For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பம் தரிப்பது பற்றிய கட்டுக்கதைகளும்... உண்மைகளும்...

By Maha
|

இவ்வுலகில் கர்ப்பம் தரிப்பது பற்றி நிறைய கட்டுக்கதைகள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் அக்காலத்தில் இருந்து, இன்று வரை அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவை அனைத்தும் மிகவும் பிரபலமானவையே. அதுமட்டுமின்றி, இன்றும் பெண்கள் அதனை நம்பி, அதற்கேற்றாற் போல் நடக்கின்றனர்.

உதாரணமாக, மாதவிடாய் காலத்தில் கருத்தரிக்க முயற்சித்தால், கர்ப்பமாக முடியாது என்பது, மாதவிடாய் சுழற்சி நெருங்கும் சில நாட்களுக்கு முன்னால் உறவு கொண்டால் மட்டும் தான் கருத்தரிக்க முடியும் என்பன போன்ற பல கட்டுக்கதைகள் உள்ளன.

இங்கு அப்படி கருத்தரிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், அதன் உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது உண்மையை உணருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனப்பெருக்க நாட்கள்

இனப்பெருக்க நாட்கள்

நிறைய தம்பதியினர் இனப்பெருக்க நாட்களில் உறவு கொண்டால் தான் கருத்தரிக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் விந்தணுவானது எந்த காலத்தில் பெண்ணின் கரு முட்டையை சந்தித்தாலும், கருத்தரிக்க முடியும்.

ஓவுலேசன் தேதி

ஓவுலேசன் தேதி

மாதவிடாய் முடிந்து 14 நாட்கள் கழித்து தான் இனப்பெருக்கம் நடைபெறும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது ஹார்மோன்களைப் பொறுத்தது. ஏனெனில் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிந்து 2-3 நாட்களிலேயே இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருக்கும்.

தினமும் உடலுறவு

தினமும் உடலுறவு

பெரும்பாலான தம்பதியினர் தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் எளிதில் கர்ப்பமடையலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி தினமும் உடலுறவு கொண்டால், விந்தணுவின் எண்ணிக்கை குறைவதோடு, அதன் தரமும் குறைந்துவிடும். இதன் காரணமாகவே கருத்தரிக்க முடியாமல் போய்விடும்.

ஸ்பெஷலான நிலை

ஸ்பெஷலான நிலை

மற்றொரு பிரபலமான ஒரு கட்டுக்கதை என்றால், அது எளிதில் கருத்தரிக்க வேண்டுமானால், உடலுறவு கொள்ளும் போது அதற்கென்று இருக்கும் நிலையில் மேற்கொண்டால் தான், விந்தணுவானது முட்டையை அடைந்து, அந்த கருமுட்டையானது இனப்பெருக்க மண்டலத்தை எளிதில் அடையும் என்பது. ஆனால் உறவு கொண்ட பின்னர் 5 நிமிடம் தளர்ந்து நேராக படுத்தாலே கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

மாதவிடாயின் போது கருத்தரிக்க முடியாது

மாதவிடாயின் போது கருத்தரிக்க முடியாது

நிறைய பெண்கள் இதை நம்புகின்றனர். ஆனால் ஆய்வு ஒன்றில் மாதவிடாய் சுழற்சியின் போதும் கருத்தரிக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக 4 ஆம் நாளிள் செய்தால், நிச்சயம் கருத்தரிக்கலாம் என்றும் சொல்கிறது.

ஒரே முயற்சியில் கருத்தரிக்க முடியாது

ஒரே முயற்சியில் கருத்தரிக்க முடியாது

பலர் பல முறை முயன்றால் தான் கருத்தரிக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஒரே முயற்சியில் கூட கருத்தரிக்க முடியும். அவை அனைத்தும் ஹார்மோன் மற்றும் விந்தணுவைப் பொறுத்தது.

உச்சக்கட்டம் மிகவும் அவசியம்

உச்சக்கட்டம் மிகவும் அவசியம்

கருத்தரிக்க வேண்டுமானால், இருவருமே உறவின் உச்சக்கட்ட உணர்ச்சியை அடைய வேண்டும் என்னும் கட்டுக்கதை உள்ளது. ஆனால் கருத்தரிக்க உறவின் உச்சக்கட்டத்தை அடைய வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. கருத்தரிப்பது என்பது இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாட்டைப் பொறுத்ததே உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths About Getting Pregnant

Women especially think that they can't get pregnant when they are menstruating. Well, it is a popular myth about getting pregnant as you might conceive even when you are menstruating! Here are the most common myths about getting pregnant.
Story first published: Thursday, November 21, 2013, 16:05 [IST]
Desktop Bottom Promotion