For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவினால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கும் சில வழிகள்!!!

By Maha
|

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முழுமையடைவது தந்தை என்னும் ஸ்தானத்தை அடைந்த பின்னர் தான். ஆனால் அத்தகைய தந்தை, தாய் ஸ்தானத்தை இக்கால தம்பதிகள் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம், மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் பருகுவது போன்றவை தான். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் மலட்டுத்தன்மையானது ஏற்படுகின்றது.

மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றிலும், மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு நீரிழிவு முக்கிய பங்கினை வகிக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நீரிழிவானது ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இப்படி நீரிழிவானது ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்துவது என்பது முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் வைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆண்களின் மலட்டுத் தன்மையை சரிசெய்யும் காய்கறிகள்!!!

அதிலும் நீரிழிவு இருக்கும் போது, சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் அழகான குழந்தைக்கு தந்தை ஆக முடியும். ஆகவே நீரிழிவு இருக்கும் ஆண்கள் தந்தை ஆக ஆசைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றினால், நிச்சயம் நீரிழிவினால் மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்

விந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றினால், தந்தை ஆக முடியும்.

அதிகப்படியான வெப்பநிலையை தவிர்க்கவும்

அதிகப்படியான வெப்பநிலையை தவிர்க்கவும்

நீரிழிவு இருக்கும் போது விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவாக இருக்கும். இந்நிலையில் அதிகப்படியான வெப்பநிலையில் இருந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே உயர் வெப்பநிலையில் இருப்பதை தவிர்க்கவும்.

வெளிப்படையாக பேசவும்

வெளிப்படையாக பேசவும்

பொதுவாக நீரிழிவு இருந்தால், பாலுணர்ச்சி சற்று குறைவாக இருக்கும். அப்படி குறைவாக இருக்கும் போது, அதைப் பற்றி துணையிடம் வெளிப்படையாக பேசியோ அல்லது சரியான கவுன்சலரை சந்தித்து பேசியோ, அதற்கேற்றவாறு பின் நடப்பது நல்ல தீர்வைத் தரும்.

சோர்வை போக்கவும்

சோர்வை போக்கவும்

நீரிழிவு இருந்தால், அதிகப்படியான சோர்வு ஏற்படும். அப்படி சோர்வு ஏற்படும் போது, சோர்வாகவே உட்காராமல், அப்போது சற்று சுறுசுறுப்புடன் இருக்குமாறான செயல்களில் ஈடுபட வேன்டும். இதுவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யுங்கள்

ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யுங்கள்

கணையத்தில் இருந்து சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் தான் இன்சுலின். இத்தகைய இன்சுலினானது நீரிழிவின் போது குறைவாக இருக்கும். இதனால் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள ஹார்மோன்களின் அளவும் குறைய ஆரம்பிக்கும். எனவே இன்சுலின் அளவை சீராக வைக்க, சரியான மருத்துவத்தை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நீரிழிவு இருந்தால், உடல் பருமனடையும். இப்படி உடல் பருமனடைந்தால், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும். எனவே உடல் பருமனடையாமல் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் மலட்டுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மருத்துவ உதவியும் அவசியம்

மருத்துவ உதவியும் அவசியம்

நீரிழிவினால் நரம்புகள் கூட பாதிக்கப்படக்கூடும். அதாவது நரம்புகள் பாதிப்படைந்தால், முன்னோக்கி செல்லும் விந்தணுவானது தடைபட்டு, அது சிறுநீர்ப்பையை வந்தடையயும். எனவே அவ்வப்போது மருத்துவரை சந்தித்து போதிய ஆலோசனைகளைப் பெற்று, அதனை எப்படி தவிர்ப்பது என்று கேட்டு தெரிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள்

நீரிழிவு இருந்தால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதுடன், ப்ரீ ராடிக்கல்களின் அளவையும் அதிகரித்து, இறுதியில் மரபணு பாதிப்பு மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள உட்கொண்டால், அது ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைக்கும்.

துணைவரை புரிந்து கொள்ளவும்

துணைவரை புரிந்து கொள்ளவும்

நீரிழிவு உள்ள ஆண்கள் தங்களது விறைப்புத்தன்மையை பராமரிப்பது என்பது கடினம். எனவே இதைப் பற்றி துணையிடம் நன்கு மனம் விட்டு பேசிக் கொண்டால், அவர்களால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்ய முடியும். மேலும் இதனால் இருவருக்குள்ளும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Male Fertility: Precautions For Diabetic Men

The connections between male fertility and diabetes are just coming to light. Diabetic patients should take extra care to keep their blood sugar levels normal before trying for a baby. Here, we may discuss the precautions that have to be taken to avoid the effects of diabetes on male fertility.
Desktop Bottom Promotion