For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்!!!

By Ashok CR
|

தாய்மை என்ற சொல் மிகவும் புனிதமானதாகும். ஒவ்வொரு பெண்ணும் தாயாவதற்கு தவம் இருப்பாள். அதுவும் முதல் கர்ப்பம் என்றால் கேட்கவே வேண்டாம். நீங்கள் கர்ப்பாமாக இருக்கும் நல்ல செய்தியை அனைவரிடமும் சொல்லி விட்டீர்களா? அப்படியானால் அவர்களிடம் இருந்து முடிவில்லா அறிவுரைகளை இந்நேரத்திற்கு வர தொடங்கியிருக்கும் அல்லவா?

முதல் கர்ப்பம் என்றால் பயம் கலந்த சந்தோஷ உணர்வை பெறுவீர்கள். நீங்கள் எவ்வளவு தான் தயாராக இருந்தாலும் கூட, நீங்கள் அறியாதது சில வகைகள் நடக்கலாம். இங்கு தாய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயத்தின் கனவுகள்

பயத்தின் கனவுகள்

இந்த உலகத்தில் பாதுகாப்பு என எதுவும் இல்லை. உங்கள் குழந்தையை பெற்றெடுத்தவுடன், ஏதோ தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை போன்ற உணர்வை பெறுவீர்கள். உங்கள் குழந்தையை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் தூக்க முற்படும் போது, உங்கள் நினைவுக்கு வருவது அவர்கள் கையில் உள்ள கிருமிகளே. புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் செல்லும் போதும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைக்கு மத்தியில் செல்லும் போது நெஞ்சு படபடக்கும். விளையாட்டு பொருட்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள் ஆகியவற்றை பற்றி மணிக்கணக்கில் நினைத்து கவலைப்படுவீர்கள். இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்றாலும் கூட அதற்காக இவைகளை எண்ணி பித்து பிடிக்காமல் இருங்கள். உங்கள் குழந்தைகளை அனைத்து விஷயத்தில் இருந்தும் பாதுகாக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு அமுது காணுங்கள்.

கவனிப்புகள் திசை மாறும்

கவனிப்புகள் திசை மாறும்

கர்ப்பமாக இருக்கிற அந்த ஒன்பது மாதங்களும் உங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மிகவும் விசேஷமாக கவனித்து கொள்வார்கள். உங்களுக்கு அது பழகியும் போயிருக்கும். உங்கள் உடல் நலத்தைப் பற்றி எப்போதும் விசாரிப்பார்கள். உங்களை பார்க்க வரும் போது உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வருவார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் உங்கள் மீதிருந்த கவனம் திசை மாறும் என யாரும் உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் அது தான் உண்மை. குழந்தைக்கு பாலூட்டி, உடை மாற்றி அதனை உறங்க வைப்பதே இப்போது உங்கள் வேலையாகி விடும். இப்போது கவனிப்பும், பரிசுப் பொருட்கள் அனைத்தும் குழந்தைக்கே வந்து சேரும். இனிமேல் உங்களுக்கு இரண்டாவது இடம் தான்: சந்திக்க தயாராக இருங்கள்; எப்போதுமே!

தாய்ப்பால் கொடுப்பது கஷ்டமானது

தாய்ப்பால் கொடுப்பது கஷ்டமானது

தாய்ப்பால் சுரப்பது இயற்கையானது என்பதால் தாய்ப்பால் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் தாய்மை காலத்தில் கடினமான வேலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. குழந்தை சரியாக வாயை கொடுக்காமல் போகலாம், உங்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் போகலாம், காம்புகளில் புண் ஏற்படலாம், பால் வருவதில் அடைப்பு ஏற்படலாம் அல்லது மார்பகங்களில் அழற்சி ஏற்படலாம். இதெல்லாம் போக, ஹார்மோன் மாற்றங்களால் தூக்கமின்மை ஏற்பட்டு உங்களுக்கு குற்ற உணர்வும் உண்டாகும்.

மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியை நாடி, இந்த நுட்பத்தை பற்றி புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு நீங்கள் ஒரு சிறந்த தாயாக இருக்க முடியவில்லை என வருந்தாதீர்கள். உங்கள் உணவு பழக்கத்தின் மீது கவனம் தேவை. அதே போல் போதுமான அளவிலான தண்ணீரை குடியுங்கள். போதுமான அளவில் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட அதற்காக வருத்தப்படாதீர்கள்.

சிறு மேடு கூட மலையாகும்

சிறு மேடு கூட மலையாகும்

தாய்மை அடைவதற்கு முன்னாள் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட்டிருப்பீர்கள். ஆனால் டையப்பர் அணியும் சிறுவண்டு வந்தவுடன், என்ன ப்ராண்ட் சோப்பு வாங்க வேண்டும் என்பதில் கூட குழப்பம் ஏற்படும். சீக்கிரமே சோர்வடைவீர்கள். குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சின்ன சின்ன விஷயங்களில் கூட பதற்றம் ஏற்படும். முடிந்தவரை கூட இருப்பவர்களின் உதவியை பெற்றிடுங்கள்.

போட்டி மனப்பான்மை வந்துவிடும்

போட்டி மனப்பான்மை வந்துவிடும்

நம் குழந்தை தனித்துவம் வாய்ந்த, முழுமையான குழந்தையாக வளரவே நாம் விரும்புவோம். இந்த மனப்பான்மை இருப்பதால், போட்டி மனப்பான்மையும் உங்களுக்குள் வந்து விடும். புதிய பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியே பேசுவார்கள். இது ஒருவித தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடும். குழந்தை எட்ட வேண்டிய வளர்ச்சியை கால காலத்தில் அடையவில்லை என்றால் இந்த பயம் ஏற்பட தான் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Hidden truths about motherhood

First pregnancies are a mixture of excitement and sheer panic. No matter how much you prepare, some things will catch you unawares.
 
Story first published: Saturday, July 26, 2014, 17:40 [IST]
Desktop Bottom Promotion