For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...

By Maha
|

கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. அதிலும் அந்த பாக்கியம் அனைவருக்குமே எளிதில் கிடைக்காது. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. ஆகவே கருத்தரிக்க முயற்சிப்போர், ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால், சற்று எளிதில் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ஏனெனில் ஒருசில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, ஈ டி மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அதனை வீட்டில் சரியாக சமைத்து சாப்பிட்டு வந்தால், நிச்சயம் சீக்கிரம் கர்ப்பமாக முடியும். இப்போது கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காளான் ஆம்லெட்

காளான் ஆம்லெட்

இந்த ரெசிபியை ஆண் மற்றும் பெண் இருவருமே சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் உள்ள முட்டை மற்றும் காளானில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் ஜிங்க் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், விரைவில் கர்ப்பமாகலாம்.

பாதாம் சப்பாத்தி

பாதாம் சப்பாத்தி

கருத்தரிக்க முயலும் போது, காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளை ஸ்மூத்தி

மாதுளை ஸ்மூத்தி

மாதுளையில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இதனை தினமும் பருகி வர வேண்டும். இதனால் விரைவில் கர்ப்பமாகலாம்.

சால்மன் க்ரில்

சால்மன் க்ரில்

கருத்தரிப்பதை அதிரிப்பதில் சால்மன் மீன் முதன்மையானது. அதிலும் அந்த சால்மன் மீனை கழுவி, அதில் இஞ்சியை துருவி போட்டு, வினிகர் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்து, க்ரில் செய்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேல் சாலட்

கேல் சாலட்

கேல் கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் நிநைந்துள்ளது. ஆகவே கேல் கீரையை சாலட் அல்லது கடைந்து சாப்பிடுவது விரைவில் கர்ப்பமாவதை உறுதியாக்கும்.

சீஸ் சாண்ட்விச்

சீஸ் சாண்ட்விச்

சீஸில் பெண்கள் கருத்தரிப்பதற்கு தேவையான கால்சியம் சத்தானது அதிகம் இருப்பதால், இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது.

க்ரில்டு கடல் சிப்பி

க்ரில்டு கடல் சிப்பி

கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால், ஆண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்தது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் ஆயில், மிளகாய் தூள் மற்றும் பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் க்ரில் செய்து சாப்பிட்டால், சுவையுடன் இருப்பதோடு, விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

மூலிகை ஜூஸ்

மூலிகை ஜூஸ்

கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்ஸ்லி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, மாலையில் குடித்து வந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

சிக்கன் சாலட்

சிக்கன் சாலட்

நன்கு வேக வைத்த சிக்கனில் புரோட்டீன் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். எனவே அந்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, அதில் கேல், பசலைக் கீரை மற்றும் லெட்யூஸ் போன்றவற்றை போட்டு ஒரு சாலட் போன்று செய்து, அதன் மேல் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பெண்கள் சாப்பட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இறால்

இறால்

இறாலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. எனவே அந்த இறாலை நன்கு சுத்தமாக கழுவி, அதில் எலுமிச்சை சாறு, பூண்டு மற்றும் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து பிரட்டி ஊற வைத்து, பின் வறுத்து சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரித்து, எளிதில் கர்ப்பமாக முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fertility Recipes To Conceive Quickly

Fertility foods for both men and women is the best natural way to boost your chances of conception. These fertility recipes to conceive quickly make use of ingredients that are rich in nutrients. Here are some of the best fertility recipes to conceive quickly, compiled by Boldsky.
Story first published: Friday, August 23, 2013, 18:31 [IST]
Desktop Bottom Promotion