For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

By Maha
|

பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவ்வாறு கர்ப்பம் தரித்திருக்கும் போது, அதை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக எடுத்தவுடன் மருத்துவரிடம் சென்று பணத்தை செலவழித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, பெண்கள் தாங்களாகவே ஒருசில படிநிலைகளை செய்து, தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்கள் கருத்தரிப்பது போல் தெரிந்தால், உடனே அக்கம் பக்கத்தில் உள்ள தோழிகள், மாமியார் போன்றோரிடம் சொல்லிவிடுவார்கள். இந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட பின், மருத்துவர் இல்லை என்று சொன்னால், எவ்வளவு கஷ்டமாக இருக்கும். எனவே இத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்கு, பெண்கள் ஒருசில பரிசோதனை செயல்களை தாங்களே செய்து கொண்டு, முதலில் அதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பின் மருத்துவரிடம் சென்ற மற்ற சோதனை செய்யலாம்.

இப்போது பெண்கள் கர்ப்பமாக இருந்தால், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பதை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, நீங்கள் கர்ப்பமாக இருப்பது போல் தெரியும் போது செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் தவறுதல்

மாதவிடாய் தவறுதல்

கர்ப்பமாக இருந்தால் ஏற்படும் அறிகுறிகளில் முதன்மையானவை மாதவிடாய் சுழற்சி தவறுவது ஆகும். அதுவும் திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது நீண்ட நாட்கள் நடைபெறாவிட்டால், அது கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

மங்கலான கோடு

மங்கலான கோடு

மாதவிடாய் சுழற்சியானது தவறிவிட்டால், சுழற்சி ஏற்பட வேண்டிய நாளிலிருந்து, 7 நாட்களுக்குப் பின் டெஸ்ட்மீட்டரைக் கொண்டு, வீட்டிலேயே பரிசோதிக்கலாம். அப்போது ஏற்படும் கோடானது மங்கலாக தெரிந்தால், கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த இன்னும் சற்று நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அர்த்தம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அவ்வாறு காத்திருக்கும் போது, வாந்தி, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும். இவை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறி தான். ஆனால் உடனே உறுதிப்படுத்த வேண்டாம்.

இருண்ட கோடு

இருண்ட கோடு

மாதவிடாய் தவறிய இரண்டு வாரத்திற்கு பின், மீண்டும் டெஸ்ட்மீட்டர் கொண்டு பரிசோதித்தால், அப்போது நன்கு இருண்ட கோடு தெரிந்தால், மருத்துவரிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

மருத்துவரை அணுகுதல்

மருத்துவரை அணுகுதல்

மருத்துவரிடம் சென்று வீட்டில் செய்த சோதனை காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்கும் போது, அதைக் கொண்டே மருத்துவர்கள் முடிவு செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வேறு சில பரிசோதனைகளையும் செய்து தான் எதையும் உறுதியாக சொல்வார்கள்.

இரத்தப் போக்கு?

இரத்தப் போக்கு?

இந்த இடைபட்ட காலத்தில் லேசாக இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால், அதையும் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் இது கருச்சிதைவிற்கு வழிவகுப்பதாகவும் இருக்கும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது பல நேரங்களில் லேசான இரத்தப் போக்கு ஏற்படும்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

அனைத்து மருத்துவர்களும் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை செய்து, எச்.சி.ஜி ஹார்மோன்களின் அளவைப் பார்ப்பார்கள்.

இரத்தத்தில் உள்ள எச்.சி.ஜி அளவு

இரத்தத்தில் உள்ள எச்.சி.ஜி அளவு

சிறுநீர் பரிசோதனையில் மட்டுமின்றி, இரத்தப் பரிசோதனையிலும் எச்.சி.ஜி ஹார்மோனின் அளவை பரிசோதிப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் சாம்பிலானது காலையிலேயே கொடுத்தால் தான் சரியான அளவை காண்பிக்கும். இல்லையெனில் அது சற்று தவறாகவே காண்பிக்கும் என்பதாலயே இரத்தப் பரிசோதனை செய்கின்றனர்.

இரத்த பரிசோதனை ரிப்போர்ட்

இரத்த பரிசோதனை ரிப்போர்ட்

இரத்தத்தில் உள்ள எச்.சி.ஜி உறுதி செய்யப்பட்டப் பின், நீரிழிவு, தைராய்டு, இரத்த அணுக்களின் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்த ரிப்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு, மருத்துவரிடம் சென்றால், தற்போது இருக்கும் உடல் நிலையைப் பற்றியும் மருத்துவர்கள் சொல்வார்கள்.

ஸ்கேன்

ஸ்கேன்

கர்ப்பமாக இருக்கும் போது 8 ஆவது வாரத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும். இதனால் வலி, இரத்தப் போக்கு மற்றும் பல பிரச்சனைகள் முன்னரே மருத்துவருக்கு தெரியவந்துவிடும். பின் அதற்கேற்றாற் போல் அவர்கள் மருந்துகளையும் உணவுகளையும் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Steps To Confirm Your Pregnancy | கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Many women might be surprised to know that there are many steps to confirm your pregnancy. Here are some of the tests you need to go through in order to confirm your pregnancy and make an announcement.
Desktop Bottom Promotion