For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

By Maha
|

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீனேஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த பிரச்சனையின் போது, கருப்பையின் பக்கங்களில் இருக்கும் சினைப்பைகள் இருக்கும். இந்த சினைப்பைகளில் நீர் நிறைந்த சினை முட்டைகள் உருவாகும். ஒவ்வொரு மாதமும் 20 சினை முட்டைகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று மட்டும் தான் வலிமைமிக்கதாக இருக்கும். முட்டைகளானது முதிர்ச்சி அடைந்ததும், அந்த முட்டைகளில் சில மாதவிடாயின் போது வெளியேறிவிடும். ஆனால் வலிமை மிக்கதாக இருக்கும் முட்டை மட்டும் கருவுறதலின் போது, கருப்பையினுள் நுழைந்து, விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகிறது.

ஆனால் கருப்பை கட்டிகள் இருந்தால், அந்த முட்டைகளானது சரியாக முதிர்ச்சி அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்காமல், அந்த முட்டைகள் கட்டிகளாக மாறிவிடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில் ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம். அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஏனெனில் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள் இருந்தால், அவை நீரிழிவு, இதய நோய், உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அதன் அறிகுறிகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்றால், ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருக்கலாம். சரி, இப்போது அந்த பி.சி.ஓ.எஸ் என்னும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Have Polycystic Ovaries

Polycystic ovary is the greatest contributor to female infertility. Constant exposure to the changed levels of hormones will eventually cause many other health complications like diabetes, heart failure, increased cholesterol and alteration in blood pressure. Here are some common signs that may help you understand whether you have polycystic ovaries or not.
Desktop Bottom Promotion