Just In
- 8 min ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 48 min ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 2 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 5 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாய்பால் தருவதில் தான் குழந்தைகளின் எதிர்கால உடல்நிலை பாதுகாப்பு இருக்கிறது!!
அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இன்றைய மாடர்ன் மங்கைகள் தாய்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். இன்றைய குழந்தைகளின் உடல்நலம் குன்றி போவதற்கு இதுவே முக்கிய காரணம். இதை எடுத்துரைக்கவே நமது நாட்டில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முழுக்க வருடா வருடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?
இன்றைய இளம் தாய்மார்கள் மருத்துவமனைக்கு பணம் தரக் கூட தயாராக இருக்கிறார்கள். ஆனால், ஏனோ தாங்கள் பெற்ற குழந்தைக்கு தாய்பால் தருவது எனில் மனம் சுருங்கி போய் விடுகின்றனர். உங்களது குழந்தையின் எதிர்கால உடல்நலத்திற்கு நீங்கள் இன்று தரும் தாய்பால் மிக முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் வயிற்று வலி குறைய சிறந்த பயனளிக்கும் சமையலறைப் பொருள்கள்!!!
இதய நோய் பாதிப்புகள் குறைவு
தாய்பால் நிறைய பருகிய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாம். தாய்பாலில் இருக்கும் நல்ல கொழுப்பு இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்குமாம். இதயத்திற்கு வலு சேர்க்குமாம்.
பற்களின் நலன்
குழந்தைகளின் பற்களின் நலத்தை அதிகரிக்கவும் தாய்பால் உதவுகிறது. போதுமான அளவு தாய்பால் குடித்த குழந்தைகளுக்கு பல் சார்ந்த பிரச்சனைகள் பெரிதாய் ஏற்படாதாம்.
டைப் 1 நீரிழிவு
போதிய அளவு தாய்பால் பருகாத குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம். தாய்பாலின் மூலமாக தான் குழந்தைகளுக்கு தேவையான இன்சுலின் கிடைக்கிறதாம்.
ஒவ்வாமைகள் ஏற்படாது
குறைந்தது ஒன்றரை வயது வரை தாய்பால் பருகும் குழந்தைகளுக்கு நோய் தொற்று, ஒவ்வாமைகள் போன்ற பிரச்சனைகள் அவ்வளவாக அண்டாதாம். தாய்பாலில் இருக்கும் அன்டி-பாடீஸ் குழந்தைகளை ஒவ்வாமை தாக்காமல் தடுக்கிறதாம்.
ஐ.க்யூ அதிகம்
போதுமான அளவு தாய்பால் பருகும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ அளவு அதிகமாக காணப்படுகிறது என்றும், இவர்களது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் மற்றவர்களோடு ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறதாம்.
எலும்பின் வலுமை
தாய்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு எலும்பின் வலுமை அதிகரிக்கிறது.
உடல்பருமன்
குழந்தை பருவத்தில் குறைவாக தாய்பால் பருகிய குழந்தைகளுக்கு தான் அதிகம் உடல்பருமன் அதிகரிக்கிறதாம். தாய்பால், குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் பெரும் பங்குவகிக்கிறது.