For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையிலேயே தக்காளி விந்தணு உற்பத்தியையும், அதன் தரத்தையும் அதிகரிக்குமா?

By Maha
|

அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் புற்றுநோய் செல்களை அழிக்கும் அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எல்லாம் உள்ளது.

விந்தணு பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான 8 விஷயங்கள்!

இத்தகைய தக்காளி இன்றைய ஆண்கள் அதிகம் வருத்தப்படும் விந்தணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமாக அதில் உள்ள லைகோபைன் என்னும் உட்பொருள் தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும் 10 விஷயங்கள்!!!

சரி, இப்போது உண்மையிலேயே தக்காளி விந்தணு உற்பத்தியையும், அதன் தரத்தையும் அதிகரிக்குமா என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

சமீபத்திய ஆய்வில், தக்காளில் உள்ள லைகோபைன் என்னும் நிறமிப் பொருள், ஆண்களுக்கு 70 சதவீதம் விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறதாக தெரிய வந்துள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆண்கள் இந்த தக்காளியை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், தக்காளியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏதும் நேராமல், அதன் தரம் அதிகரிப்பதாக, அதே ஆய்வில் தெரிய வந்தது.

லைகோபைன்

லைகோபைன்

மேலும் தக்காளில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், விந்தணுவின் தரத்தை அதிகரிப்பதோடு, டிஎன்ஏ பாதிக்கப்படுவதைக் குறைத்து, முதிர்ச்சியான விந்து செல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒரு ஆணின் இனப்பெருக்க சக்தியை அதிகரிப்பதாகவும், அந்த ஆய்வு கூறுகிறது.

ஆண் இனப்பெருக்க பிரச்சனை

ஆண் இனப்பெருக்க பிரச்சனை

இன்றைய ஆண்கள் இனப்பெருக்க பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். இதனால் தன் துணைக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த தக்காளியை அன்றாடம் உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள லைகோபைன், ஆண் இனப்பெருக்க பிரச்சனைகளைத் தடுத்து, விந்தணுவின் எண்ணிக்கையையும், தரமும் அதிகரிக்கும்.

இதயத்திற்கு நல்லது

இதயத்திற்கு நல்லது

தக்காளி ஆண் இனப்பெருக்க மண்டலத்திற்கு மட்டும் நல்லதல்ல, இதயத்திற்கும் நல்லது. குறிப்பாக ஆண்களுக்கு தான் இதய பிரச்சனைகள் வேகமாக வருகிறது. ஆகவே ஆண்கள் தக்காளியை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், இதய நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்கள் தக்காளியை தினமும் உட்கொண்டு வந்தால், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் 20 சதவீதம் குறைவதாக, இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Tomatoes Benefit The Quality Of Sperm

Gentlemen, do you want to increase the quality and the quantity of your sperm? Well, here is what tomatoes can do for you. Take a look at this health tip.
Desktop Bottom Promotion