For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையில் எதிர்மறை முடிவுகளைத் தரும் ஐந்து முக்கிய காரணங்கள்!!!

By Batri Krishnan
|

ஒரு குழந்தையை கருத்தரித்து அதை நல்லவிதமாக ஈன்றெடுத்து இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரைக் கொண்டு வரும் பொழுது, பெண்ணின் உள்ளத்தில் ஏற்படும் சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளினால் விவரிக்க இயலாது.

அவளுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக, அவள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்கு உட்படும் பொழுது, அது சில சமயங்களில் எதிர்மறையாக வருவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்பொழுது அந்தப் பெண்ணின் இதயமே நொறுங்கி விடக்கூடும்.

கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையின் முடிவுகள் சில சமயங்களில் எதிர்மறையாக வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தமிழ் போல்ட் ஸ்கையாகிய நாங்கள் உங்களின் கனவுகளை நனவாக்காமல் வெறும் கனவுகளாகவே தொடரச் செய்யும் அந்தச் சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுமை காத்து சோதிக்கவும்

பொறுமை காத்து சோதிக்கவும்

நிபுணர்கள், ஒரு பெண் மாதவிடாய் காலத்தை தவற விட்ட பின் சில காலங்கள் காத்திருக்க வேண்டும், எனத் தெரிவிக்கின்றார்கள். அது 'HCG' அளவு அதிகரிக்க பயன்படும் என்றும் தெரிவிக்கின்றார்கள். உதாரணமாக, ஒரு பெண் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையை, மாதவிடாயை தவறவிட்ட 10 நாட்களுக்கு பின்னர் மேற்கொண்டால், அவளுடைய சோதனையில் எதிர்மறையான முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும்.

பொறுமை காத்து சோதிக்கவும்

பொறுமை காத்து சோதிக்கவும்

ஒரு பெண்ணிற்கு தவறவிட்ட மாதவிடாயைத் தவிர்த்து பிற அறிகுறிகளும் தென்பட்டால், இந்த சோதனையின் முடிவில் இரு கோடுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனினும், இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வித்தியாசப்படுகின்றது. பெண்ணின் உடலில் சரியான அளவு 'HCG' உற்பத்தியாகவில்லை எனில் அந்த சோதனை, தோல்வியில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொறுமை காத்து சோதிக்கவும்

பொறுமை காத்து சோதிக்கவும்

இதுப்போன்ற சந்தர்ப்பங்களில், மேலும் சில நாட்கள் காத்திருந்து மற்றொரு சோதனை செய்து கொள்ளவது மிகவும் முக்கியம். இதற்குப் பிறகும், சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகவே வருகின்றது எனில், உங்களுடைய சோதனையின் எதிர்மறை முடிவுகளுக்கான காரணங்களை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். எனவே, ஒரு எதிர்மறை கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்கான காரணங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நீர்த்துப்போன சிறுநீர்

நீர்த்துப்போன சிறுநீர்

நீங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையை செய்து கொள்ளும் முன் திரவங்கள் அதிகமாக குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீர் அதிகமாக நீர்த்து இருந்தால் அது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையின் முடிவுகளை கண்டிப்பாக பாதிக்கும்.

தவறான காலத்தில் நடத்தப்படும் சோதனை

தவறான காலத்தில் நடத்தப்படும் சோதனை

கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையை காலையில் செய்வது நல்லது. ஏனெனில் சிறுநீர் நீர்த்துப் போகாமல் சரியான அடர்த்தியில் இருக்கும். காலையில், 'HCG' யின் அளவும் சரியாக இருக்கும். எனவே இது சோதனையின் இறுதியில் சரியான முடிவுகளைப் பெறுவதை உறுதிப்படுத்தும்.

சரியான காலத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை

சரியான காலத்தில் மேற்கொள்ளப்படும் சோதனை

மருத்துவர்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனையை, மாதவிடாயை தவற விட்ட ஒரு வாரத்திற்குப் பின் அல்லது உடலுறவு மேற்கொண்ட பிறகு 10 நாட்கள் கழித்து மட்டுமே எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு முன்பே சோதனையை மேற்கொண்டிருந்தால், அது கண்டிப்பாக எதிர்மறையான முடிவுகளுக்கே வழிவகுக்கும். எனவே மாதவிடாய் காலத்தை தவற விட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து சோதனையை மேற்கொள்வதே மிகவும் சிறந்தது.

சோதனை காலாவதியாகி இருக்கலாம்

சோதனை காலாவதியாகி இருக்கலாம்

கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்கான கிட்டின் கவரைத் திறக்க கிழிக்கும் போது, நீங்கள் உடனடியாக அதை பயன்படுத்துங்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சோதனை மேற்கொள்வது கண்டிப்பாக சோதனையின் முடிவுகளைப் பாதிக்கும். மறுபுறம், கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைக்கான கிட்டை வாங்கும் முன் அதன் காலாவதியாகும் தேதியைப் பார்க்க மறவாதீர்கள்.

எதிர்பாராத ஹார்மோன்கள்

எதிர்பாராத ஹார்மோன்கள்

ஹார்மோன்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடக்கூடும். நீங்கள் கர்க்பமாக இருக்கக்கூடும் என்று கருதினால், கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனை மேற்கொள்ளும் முன் சில பாதுகாப்பு தொடர்பான விதிகளைப் பின்பற்ற வேண்டும். வேறு சில பெண்களோ உடலுறவிலேயே ஈடுபடாமல், அவர்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று கருதிக் கொண்டு கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனை மேற்கொள்கின்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Causes For A Negative Pregnancy Test

Do you know the causes for a negative pregnancy test? Well, here are some of the things you should keep in mind, if you dont see those two happy lines.
Desktop Bottom Promotion