary

Home remedies to stimulate breast milk

Home remedies to stimulate breast milk
Desktop Bottom Promotion