For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி செய்வதால் குறைபிரசவம் ஆகுமா?

|

உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசம் கைகூடும். ஆனால் போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்கிறது என அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்தால் குறைபிரசவம் நடக்கும் என்று சொல்லி வந்தனர். காரணம் அதிக உடற்பயிற்சி செய்யும்போது நார்எபினெஃப்ரின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

இந்த ஹார்மோனால், கர்ப்பப்பை இறுக்கமாகி, சீக்கிரம் பிரசவம் ஆகிவிடுகிறது என்று கூறிவந்தனர். ஆனால் நிறைய ஆய்வுகள், ஆராய்ச்சிகளின் முடிவில், உடற்பயிற்சிக்கும், குறைபிரசவத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிய வந்துள்ளது.

Exercise during pregnancy doesnot cause for pre-term birth

உடற்பயிற்சி செய்வதால் குழந்தைக்கோ, பிரசவத்திற்கோ, அல்லது தாயின் உடல் நிலைக்கோ எந்த பாதிப்பும் வராது என்று தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் வின்சென்ஜோ என்பவர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் சுமார் 2059 கர்ப்பிணிப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 1022 பெண்களுக்கு 10 வாரங்களுக்கு தொடர்ந்து உடற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30- 90 நிமிடங்கள் வரை வாரம் 3 -4 முறை உடற்பயிற்சி தரப்பட்டது. மீதமுள்ள 1037 பெண்களுக்கு உடற்பயிற்சி எதுவும் தரப்படவில்லை.

இவர்களில் உடற்பயிற்சி செய்த பெண்மணிகள் யாருக்கும் குறைப்பிரசவம் நடக்கவில்லை. மாறாக 37 வாரங்கள் முழுமையடைந்து சுகப்பிரசவம் நடைப்பெற்று, குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி செய்தவர்கள் 73 சதவீதத்தினருக்கு சுகப்பிரசவமும், உடற்ப்யிற்சி செய்யாதவர்களுக்கு 67 சத்வீதம் சுகப்பிரசவம் நடைப்பெற்றதாக தெரிவித்தனர்.

மேலும் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவைகள் பாதிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

English summary

Exercise during pregnancy doesnot cause for pre-term birth

Exercise during pregnancy doesnot cause for pre-term birth
Story first published: Wednesday, July 13, 2016, 17:52 [IST]
Desktop Bottom Promotion