For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!

By Ashok CR
|

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் கர்ப்பத்தை தாமதம் அல்லது குழந்தையை ஒத்தி போடுவதற்கான மிகவும் சிறந்த மற்றும் எளிதான வழியாக கருதப்படுகிறது. எனினும் அதில் எப்போதும் ஒரு கவலை இருப்பதுண்டு. பல பெண்கள் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நிறைய தவறான எண்ணங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

கருத்தடையும், கருத்தடை சாதனங்களும்...

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்துப் பார்த்து, உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த ஒரு மருத்துவ ஆலோசனையுமின்றி எவரும் எடுத்துக் கொள்ளலாம்

எந்த ஒரு மருத்துவ ஆலோசனையுமின்றி எவரும் எடுத்துக் கொள்ளலாம்

இது ஓரளவிற்கு உண்மை. எந்த ஒரு உடல்நல பிரச்சனைகளும் இல்லாத பெண்கள், தாங்களாகவே இதனை எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை தொடர்புடைய நோய்கள் அல்லது தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

இரத்தம் உறைதல் பிரச்சனைகள், கல்லீரல் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மருத்துவரின் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதார பிரச்சனை உள்ள பெண்கள், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் போது பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் எடையை இழக்க அல்லது அதிகரிக்க செய்யும்

உடல் எடையை இழக்க அல்லது அதிகரிக்க செய்யும்

பெரும்பாலான பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் கொண்டுள்ளன. ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது நீர் தேக்கம், அதாவது எடை அதிகரிக்கும். நவீன மாத்திரைகளில் குறைந்த அளவு ஹார்மோன் இருப்பதால், இது பக்க விளைவுகளிலிருந்து பெண்களை காக்கின்றது. ஆனால் சில பெண்களுக்கு ஓபிசிட்டி போன்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களால், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த சிறிய பிரச்சனைகளை மருத்துவர் உதவியுடன் சரியான டோஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம்.

கருவுறு திறனை பாதிக்கலாம்

கருவுறு திறனை பாதிக்கலாம்

ஹார்மோன்கள் குறைந்த அளவு கொண்ட மாத்திரைகளால் கூட ஒழுங்கற்ற ஹார்மோன் சமநிலையை மீட்க மற்றும் கருவுறு தன்மைக்கு உதவ முடியும். குழந்தைக்கு திட்டமிடும் போது குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாதங்கள் வரை மாத்திரைகளை நிறுத்திய பின்னரே கருவுற்றதை தீர்மானிக்க முடியும். மாத்திரைகளை நிறுத்திய பின் மீண்டும் கருவுற 6 மாதங்கள் வரை கூட ஆகலாம்.

பக்க விளைவுகள் ஏற்படலாம்

பக்க விளைவுகள் ஏற்படலாம்

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகளால் உண்டாகும் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் வீக்கம், உடல் எடை அதிகரிப்பது, குமட்டல், தலைவலி மற்றும் மன இறுக்கம் ஆகும். எனினும் இவை தற்காலிக மாற்றங்களே என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். புதிய பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறைந்த அளவே ஹார்மோன்களைக் கொண்டிருப்பதால், இவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. புதிய மாத்திரைகளை விட பழையவற்றில் இந்த பக்க விளைவுகள் பொதுவானதாக இருந்தது.

மேலும், சந்தையில் தற்போது பல்வேறு வகையான மாத்திரைகள் உள்ளன. பக்க விளைவுகள் நீண்ட நாள் நீடிக்கும் என்றால் இது குறித்து ஒரு மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். டோஸில் செய்யப்படும் மாற்றத்தால் ஒருவர் அறிகுறிகளை உணர முடியும். பொதுவான சூழ்நிலையில் ஒருவர் பிறப்பு கட்டுப்பாடு மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்த 3 மாதங்களுக்குப் பின்னரே அறிகுறிகளை உணர முடியும்.

மாதவிடாயை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்

மாதவிடாயை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்

இதனை ஆதரிக்க குறைந்த ஆதாரமே உள்ளது. ஆனால் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் சுழற்சியை பாதிக்கும். மறுபக்கம் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் முன்னர் இருந்த ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்து வழக்கமான மாதவிடாய் சுழற்சியை தொடங்க செய்யலாம். உங்கள் பாதுகாப்பிற்காக, பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது, சுழற்சி காலங்களில் மாறுதல் ஏற்படுமானால், மருத்துவரிடம் பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Myths And Facts About Birth Control Pills You Ought To Know!

Birth control pills are thought to be the most effective and convenient way to delay or postpone a pregnancy. However, there is always some anxiety attached to the same. Many women harbour a lot of misconceptions regarding birth control pills. Here we shed some light on some of the most frequently asked questions about birth control pills:
Story first published: Thursday, July 23, 2015, 16:31 [IST]
Desktop Bottom Promotion