வெளிப்படையாக யாரும் கூறாத பிரசவத்தின் போது சந்திக்கும் கஷ்டங்கள்!!!

By:
Subscribe to Boldsky

எந்த ஒரு தாயைக் கேட்டாலும், பிரசவம் என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்று சொல்வார்கள். மேலும் பிரசவ காலத்தின் போது சொல்ல முடியாத அளவில் வலியை உணரக்கூடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பிரசவம் எளிமையாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய யோகாசனங்கள்!!

அதனால் தான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல் என்று சொல்கிறார்கள். ஆனால் அக்காலத்தில் வெளியே சொல்ல முடியாத அளவிலான சில கஷ்டங்களையும் சந்திக்கக்கூடும். இதை பிரசவித்த எந்த ஒரு பெண்ணும் வெளியே சொல்லமாட்டார்கள்.

பிரசவத்திற்கு பின் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

கடுமையான வலியைத் தவிர வேறு என்ன கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று கேட்கிறீர்களா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு வெளிப்படையாக யாரும் கூறாத பிரசவத்தின் போது சந்திக்கும் விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மலம் கழிக்கக்கூடும்

ஆம், பிரசவத்தின் போது குழந்தையை வெளியே தள்ளும் போது, அந்த அழுத்தத்தில் குடல்கள் இறுக்கப்பட்டு, அதனால் மலம் கழிக்கக்கூடும். மேலும் இது பொதுவாக அனைத்து பெண்களும் சந்திக்கும் ஓன்று தான்.

இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம்

பிரசவ வலி ஏற்படும் காலத்தில், சில பெண்களுக்கு கடுமையான வலியால் இரத்த அழுத்தத்தில் மிகுதியான ஏற்ற இறக்கம் ஏற்படும். எனவே தான் கர்ப்ப காலத்தில் பெண்களை அதிக அளவில் உணர்ச்சிவசப் பட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு முறை மருத்துவரை காணச் செல்லும் போதும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, சீராக பராமரிக்க சொல்கின்றனர்.

சிறுநீர் கழிக்க நேரிடும்

பிரசவ அறையில் மலம் கழிப்பதோடு, சில பெண்கள் சிறுநீரையும் வெளியேற்ற நேரிடும். இதுவும் பிரசவம் குறித்து வெளியே யாரும் கூறாத விஷயங்களுள் ஒன்று.

வாய்வு வெளியேற்றம்

மற்றொரு முக்கியமான விஷயம், பிரசவத்தின் போது வாய்வு வெளியேற்றவும் நேரிடும். சில பெண்கள் எபிடியூரல் கொடுத்த உடனேயே இந்த பிரச்சனையை சந்திப்பார்கள்.

நஞ்சுக்கொடி வெளியேற்றம்

நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடப்பை தான் குழந்தைக்கு பாதுகாப்பை வழங்குவது. இந்த பனிக்குடப்பையானது குழந்தை வெளியே வந்த பின்னர், வெளியே வந்துவிடும். இதில் உள்ள ஓர் கஷ்டம் என்னவெனில், குழந்தை வெளியே வந்த பின்னர், நஞ்சுக்கொடி வெளியே வர சிலருக்கு உடனே வரும் அல்லது 1/2 மணிநேரம் கூட எடுக்கும். இந்த நஞ்சுக்கொடி வெளியே வரும் வரை கடுமையான வலியை பெண்கள் சந்திக்கக்கூடும்.

குமட்டல்

சில பெண்களுக்கு பிரசவ வலியின் போது வயிற்றில் உள்ள உணவுகளினால் அசௌகரியத்தை உணர்வதோடு, அதனால் குமட்டல் மற்றும் வாந்தியை எடுக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Things That Happen To You While Giving Birth

While giving birth, there seems to be no form of control over the body. Here are 6 things that happens to almost every woman during child birth.
Story first published: Monday, July 27, 2015, 17:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter