For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏன் ஃபோலிக் அமிலம் வேண்டும்?

By Super
|

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் மாதிரி. அப்படி அந்த மறு ஜென்மத்தை பெற. அவர்கள் ஆரோக்கியமான வாழ்வு முறையை பின்பற்றி, ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அது தாய் மற்றும் சேய் என இருவருக்கும் நல்லது. நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? அல்லது கருவை சுமக்க திட்டம் உள்ளதா? அப்படியானால் உங்கள் மருத்துவர் அல்லது உங்கள் நலன் விரும்பிகள், உங்களின் ஃபோலிக் அமில உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதை கேட்டிருப்போம். அது ஏன் என்று கேட்டிருக்கிறீர்களா?

ஆனால் நாங்கள் கேட்டோம். இதோ சர்வதேச அங்கீகாரம் பெற்ற கர்ப்பம், லாக்டேஷன் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து ஆலோசகராக விளங்கும் சோனாலி ஷிவ்லனியிடம் எங்களுக்கு கிடைத்த தகவல்கள். ஃபோலிக் அமிலம் என்பது பி வகை வைட்டமின்களை சேர்ந்ததாகும். முக்கியமாக பி9 வகையை சேர்ந்ததாகும். இயற்கையிலேயே அது நம் உடம்பில் உள்ளது. அதன் இயற்கை வடிவத்தை தான் ஃபோலேட் என்று அழைப்பார்கள். இப்போது எதற்கு அந்த ஃபோலிக் அமிலத்தை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தையின் வளர்ச்சி அதை நம்பி தான் உள்ளது

குழந்தையின் வளர்ச்சி அதை நம்பி தான் உள்ளது

கர்ப்ப காலத்தின் போது, குழந்தையின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். தாயின் உடலில் ஃபோலேட்டின் குறைபாடு இருந்தால், அது தாய்க்கு சிக்கலை ஏற்படுத்தி, குழந்தைக்கு குறைபாடுகளை உண்டாக்கும். இது கரு உண்டாகவும் சரி, பிரசவத்தின் ஆரம்ப காலத்திலும் சரி, ஃபோலேட் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு காரணம் இந்த காலத்தில் தான் சேய்யின் முதுகெலும்பும், நரம்பு அணுக்களும் வளர்ச்சி அடையும். அதனால் சரியான அளவில் ஃபோலேட் கிடைக்கவில்லை என்றால் நரம்பியக்குழல் குறைபாடுகள் அல்லது ஒழுங்கற்ற முதுகெலும்பு வளர்ச்சி (ஸ்பைனா பிஃபிடா) ஆகிய பிரச்சனை ஏற்பட்டு, குழந்தையை அது வாழ்க்கை முழுவதும் பாதிக்கும். பல பெண்களுக்கு தாங்கள் கர்ப்பமாக இருப்பது உடனே தெரிவதில்லை. அதனால் குழந்தை சுமக்கும் வயதை உடைய பெண்களும், குழந்தை பெற திட்டமிடும் பெண்களும் ஃபோலிக் அமிலம் அடங்கிய பொருட்களை உண்ண வேண்டும்.

தாய்க்கும் அது நன்மையை தரும்

தாய்க்கும் அது நன்மையை தரும்

இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு ஃபோலேட் உதவுவதால், இதனை உட்கொண்டால், சில வகை இரத்த சோகை ஏற்படமால் காக்கும். அதனால் அது தாய்க்கும் முக்கியமாக அமைகிறது. சரியான ஹீமோகுளோபின் கிடைப்பதால், கர்ப்பமான பெண்கள் கரு வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தை வாரி வழங்கலாம். இவை அனைத்தும் குழந்தைக்கு IUGR (கருப்பையகமான வளர்ச்சி மந்தமாகுதல்) வருவதை குறைக்கும். மேலும் கர்ப்ப நேரத்தில் தாய்க்கு ஏற்படும் அயர்ச்சி மற்றும் சோர்வை சரி செய்யவும் ஃபோலேட் அடங்கிய பொருட்கள் துணை புரியும்.

கருவுற நினைத்தாலே தேவையான உணவுகளை உண்ணுங்கள்

கருவுற நினைத்தாலே தேவையான உணவுகளை உண்ணுங்கள்

வரும் காலங்களில் கருவுற திட்டமிட்டால் மூன்று மாதத்திற்கு முன் கூட்டியே, அதற்கு தேவையான பொருட்களை உண்ணத் தொடங்குங்கள். கருவுற்ற பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு அதை தொடர வேண்டும்.

மருந்தும் உட்கொள்ளும் அளவு என்ன?

மருந்தும் உட்கொள்ளும் அளவு என்ன?

ஃபோலேட் அடங்கிய பொருட்களை வைட்டமின் பி12 அடங்கிய பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இது பி12 குறைபாட்டினால் ஏற்படும் நரம்பு பாதிப்பை தடுக்கும். அதற்காக உடனே இதை கேட்டு விட்டு நீங்களாகவே மருந்துகளை வாங்கி உண்ணாதீர்கள். மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே அனைத்து மருந்துகளையும் உண்ண வேண்டும். முக்கியமாக உட்கொள்ள வேண்டிய அளவையும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு காரணம், கர்ப்பமான பெண்கள் சாதாரண பெண்களை விட அதிக அளவில் உட்கொள்ள வேண்டி வரும். இதே 50 வயதை தாண்டியவர்களுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்படும்.

அளவுக்கு அதிகமான நல்லது உங்களுக்கு தீமையை விளைவிக்கலாம்

அளவுக்கு அதிகமான நல்லது உங்களுக்கு தீமையை விளைவிக்கலாம்

சரியில்லாத உடம்பை சரிசெய்ய மருந்துகள் உண்ணுவதை நேர்மறையான விளைவாக எடுத்துக் கொண்டாலும் கூட, சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியதை போல, ஃபோலேட் உடன் வேறு பொருளையும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நரம்பு பாதிப்பு ஏற்படும். இரத்த சர்க்கரை அளவு கீழிறங்குவது, தூக்க பிரச்சனை, சரும பிரச்சனைகள் மற்றும் திடீர் நோய்த் தாக்கம் போன்ற அறிகுறிகளையும் அது ஏற்படுத்தும். இதனை அதிக அளவில் உட்கொண்டால் மட்டுமே இந்த அறிகுறிகளை காணலாம். அதற்கு காரணம் ஃபோலிக் அமிலம் என்பது தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். அதனால் அது உடம்பில் தங்காமல் வெளியேறிவிடும். மேலும் இது உடலில் உள்ள நச்சுத் தன்மையையும் நீக்கிவிடும்.

எப்போது நிறுத்த வேண்டும்?

எப்போது நிறுத்த வேண்டும்?

கர்ப்பத்தை சுமக்கும் தாய்மார்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் போது, ஃபோலேட் உட்கொள்ளுதலை நிறுத்திக் கொள்ளலாம். கருவுற்று 12 வாரங்கள் கழிந்த பின், சில மருத்துவர்கள் இதனை நிறுத்தி விட சொல்வார்கள். சிலர் கர்ப்ப காலம் முழுவதும் அதனை உண்ண சொல்வார்கள்.

இயற்கை உணவிலேயே இவை உள்ளது

இயற்கை உணவிலேயே இவை உள்ளது

பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள், சூரியகாந்தி விதைகள், கடலை, முளைத்த பயறுகள், சோயா பீன்ஸ் மற்றும் ஈரல் போன்றவைகளில் இயற்கையாகவே ஃபோலேட் அடங்கியுள்ளது. ஆனால் இவைகளில் எதனை உண்ணலாம், எந்த அளவு எடுத்துக் கொள்ளலாம், எந்த முறையில் அவைகளை உண்ணலாம் என்றெல்லாம் ஒரு உணவியல் வல்லுநரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் என்பது தாய் மற்றும் சேய் என இருவருக்குமே மிகவும் சிக்கலான காலம் என்பதால், எந்தவித இடர்பாட்டையும் எடுக்காமல் மருத்துவரின் அறிவுரை படி நடந்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why women need folic acid during pregnancy

If you are pregnant or are planning to conceive, you must have heard your doctor or well-wishers tell you that you need to increase your folic acid intake. Ever asked why? Well, we did – and here are the answers we got from Sonali Shivlani, Internationally Certified Pregnancy, Lactation and Child Nutrition Counsellor. Folic acid is part of the B group of vitamins specifically, B9. It occurs naturally in our body, and the natural form is called folate.
Desktop Bottom Promotion