For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிதில் கர்ப்பமாக வேண்டுமா? அப்ப ஓவுலேசன் காலத்தில் ஆரோக்கியமா இருங்க...

By Ashok CR
|

கருமுட்டை வெளிப்படுதல் என்பது ஒரு உயிரியல் வினைமுறையாகும். அதன் படி மாதவிலக்கு காலத்தின் போது வளர்ச்சி அடைந்த முட்டையக சுரப்பி கிழிந்து கருமுட்டையை வெளியேற்றும். கருமுட்டை வெளிப்படும் காலம் என்பது ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும். பொதுவாக 28 நாள் அடங்கிய மாதவிலக்கு கால சுற்றில் இந்த வினைமுறை 14-ஆம் நாள் நடைபெறும். ஆனால் பத்திலிருந்து பத்தொன்பதாம் நாள் வரை எப்போது வேண்டுமானாலும் கருமுட்டை வெளிப்படுதல் நடைபெறலாம். அப்படி வெளியேறிய கருமுட்டை விந்தணுவுடன் சேரும் போது அது கருத்தரித்தலில் வந்து முடியும். கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் கருமுட்டை வெளிப்படுதல் எப்போது நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக விளங்குகிறது.

கருமுட்டை வெளிப்படுதலின் போது உடலுறவில் ஈடுபட்டால் நீங்கள் கர்ப்பமாக அது உதவியாக இருக்கும். கருமுட்டை வெளிப்படும் நேரத்தை வைத்து தான் மலட்டுத் தன்மைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருமுட்டை வெளிப்படுதலின் போது நீங்கள் வெற்றிகரமாக கருவுற உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க போதிய உடல்நல பராமரிப்பில் ஈடுபட வேண்டும். கர்ப்பம் தரிக்க டிப்ஸ்களை தேடுகிறீர்களா? அப்படியானால் கருமுட்டை வெளிப்படுதலின் போது தேவைப்படும் உடல் பராமரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய உடல் ஆரோக்கியத்தை பின்பற்றினால், நீங்கள் கர்ப்பம் தரிக்கும் அந்த பொன்னான நாளை தவற விடமாட்டீர்கள்.

உடலின் அடிப்பகுதியில் நிலவும் வெப்பநிலை, கர்ப்பவாய் சளியில் மாற்றங்கள், அல்ட்ரா ஒலி ஸ்கேன் அல்லது கருமுட்டை வெளிப்படுதலை கணிக்கும் கருவி போன்றவைகளை வைத்து கருமுட்டை வெளிப்படும் நாளை ஊகிக்க முடியும். சரி, கருமுட்டை வெளிப்படுதலின் போது தேவைப்படும் உடல்நல பராமரிப்பை பற்றி இப்போது பார்க்கலாமா? கர்ப்பம் தரிக்க டிப்ஸ்களில் இவை முக்கியமானதாக விளங்குகிறது. இவைகளை பின்பற்றினால் கருமுட்டை வெளிப்படுதல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சந்தோஷமாக கர்ப்பம் தரிக்கவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்

ஜங்க் உணவுகள், டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்க்கவும்.ட்ரான்ஸ் கொழுப்பு எனப்படும் அபூரிதக் கொழுப்பு அடங்கிய ஜங்க் உணவுகள் உங்கள் உடலுக்கு, முக்கியமாக கருமுட்டை வெளிப்படுதலின் போது, நல்லதல்ல. இவ்வகை ட்ரான்ஸ் கொழுப்புகள் கருமுட்டை வெளிப்படும் ஆற்றலை குறைத்து விடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் பாலி சிஸ்டிக் ஒவரியன் சிண்ட்ரோம் உடைய பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உங்கள் ஹார்மோன்கள் சமநிலையில் சுரப்பதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமாக விளங்குகிறது. கருமுட்டை வெளிப்படுதல் என்பது அதற்கு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களை பொறுத்தே அமையும். ஹார்மோன்கள் சமமின்மையாக இருந்தால் அது கருமுட்டை வெளிப்படுதலை வெகுவாக பாதிக்கும். அதனால் கருத்தரிக்க முக்கியமான டிப்ஸாக விளங்குகிறது உடற்பயிற்சி.

முளைத்த பயறு

முளைத்த பயறு

கருமுட்டை வெளிப்படுதல் சரியாக நடக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. முளைத்த பயறுகளில் புரதச் சத்து வளமையாக உள்ளது. அது உங்கள் மாதவிலக்கு கால சுழற்சியை சீராக இருக்க உதவும். கர்ப்பம் தரிக்க புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுவதும் ஒரு முக்கியமான டிப்ஸாக விளங்குகிறது.

சரியான உடல் எடை

சரியான உடல் எடை

உங்கள் மாதவிலக்கு கால சுழற்சி சரியாக நடக்க உடல் அமைப்பு மற்றும் எடை சரியான அளவில் இருப்பது முக்கியமாக விளங்குகிறது. கருமுட்டை வெளிப்படுதல் ஆரோக்கியமாக நடைபெற சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அதனால் உங்கள் ஹார்மோன் அளவும் சமநிலையில் விளங்கும். பருத்த உடலால் பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடல்நல சோதனைகள்

உடல்நல சோதனைகள்

உங்களுக்கு மாதவிடாய் சீரான சுழற்சியில் ஏற்படவில்லை என்றால் மருத்துவ சோதனைகள் செய்து கொள்வது அவசியமாக விளங்குகிறது. அப்போது தான் உடலில் இருக்கும் பிரச்சனைகளை கண்டுபிடித்து சரி செய்ய முடியும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை மேற்கொண்டால் பிரச்சனைகளுக்கும் சுலபமாக தீர்வு காணலாம். கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறை சில மருத்துவ நிலைகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதனை சீக்கிரத்திலேயே குணப்படுத்த வேண்டும்.

குறைந்த அளவிலான காப்ஃபைன்

குறைந்த அளவிலான காப்ஃபைன்

காப்ஃபைன் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொண்டால் உங்கள் கருமுட்டை வெளிப்படுதல் மேம்படும். உங்கள் ஒட்டுமொத்த கருத்தரிப்புத் திறனையும் காப்ஃபைன் பாதிக்கும். கருமுட்டை வெளிப்படுதலின் போது ஆரோக்கியமாக விளங்க காப்ஃபைன் உட்கொள்ளுதலை குறைத்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அமைதியான ஓய்வு

அமைதியான ஓய்வு

மன அழுத்தம் என்பது கருமுட்டை வெளிப்படும் செயல்முறையை வெகுவாக பாதிக்கும். கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் மனதை அமைதியாக வைத்து கொள்வது அவசியமாக விளங்குகிறது. இது ஒரு முக்கிய டிப்ஸாகவும் விளங்குகிறது. இது உங்கள் ஹார்மோன் சமநிலையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

நல்ல பழக்கவழக்கம்

நல்ல பழக்கவழக்கம்

கருமுட்டை வெளிப்படுதலின் போது கர்ப்பம் தரிக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் மேற்கொள்ளும் ஆபத்தான தீய பழக்கங்களை உடனே கைவிடுங்கள். மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் கருமுட்டை வெளிப்படுதலை வெகுவாக பாதிக்கும். அதனால் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றி கருமுட்டை வெளிப்படுதலின் தரத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Care During Ovulation

If you are looking for getting pregnant tips, health care during ovulation should be of prime importance. Health care during ovulation will help you not to miss that precious day. Here are some getting pregnant tips that are related to health care during ovulation. This will help you have a healthy ovulation and a happy pregnancy.
Story first published: Sunday, December 8, 2013, 15:31 [IST]
Desktop Bottom Promotion