For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசுமையான காய்கறிகளும்... விந்தணுக்களின் குணமும்... ஒரு ரிப்போர்ட்!

By Boopathi Lakshmanan
|

நாம் உண்ணும் உணவிற்கேற்ப நாமும் ஆரோக்கியமாக இருப்போம் என்று கூறுவார்கள். நீங்கள் தந்தையாக விரும்பினால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகி விடுகின்றது. உங்கள் விந்தின் தன்மை உங்கள் மனைவியை எவ்வளவு சீக்கிரம் கர்ப்பமாக்க முடியும் என்பதை உணர்த்துகின்றது. ஒரு ஆண் விந்துவின் தன்மைக்கும், உணவு முறைக்கும் இருக்கும் நேரடியான தொடர்புகள் குறித்து பல நிபுணர்கள் ஆய்வுகள் செய்து வருகின்றனர். சக்தியும் ஆரோக்கியமும் நிறைந்த விந்துக்களுக்கு சீக்கிரம் கருவுறவைக்கும் தன்மை உண்டு.

ஆரோக்கியமான விந்துக்கள் முடையை சென்றடைய நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களின் முட்டை இல்லாத சமயத்திலும் அவற்றால் உயிருடன் வாழவும் முடிகின்றது. சில சமயங்களில் விந்து நிறைய நாட்கள் பெண்ணுறுப்புக்குள் காத்திருந்து முட்டையை அடைந்து கருத்தரிக்க வைக்கிறது. விந்தின் தன்மை நன்றாக இருந்தால் அதனால் நிறைய நாட்கள் உயிர் வாழ முடியும். அதுமட்டுமில்லாமல் அது நீந்தி சென்று அதன் இலக்கை அடைய சக்தியும் இருக்கும். அதிக அளவு புரதச்சத்தும், மற்றும் பிர ஆரோக்கியத்தை தரும் உணவுகளும் விந்தின் தன்மையை அதிகரிக்கும்.

Does Eating Leafy Veggies Increase Quality Sperms

நிபுணர்களின் கருத்து படி வைட்டமின் பி-யின் ஒரு வடிவமாக இருக்கும் ஃபோலிக் அமிலத்திற்கு மூளை மற்றும் ஸ்பைனா பைபிடா போன்ற முதுகெலும்பு சார்ந்த குறைகள் வராமல் தவிர்க்கும் குணம் கொண்டுள்ளது. இந்த அமிலத்தில் 30 சதவிகிதம் அளவிற்கும் குறைவாக உள்ள ஆண்கள் குறைபாடுள்ள குழந்தைகளை பெறுகின்றனர். தந்தையாக விரும்பும் ஆண்கள் நொறுக்குத் தீனியை சாப்பிடும் பழக்கத்தை விட்டு விட்டு பசுந்தழைகளை கொண்ட காய்களை சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின்கள் மிகவும் வலுவூட்டுவனவாகும். ஒரு தந்தையின் உடல் ஆரோக்கியம் நிச்சயமாக உருவாகும் குழந்தையின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும்.

விந்தின் தன்மையை அதிகரிக்க சில முக்கிய காய்கறிகளை பற்றி நாம் பார்ப்போம்:

பச்சை கீரை

குறைந்த விந்து தன்மையும், சக்தி குறைந்த விந்துக்களும் ஃபோலிக் அமிலம் குறைபாட்டின் காரணமாக வருகின்றது. ஃபோலிக் அமிலத்தை பிற்சேர்க்கையாக உண்டால் நல்ல விந்துக்களை உருவாக்க முடியும். கீரை வகைகள், முள்ளங்கி கீரை, சீமை பரட்டை கீரை போன்றவை ஃபோலிக் அமிலம் அதிகமாக கொண்டவையாகும். இவை விந்தின் தன்மையை அதிகர்க்கும்.

ப்ராக்கோலி

விந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த விரும்பினால் ப்ராக்கோலி ஆண்களுக்கு மிகவும் சிறந்த உணவாக அமைகின்றது. வைட்டமின் பி அதிக அளவில் கொண்டுள்ள ப்ராக்கோலியில் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ள காய்களில் இவை ஒன்றாகும். இவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், விந்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்த முடியும்.

பச்சை இலைகளில் உள்ள வைட்டமின் சி

வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவற்றில் உள்ள ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் விந்தின் தன்மையை அதிகரிக்கவல்லது. நல்ல அணுக்களின் ஆக்ஸிஜன் எதிர் பொருட்களால் அதிக விந்து எண்ணிக்கையும் அதிக அளவில் இயக்கமும் ஏற்படுகின்றது. ஆகையால் இத்தகைய வைட்டமின்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் அதிக அளவு ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் கிடைக்கும். பரட்டை கீரை, ஆலி விதை கீரை மற்றும் கடுகு கீரை ஆகிய கீரைகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

லைக்கோபீன்

தாவரங்களில் உள்ள சிவப்பு நிறத்தை வழங்கும் கரோட்டின், தக்காளி மற்றும் தர்பூசணி மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு (அஸ்பாரகஸ்) போன்ற காய்கறிகளில் உள்ளது. தினசரி உணவில் குறைந்த அளவே லைக்கோபீன் உண்ணும் போது குறைந்த அளவு விந்துக்களே உருவாகின்றது. அதனால் ஆண் மலட்டுத்தன்மை உருவாகிறது. லைக்கோபீனை உணவுடன் சேர்த்து உட்கொண்டால் ஆண்களின் மலட்டுத் தன்மையை சரி செய்யும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைவாக இருந்தாலும் ஆண் மலட்டுத் தன்மை ஏற்படும். வைட்டமின் டி யை ஆய்வுக் கூடத்தில் வைத்து உயிருள்ள விந்துக்களில் செலுத்தினால் அவறறின் ஓட்டத்தன்மை மிகுதியாக அதிகரிப்பதை காண முடியும். இவை விந்தின் தலை என்று கூறப்படும் 'ஆக்ரோசோம் செயல்பாட்டை' அதிகப்படுத்தி விந்து கருமுட்டையுடன் விரைவில் சேர உதவுகின்றன. சூரிய ஒளிக்கு அடுத்த படியாக, முட்டை, கீரை, பாலில் இச்சத்து அதிகளவில் உள்ளது.

English summary

Does Eating Leafy Veggies Increase Quality Sperms

Many research’s have shown direct link between diet and quality of sperm in a mans semen. The better the quality and strength of sperm more chances of conceiving. Here are leafy greens that are essential for quality sperms.
Story first published: Tuesday, December 24, 2013, 19:32 [IST]
Desktop Bottom Promotion