For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைத் தடுக்கும் சிறப்பான வழிகள்!!!

By Ashok CR
|

இன்றைய கால கட்டத்தில் மலட்டுத்தன்மை என்பது பல பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனையாக மாறி வருகிறது. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அதனி தான் மலட்டுத் தன்மை என்று கூறுகிறோம். அதே போல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம். சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என்றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது. உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத்தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மையையும் உண்டாக்கி விடுகிறது.

மலட்டுத்தன்மை சிகிச்சைக்காக வருபவர்களில், இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது 40%-50% வரை பெண்கள் தான் என்று அமெரிக்காவை சேர்ந்த மயோ கிளினிக் தெரிவித்துள்ளது. இப்படி வரும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்சனைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் மற்றும் உடற்கூறமைப்பு ஊனங்கள். சில பேரை சிகிச்சை மூலமாக குணப்படுத்தி விட முடியும். ஆனால் சில பேரை குணப்படுத்த முடியாமல் போகும். மலட்டுத் தன்மை சிகிச்சை என்ற சிக்கலான உலகத்திற்குள் நுழையாமல் அதை ஏன் பெண்களான நீங்கள் தடுக்க கூடாது.

Ways To Prevent Infertility In Women

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க வேண்டுமானால் உங்களுக்குள்ள பிரச்சனைகளை பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமல் இருப்பதற்கான விடையை தேடிக் கொண்டிருந்தீர்களானால் சரியான இடத்திற்கு வந்து விட்டீர்கள். மலட்டுத் தன்மையை நீக்க உங்களுக்காக சில வழிமுறைகளை நாங்கள் விளக்கமாக கூறியுள்ளோம்:

உணவு

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பதப்பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக்கும். மலட்டுத்தன்மையை தடுக்க நற்பதமான காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மருத்துவ ஆலோசனை

உங்கள் கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர்க்கலாம்.

மருத்துவ தகுதி

மருத்துவ ரீதியாக உடல் தகுதியுடன் இருப்பது தான் பெண்களுக்கான மலட்டுத் தன்மையை தடுக்கும். சர்க்கரை நோய், தைராய்ட் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் சமமின்மை போன்ற மருத்துவ பிரச்சனைகள் உங்கள் கருவுறும் திறனை பாதிக்கும். இவைகளை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தி விட்டால் மலட்டுத் தன்மையை தவிர்க்கலாம்.

ஒழுக்கமான பழக்கவழக்கங்கள்

ஒழுக்கமான பழக்கங்கள் இல்லையென்றால் மலட்டுத்தன்மை ஏற்படுவதில் ஒன்றும் ஆச்சரியப்பட தேவையில்லை. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள், மது அருந்துவதை நிறுத்துங்கள், போதை வஸ்த்துகளையும் தொடாதீர்கள். ஒழுக்கமான பழக்க வழக்கங்கள் இருந்தால் தான் மலட்டுத் தன்மை ஏற்படாமல் தடுக்க முடியும்.

ஆரோக்கியமான உடல் எடை

பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும். பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமானதாகும்.

யோகா மற்றும் உடற்பயிற்சி

யோகாவும் உடற்பயிற்சியும் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்கும். அது உங்கள் உடலை ஆரோக்கியத்தோடு வைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்க யோகா மாயங்களை செய்கின்றன. அதே போல் ஆரோக்கியமான உடலை பெற உடற்பயிற்சி உதவி செய்கிறது.

வாழ்க்கை முறை

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்திட வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறி விடும். இது உங்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திலும் நேரடியாக தொடர்புடையவை. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.

English summary

Ways To Prevent Infertility In Women

Knowing the reason for your problem is very important to prevent infertility in women. If you are looking for an answer for how to prevent infertility in women, you can end your search here. Here are some effective ways that will help prevent infertility in women.
Story first published: Wednesday, December 11, 2013, 16:22 [IST]
Desktop Bottom Promotion