For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா?

By Ashok CR
|

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. ஒரு பெண்ணின் வயது அவள் கர்ப்பம் அடைவதற்கு முக்கியகாரணமாக இருக்கின்றது. ஆகவே, கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பம் அடைதல் என்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும். கர்ப்பம் அடைவதற்கு முன்னதாகவே சரியாக திட்டமிடுவது ஆரோக்கியமான கர்ப்பத்தை அடைய உதவும். உங்கள் கர்ப்பகாலத்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு பல வழிகள் உள்ளன. கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உங்களுக்கு அமைதியான கர்ப்பகாலத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் அளிப்பதற்கு தேவையான முக்கியமான ஒன்றாகும்.

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை அறிந்து வைத்து கொள்ளுவது உங்களுக்கு மனரீதியான மற்றும் உடல்ரீதியான பலன்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும். இது உங்களை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் சரியான மூளைவளர்ச்சிக்கும் மற்றும் உடல்வளர்ச்சிக்கும் உதவி புரியும். பாதுகாப்பான வயது என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபட்டே இருக்கும். பொதுவாக 30 வயதிற்குமுன் கர்ப்பம் அடைவது சிறந்த வயதாகும்.

30 வயதிற்கு பிறகும் கர்ப்பம் அடையலாம். ஆனால், அது குழந்தைக்கும் தாய்க்கும் பல பிரச்சனைகளையும் ஆபத்துகளையும் அதிகரிக்க செய்யும். உங்கள் வயது 30க்குள் இருந்தால் அந்த குழந்தையை பராமரிக்க தேவையான அதிக சக்தியும் வலிமையும் இருக்கும். 35 வயதிற்கு பின் உங்களின் கருவளம் குறையத்தொடங்கிவிடும் இதனால் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடக்கூடும். எந்த வயதில் கர்ப்பம் அடைந்தாலும் அதற்குரிய நன்மைகளும், தீமைகளும் நிச்சயம் இருக்கும். நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறியும் சூழ்நிலையில் கீழேயுள்ள சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்வுபூர்வமான ஆரோக்கியம்

உணர்வுபூர்வமான ஆரோக்கியம்

கர்ப்பம் அடைவதற்கு உங்களின் உணர்ச்சிபூர்வமான ஆரோக்கியமும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் மனரீதியாக வளர்ச்சியடைந்த வயதுதான் கர்ப்பம் அடைவதற்கான சிறந்த வயதாகும். நீங்கள் மிகவும் சிறியவராக இருந்தால், உங்கள் பொறுப்புகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. மேலும், உங்களுக்கு பிறக்க போகும் குழந்தையை பராமரிக்கவும் கடினமாக இருக்கும்.

நிதி நிலைமை

நிதி நிலைமை

நீங்கள் மருத்துவரீதியாக ஆரோக்கியமான கர்ப்பத்தை அடைய தேர்ச்சி அடைந்தபிறகு உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நீங்கள் ஒரு குழந்தையை ஈன்றேடுப்பதற்கு உங்களை தயார்படுத்த உதவி புரியும். மேலும், மனரீதியாக அமைதியையும் ஓய்வையும் அளிக்க உதவி புரியும்.

மருத்துவரீதியான ஆரோக்கியம்

மருத்துவரீதியான ஆரோக்கியம்

கர்ப்பம் அடைவதற்கான வயது என்பது ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையை பொறுத்தே இருக்கும். நீங்கள் கர்ப்பம் அடைவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் உங்களின் கர்ப்பத்தை பாதிக்கும் ஏதேனும் பிரச்சனையை உள்ளதா என்பதை கண்டறிய உதவும்.

உங்கள் கணவரின் ஆரோக்கியம்

உங்கள் கணவரின் ஆரோக்கியம்

கர்ப்பம் அடைவதற்கான வயதை கண்டறியும் பொது உங்கள் கணவரின் ஆரோக்கியத்தையும் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னெனில், ஆரோக்கியமான குழந்தையை பெற நீங்களும் உங்கள் கணவரும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும்.

வேலை

வேலை

உங்கள் வேலையில் இருக்கும் அனைத்து குறிக்கோள்களையும் அடைந்த பிறகே கர்ப்பம் அடையலாம் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் அளித்து சரியான வயதில் கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட வேண்டும். உங்கள் வேலையையும் குடும்பத்தையும் தனித்தனியே பார்க்கவேண்டும்.

பழக்கவழக்கங்கள்

பழக்கவழக்கங்கள்

இது உங்களுக்கு வித்தியாசமாக இருந்தாலும், உங்களின் பழக்கவழக்கங்கள் உங்கள் கர்ப்பகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உங்களுக்கு புகைபிடிக்கும் அல்லது மதுஅருந்தும் பழக்கம் இருந்தால், நீங்கள் கர்ப்பம் அடைவதற்கு முன்பே அவற்றை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில், சீக்கிரமாகவே கர்ப்பம் அடைந்து விடுங்கள்.

வேலை செய்யும் சுற்றுசூழல்

வேலை செய்யும் சுற்றுசூழல்

நீங்கள் வேலை செய்யும் சூழலில் ஏதேனும் கதிர்வீசுகளால் பாதிக்கபட்டிருந்தால் அது நீங்கள் கர்ப்பம் அடைவதை பாதிக்ககூடும்.அதனால் இதனை கருத்தில் கொண்டு கர்ப்பம் அடையும் வயதை தேர்ந்தேடுங்கள். சீக்கிரமாகவே கர்ப்பம் அடைய முயற்சி செய்யுங்கள்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

கர்ப்பம் அடைவதற்கான வயதை கண்டறிவதற்கு முன் உங்கள் வாழ்க்கை முறையை கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை உங்களை மட்டுமல்லாது உங்கள் குழந்தையையும் பாதிக்ககூடும். குடும்பம், வேலை, நிதி நிலைமை, எதிர்கால திட்டம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கர்ப்பம் அடைவதற்கான வயதை தேர்ந்தேடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Safe Age To Get Pregnant

Pregnancy at any age comes with its own specific advantages and disadvantages. Here are some points that you have to remember if you are looking forward to finding out your safe age for pregnancy.
Desktop Bottom Promotion