For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் நீண்ட நாட்கள் இளமை தக்க வைக்கப்படுமாம் - ஆய்வில் தகவல்!

By Super
|

அதிக பிள்ளைகளைப் பெற்ற பெண்ணுக்கு உடலில் வயதாகும் மாற்றம் தெரிய தாமதமாகும் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒரு பெண் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பி, அதன் படி நடந்தால் அவளின் உடல் மெதுவாக வயதாகும் என அந்த ஆய்வு கூறுகிறது.

அதிக குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு நீண்ட 'டெலோமெரெஸ்' இருக்கக்கூடும் என இந்த ஆய்வு கண்டுப்பிடித்துள்ளது. சரி, டெலோமெரெஸ் என்றால் என்ன? இவைகள் டி.என்.ஏ. இழைகள் ஆகும். இது தான் வயதாகும் செயல்முறையை குறிக்கும். நீண்ட நுனிகள் நீண்ட ஆயுளைக் குறிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்விற்கு எச்சில் மாதிரி

ஆய்விற்கு எச்சில் மாதிரி

75 தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை மதிப்பீடு செய்த பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, பங்கு பெற்றவர்கள் அனைவரின் எச்சில் மாதிரியும் ஆராய்ச்சியாளர்களால் வாங்கிக் கொள்ளப்பட்டது.

மெதுவான டெலோமெரெஸ் சுருக்கம்

மெதுவான டெலோமெரெஸ் சுருக்கம்

முன்னதாக, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் சீக்கிரமாக வயதாகும் என ஆராய்ச்சியாளர்கள் நினைத்து வந்தனர். ஆனால் தற்போதைய ஆய்வு அந்த கருத்துக்கு முரண்பாடாக அமைந்துள்ளது. அதிக குழந்தைகளை பெற்றெடுத்துள்ள தாய்மார்களுக்கு, குறைந்த வேகத்தில் டெலோமெரெஸ் சுருக்கப்பட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிற காரணிகள்

பிற காரணிகள்

சுற்றுப்புற சூழலும் பிற காரணிகளும் கூட வயதாகும் வீதத்திலும், இந்த ஆய்வில் கலந்து கொண்ட தாய்மார்களின் இனப்பெருக்க வீதத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அதிக குழந்தைகள் சாத்தியமில்லை

அதிக குழந்தைகள் சாத்தியமில்லை

அதிக குழந்தை பெற்றுக்கொள்வது வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும் என இந்த ஆய்வு கூறினாலும் கூட, பெரும்பாலான தம்பதிகளுக்கு நடைமுறையில் பல குழந்தைகள் பெற்றுக்கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. அதற்கு காரணம், ஆதாரமின்மை, நேரமின்மை மற்றும் இன்னும் பல காரணிகள்.

மேலும் பல நாடுகளில் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போவதால், பலர் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளவோ அல்லது அதனை பரிந்துரைக்கவோ விரும்பமாட்டார்கள்.

சுவாரஸ்யமான ஆய்வு

சுவாரஸ்யமான ஆய்வு

சொல்லப்போனால், தற்போதைய காலத்தில் ஒரு குழந்தைக்கு மேலே பெற்றுக் கொள்வதே நல்லதல்ல! ஆனாலும் கூட வயதாகும் செயல்முறை குறைக்கப்படுவதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதால், இது சுவாரசியமான ஆய்வாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Having More Kids Keep You Young?

Having more than one kid nowadays isnt even a practical idea, but researchers say it slows down your ageing.
Desktop Bottom Promotion