For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு உள்ளதா? உடனே இதைப் படிங்க!

By Super
|

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் (First Trimster) பெண்ணுறுப்பிலிருந்து இரத்தப்போக்கு வரும். இந்த இரத்தப்போக்கு சாதாரணமானது ஆகையால், இதனால் எந்தவித பாதிப்புகளும் கிடையாது. ஆனால், இதே இரத்தப்போக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் (Second and Third Trimsters) ஏற்பட்டால், அதனால் சில மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த இரத்தப்போக்கு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஏதாவது ஒரு தொற்றின் காரணமாகவோ, மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன் மாற்றங்களாலோ மற்றும் உடலுறவை முறையாக சரியாக செய்யாமலிருந்தாலோ பெண்ணுறுப்பிலிருந்து இரத்தப்போக்கு வரலாம்.

What Bleeding During Pregnancy Means?

கர்ப்ப காலத்தின் முதல் பாதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் பின்வரும் பிரச்சனைகள் வரலாம்.

1. கரு கலைந்து விடுதல் - இரத்தப்போக்கு கரு கலைந்து விட்டது என்பதற்கான அறிகுறியாக இருந்தாலும், அதனால் தான் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று பதற வேண்டாம். ஏனெனில், 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இரத்தப்போக்கு இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்களில் தோராயமாக 50 சதவீதம் பேருக்கு கரு கலைவதில்லை. ஆனாலும், எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருப்பது நல்லது.

2. இடம் மாறிய கர்ப்பங்கள் - கர்ப்பப் பைக்கு வெளியேயுள்ள ஏதாவதொரு இடத்தில் கரு உண்டாகி இருந்தால், அதனை இடம் மாறிய கர்ப்பம் (Ectopic Pregnancies) என்று சொல்வார்கள். பெரும்பாலான இடம் மாறிய கர்ப்ப சம்பவங்களுக்கு பொறுப்பாக ஃபெல்லோபியன் குழாய் உள்ளது. கரு கலைந்து விடுவதை விட சற்றே குறைவாக ஏற்படும் இந்த வகை கர்ப்பங்கள், 60-ல் 1 கர்ப்பங்களில் மட்டுமே ஏற்படுகின்றன.

3. மோலார் கர்ப்பங்கள் (Molar Pregnancies)- ஆரம்ப கால இரத்தப்போக்கினால் வரும் அரிய வகை பிரச்னையாக மோலார் கர்ப்பம் உள்ளது. பொதுவாகவே 'மச்சம்' என்று அழைக்கப்படும் இந்த வகைக கர்ப்பமானது கருவாக இல்லாமல், வழக்கத்திற்கு மாறாக வளர்ந்த திசுவாக இருக்கும். இது கெஸ்டேஷனல் ட்ராபோப்ளாஸ்டிக் நோய் (Gestational Trophoblastic Disease) என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் இரண்டாவது பாதியில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் பின்வரும் பிரச்சனைகள் வரலாம்.

1. தொப்புள்கொடி தகர்வு (Placental Abruption): பிரசவத்திற்கு முன்னரோ அல்லது பிரசவத்தின் போதே தொப்புள் கொடியானது கர்ப்பப் பையிலிருந்து பிரிந்து வந்ததன் காரணமாக பெண்ணுறுப்பிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படலாம். 1 சதவீதம் அளவுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே இந்த பிரச்னை ஏற்படும். மேலும், இது கர்ப்ப காலத்தின் கடைசி 12 வாரங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. பிளாசண்டா பிரிவியா (Placenta Previa): தொப்புள் கொடியானது கர்ப்பப் பைக்கு சற்று கீழாக இருந்தாலோ அல்லது கழுத்துப் பகுதியை முழுமையாக மூடியிருந்தாலோ பிளாசண்டா பிரிவியா பிரச்னை ஏற்படும். இது 200 இல் ஒரு கர்ப்பத்திற்கு மட்டுமே ஏற்படக் கூடிய பிரச்சனையாகும். இந்த பிரச்சனையின் போது, இரத்தப்போக்கு வலியில்லாததாக இருக்கும்.

3. குறைப்பிரசவம் (Preterm Labor): பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுவது பிரசவத்திற்கான அறிகுறியாகவும் இருக்கும். பிரசவம் ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே, மஸ்கஸ் பிளக் கடந்து விடும். பொதுவாகவே இது சிறிய அளவிலான மஸ்கஸ் மற்றும் இரத்தத்தினால் உருவாகும். அது முன்னரே நிகழ்ந்தால், நீங்கள் குறை பிரசவத்திற்கு தயாராகிறீர்கள் மற்றும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

இரத்தப்போக்கு ஆபத்தானதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருக்கலாம். உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால் அதனை கவனிக்க சில வழிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால், நீங்கள் எப்பொழுதும் ஃபேட் அல்லது உள்ளாடையை அணிய வேண்டும். அதன் மூலம் உங்களால் எவ்வளவு இரத்தப்போக் கு உங்களுக்கு ஏற்படுகிறது என்பதை அளவிட முடியும்.

2. உங்களுக்கு இரத்தப்போக்கு இருந்தால், நீங்கள் அதிர்ச்சியை தாங்கும் டாம்பன் அல்லது டௌச் போன்ற பொருட்களை அணிவதையோ அல்லது உடலுறவு கொள்ளவோ கூடாது.

3. இவை மட்டுமல்லாமல், மேலே கண்ட ஏதாவதொரு அறிகுறியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், அது சிக்கலாகி விட வாய்ப்புகள் உள்ளது. எனவே, நீங்கள் உடனடியாக உங்களுடைய மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

English summary

What Bleeding During Pregnancy Means?

During Pregnancy vaginal bleeding can occur frequently in the first trimester. This bleeding is normal and does not have any problems. But if the bleeding occurs in the second and third trimester of pregnancy, there might be chances of some serious complications. Bleeding can be caused by a number of reasons.
Desktop Bottom Promotion