For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருக்கலைப்பு அவசியம் செய்வதற்கான 7 காரணங்கள்!!!

By Maha
|

சில நேரங்களில் பெண்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு காரணம், குடும்ப சூழ்நிலை மற்றும் போதிய வருமானம் இல்லாதது என்பதால் தான் இருக்கும். ஏனெனில் போதிய வருமானம் இல்லாத நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொண்டால், அந்த குழந்தை பிறந்த பின்னர் அதற்கும் கஷ்டம் என்பதாலேயே தான். இருப்பினும் சில சமயங்களில் ஒருசில மருத்துவ காரணங்களாலும் கருக்கலைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனென்றால், சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாத நேரத்தில் கர்ப்பம் அடைந்தால், அதனால் தாய்க்கு பிரச்சனை தான் ஏற்படும். எனவே தான் சில சமயங்களில் தாயின் உயிரைப் பாதுகாக்க, கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, வேறு சில காரணங்களாலும் கருக்கலைப்பு மிகவும் அவசியமானது. உதாரணமாக, குழந்தைக்கு ஏதேனும் தீவிர மரபணு குறைபாடுகள் இருந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே அந்த நேரத்தில் கருக்கலைப்பு அவசியம் செய்ய வேண்டும். சரி, இப்போது வேறு எந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு அவசியம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

Reasons You May Need An Abortion

கர்ப்பமாக இருக்கும் போது அம்மை நோய்: பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கடுமையான வைரல் நோயான அம்மை நோய் வந்தால், அந்த நேரத்தில் உடனே கருக்கலைப்பு செய்ய வேண்டும். ஏனெனில் அம்மை நோய் வந்தால், அதனை உண்டாக்கும் வைரஸானது குறைந்தது 3 மாதங்கள் உடலில் இருக்கும். இவ்வாறு அந்த வைரஸ் இருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும்.

புற்றுநோய்: புற்றுநோய் இருக்கும் போது கர்ப்பமடைந்தால், உடனே கருக்கலைப்பு செய்துவிடுவது சிறந்தது. ஏனெனில் புற்றுநோயை போக்குவதற்கு மேற்கொள்ளும் சிகிச்சையின் போது கடுமையான கெமிக்கல் உள்ள ஹீமோதெரபி மேற்கொள்வதால், அது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒருவேளை புற்றுநோய் சிகிச்சையை பிரசவத்திற்கு பின் மேற்கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டுவிட்டால், பின் புற்றுநோய் முற்றி, இறப்பிற்கு வழிவகுக்கும்.

பிறப்பு குறைபாடு: கர்ப்பம் ஆனவுடன் குழந்தையின் நிலை மற்றும் செயல்பாட்டை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்போது குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு அல்லது பெருமூளையில் பிரச்சனை இருப்பது போன்று தெரிந்தால், அப்போது அந்த பிரசவத்தை தொடராமல், உடனே கருக்கலைப்பு செய்வது சிறந்தது. ஏனெனில் குழந்தை பிறந்து அவஸ்தைப் படுவதைப் பார்ப்பதை விட, அதனை கலைப்பதே சிறந்தது.

கருச்சிதைவு: கர்ப்பமாக இருக்கும் போது ஒருவேளை பெண்களின் கருப்பை மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று மருத்துவர் சொல்லிவிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வரை காத்திருக்காமல், உடனே கருக்கலைப்பு செய்துவிட வேண்டும்.

பால்வினை நோய்கள்: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பால்வினை நோய்களான எய்ட்ஸ் அல்லது சிபிலிஸ் போன்றவை இருந்தால், அப்போது கருவில் இருக்கும் குழந்தைக்கும் இந்த நோய் வந்துவிடும். எனவே இத்தகைய நோய் இருந்தால், கருக்கலைப்பு மிகவும் அவசியம்.

நீரிழிவு: கர்ப்பிணிகளுக்கு தீவிர நீரிழிவு இருந்தால், அது குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். ஒருவேளை நீரிழிவு முற்றியதால், மருத்துவர் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொன்னால், உடனே செய்வது நல்லது.

தைராய்டு: தாயின் தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாமல் இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரந்தால், நிச்சயம் கருக்கலைப்பு செய்துவிட வேண்டும்.

இவையே கருக்கலைப்பு நிச்சயம் செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்கள். வேறு ஏதாவது குழந்தை மற்றும் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

7 Reasons You May Need An Abortion | கருக்கலைப்பு அவசியம் செய்வதற்கான 7 காரணங்கள்!!!

Sometimes women need abortions because they are not financially capable of supporting a baby. They may also choose to get an abortion because they are not emotionally ready for child. However, an abortion is sometimes necessary due to medical reasons. So let us see what medical conditions can deem an abortion necessary.
Desktop Bottom Promotion