Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் டி உணவுகள்!!!

Posted by:
Published: Friday, January 18, 2013, 15:58 [IST]

இன்றைய காலத்தில் கருவுறுதல் பிரச்சனை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் உள்ளது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு குழந்தையை எளிதில் பெற்றுக் கொள்ள முடியாது. இதற்காக எத்தனையோ சிகிச்சைகள் இருப்பினும், சில சமயங்களில் அவற்றாலும் குணப்படுத்த முடியாத நிலை இருக்கும். இதற்கு காரணம், சிகிச்சை பெறும் போது, குழந்தையை பெறுவதற்கான சத்தானது உடலில் இருக்க வேண்டும். அதற்கு வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

வைட்டமின் டி என்னும் சத்தானது, உடலுக்கு தேவைப்படும் கரையக்கூடிய வைட்டமின்களாகும். இவை தான், நாம் எந்த ஒரு உணவை உண்டாலும், அதில் உள்ள சத்துக்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சரியாக இயக்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான பாலுணர்வு ஹார்மோன்களை தூண்டவும் பெரிதும் உதவுகிறது. எனவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனையை இயற்கையாகவே தவிர்த்து, அழகான குழந்தையை பெற்றெடுக்க முடியும். குறிப்பாக பெண்கள் இத்தகைய உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அந்த வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

காட் மீன் எண்ணெய் (Cod liver oil)

மீன் எண்ணெயின் வாசனை மற்றும் ருசி நன்றாகவே இருக்காது. இருப்பினும் அதில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட அதிகம் உள்ளது. அதிலும் ஒரு டேபிள் மீன் எண்ணெயில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெறலாம். ஆனால் எண்ணெயை குடிக்க முடியாது என்பதால், கடைகளில் விற்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.

சோயா பொருட்கள்

சோயா பொருட்களான டோஃபு மற்றும் சோயா பாலில் வைட்டமின் டி என்னும் சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

காளான்

காளான் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். ஆனால் அந்த காளானில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி5 சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் காளானை சமைத்து சாப்பிடும் போது முழுமையாக வேக வைக்காமல், அளவாக வேக வைத்து சாப்பிட்டால், பெண்கள் கருவுறுதலை அதிகரிக்கும்.

கடல் சிப்பி

கடல் உணவுகளில் கடல் சிப்பியும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளுள் ஒன்று. அதிலும் இதனை பெண்கள் சாப்பிட்டால், அவர்களது கருவுறுதலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கடல் சிப்பியில் ஜிங்க், செலினியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் உள்ளது.

மீன்

மீன்களில் சாலமன், டூனா மற்றும் கெளுத்தி போன்றவற்றில் வைட்டமின் டி மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட உள்ளது.

ஹெர்ரிங்

இதுவும் ஒரு வகையான கடல் மீன். இந்த கடல் மீனிலும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.

மத்தி மீன்

மத்தி மீனில் 33 சதவீதம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் கால்சியம் சத்து உள்ளது. இத்தகைய உணவில் வைட்டமின் டி மற்றும் இதர புரோட்டீன்களும் உள்ளன.

சலாமி மீன்

சலாமி, பன்றி தொடைக்கறி மற்றும் நறுமணமூட்டப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட கொத்துக்கறி போன்றவை அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய உணவுகளில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. ஆனால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சலாமிகளை வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் பாக்டீரியா அதிகம் இருக்கும். அத்தகையது உடலுக்கு ஆரோக்கியமற்றது.

முட்டை

முட்டையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டையை பெண்கள் சாப்பிடுவது நல்லது.

சூரிய வெளிச்சம்

சூரிய வெளிச்சம் உணவாக இல்லாவிட்டாலும், அவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. எனவே அவ்வப்போது அதிகாலை மற்றும் மாலை வேளையில் அடிக்கும் வெயில் உடலில் படும்படியாக நடந்து கொள்வது நல்லது. இதனால் கருவுறுதலை அதிகரிக்க முடியும்.

English summary
Vitamin D can boost your fertility and help you conceive easily. Check out the foods that are rich in vitamin D and known for boosting fertility of a woman.
Subscribe Newsletter