For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருச்சிதைவிற்கு பின் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

By Maha
|

பெண்களுக்கு கர்ப்பம் அடைவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவ்வாறு கர்ப்பமடைந்த பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினம். மேலும் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். ஏனெனில் ஆசையாக குழந்தை வேண்டுமென்று முயற்சித்து, அந்த குழந்தை பிறக்காமலேயே இறந்துவிட்டால், பெண்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மிகவும் தளர்ந்துவிடுவார்கள்.

எனவே இத்தகைய தளர்ச்சியில் இருந்து விடுபட, பெண்கள் கருச்சிதைவிற்கு பின் நன்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டம். குறிப்பாக எப்படி கர்ப்பமான பின்னர் சில உணவுகளை தவிர்க்க வேண்டுமோ, அதேப் போல் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னரும் சில உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

அதைவிட்டு எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தால், பின் உடல் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். எனவே கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், மருத்துவரை அணுகி எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அப்படி கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் சாப்பிடக்கூடாத சில உணவுகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளில் ஒன்று தான் ஜங்க் உணவுகள். ஏனெனில் இந்த உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் நிறைந்திருப்பதால், பெண்கள் இதனை அறவே தவிர்க்க வேண்டும்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

பொதுவாக சோயா பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால் இதனை கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் சாப்பிடக்கூடாது.

ஃபாஸ்ட் ஃபுட்

ஃபாஸ்ட் ஃபுட்

கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை விட்டு பிட்சா, பர்க்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டால், மன அழுத்தம் தான் அதிகரிக்கும். எனவே இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட் உணவுகள்

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதால், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளான பாஸ்தா, மக்ரோனி, மேகி போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமற்றது. எனவே உடலின் சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில், இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதே ஆரோக்கியமற்றது. அதிலும் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், இதனை சாப்பிட்டால், இவை உடலில் பெரும் பிரச்சனைகளைத் தான் ஏற்படுத்தும். எனவே இதனை சாப்பிடக்கூடாது.

உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்

உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள்

கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், பெண்கள் உறைய வைக்கப்பட்ட இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

காபி

காபி

கர்ப்பமாக இருக்கும் போதும், பிரசவத்திற்கு பின்னரும், ஏன் கருச்சிதைவு ஏற்பட்டாலும், காபி குடிப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் காபியின் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள், கருப்பைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid After Miscarriage

It is important you take good care after miscarriage, here are some of the foods you must avoid when coping with miscarriage.
Story first published: Tuesday, August 6, 2013, 17:51 [IST]
Desktop Bottom Promotion