For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போட்டு, பிறகு அவதிப்பட வேண்டாம்!!!

|

இந்த காலத்து புதுமண தம்பதிகள் பெரும்பாலும் திருமணம் ஆன மறுவருடமே குழந்தை பெற்றுக் கொள்வதில் உடன்படுவது இல்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தொழில் முறை முன்னேற்றம், பொருளாதாரம், இல்லற மகிழ்ச்சி போன்றவை தடைபட்டு விடுமோ என்ற அச்சம் இவர்கள் மத்தியில் இருக்கிறது.

இதுவெல்லாம் பார்க்கும் இவர்கள் 25 - 26-ல் தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். இதன் பிறகு இரண்டு மூன்றாண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது தவறு, முப்பது வயதை கடக்கும் போது பெண்களுக்கு கருவின் திறனில் மெல்ல மெல்ல சக்தி குறையும் வாய்ப்பிருக்கிறது.

அதிலும் இந்த காலத்தில் நாம் உட்கொள்ளும் ஃபாஸ்ட் புட் மற்றும் பதபடுத்தப்பட்ட உணவுகள் எல்லாம் நமது ஆரோக்கியத்தை அரித்து விடுகின்றன. எனவே, இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தயவு செய்து தள்ளிப் போட வேண்டாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொழில் மேன்மை

தொழில் மேன்மை

நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் மேன்மை அடையும் வரை குழந்தை வேண்டாம் என கருத்தரிப்பதை தள்ளி போட வேண்டாம். ஏனெனில், நாளை உங்களிடம் பணம் சேரலாம் ஆனால், இழந்த வயதோ, கருத்தரிக்க தேவையான உடல் வலுவோ இழக்க நேரிடும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

வாழ்க்கையில் பொருளாதார அளவில் உயர்ந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தை பிறந்தால் செலவு இருக்க தான் செய்யும். அதற்காக இதை தள்ளி போட வேண்டாம். முப்பதுக்கு மேல் பிள்ளை பெற்றுக்கொள்வது பெண்ணுக்கு உடல் ரீதியாக சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உறவில் பாசம் குறைவு

உறவில் பாசம் குறைவு

சிலர் கொஞ்ச நாட்கள் கணவன் மனைவியாக சந்தோசமாக இருந்துவிட்டு பிறகு தாய், தந்தையாக ஆகலாம் என்று எண்ணுகிறார்கள். உண்மையில், கணவன் மனைவி என்ற உறவை விட, தாய், தந்தை எனும் உறவில் தான் மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது.

பெண்களின் உடல் நிலை

பெண்களின் உடல் நிலை

ஒருவேளை பெண்களின் உடல்நிலையில் அல்லது உடல் சக்தியில் குறைவு என்ற பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடலாம். ஆனால், வேறு காரணங்கள் கொண்டு தள்ளி போடுவது பின்னாட்களில் பெண்களுக்கு பிரச்சனையாக தான் முடியும்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

சிலர் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முதிர்ச்சி இல்லை, வளர்க்க தெரியாது என்றெல்லாம் கூறுவது உண்டு. உண்மையில் இங்கு யாருமே குழந்தையை வளர்க்க கற்றுக் கொண்டு பெற்றுக் கொள்வது இல்லை. இது போன்ற சாக்குப்போக்கு கூறுவது முதலில் நீங்கள் சந்தோசமாக இருக்க உதவலாம், ஆனால் காலம் கடத்திய பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரும் போது தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் தான் மிஞ்சும்.

உடல்நல குறைபாடுகள்

உடல்நல குறைபாடுகள்

கரு மற்றும் விந்து சக்தி குறைபாடு, குழந்தையின் உடல்நலனில் குறைபாடு ஏற்படுதல், பிரசவிக்கும் அளவு உடலில் சக்தியின்மை என கருத்தரிப்பதை நீங்கள் தள்ளி போடும் போது பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Not Postpone Pregnancy For These Reasons

Do Not Postpone Pregnancy For These Reasons? Read here.
Desktop Bottom Promotion