உங்கள் குழந்தையின் உடல் எடை சரியாக உள்ளதா? இல்லையெனில் கவனியுங்கள்!!

குழந்தை நல வளர்ச்சி மருத்துவமனையில் பெரும்பாலும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையே அதிகம் பகிரப்படுகின்றன

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பது உலகில் உள்ள அனைத்து தாய்மார்களின் கவலை ஆகும். ஏனெனில் சரியான எடையுடன் இருந்தால் மட்டுமே குழந்தைகள் ஆரோக்கியமான வழியில் வளருகின்றனர் என்று நம்புகின்றனர் இருப்பினும் கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எடை தொடர்பாக பல தவறான கருத்துகள் நமது சமூகத்தில் உள்ளன.

is your child really underweight

குழந்தை நல வளர்ச்சி மருத்துவமனையில் பெரும்பாலும் குழந்தைகளின் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனையே அதிகம் பகிரப்படுகின்றன.ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சரியான எடையில் உள்ளனரா என்று கண்காணிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்கள் குழந்தையின் எடை சரியானதா என கவனிக்கும் வழிகள் :

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான எடையைக் கொண்டுள்ளது.ஆனால் அந்த எடை உயரத்திற்கும்,வயதிற்கும் ஏற்றவாறு இல்லாமல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

வீட்டில் குழந்தைகளின் ஆடைகளில் ஒரு கவனம் வைத்திருக்க வேண்டும்.ஒரு ஆடை நீண்ட வருடத்திற்கும் அதே அளவுடன் குழந்தைக்கு எளிதாக போட முடிந்தால் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் எடை குறைவாக இருப்பின் அவர்களின் விலா எலும்பில் வித்தியாசம் தெரியும்.

 

இந்திய குழந்தைகளின் சராசரி எடை அளவு:

6 மாத குழந்தை : ஆண்:6.5-10 kg ; பெண்: 6-9 kg.

12 மாத குழந்தை : ஆண்:8-10 kg ; பெண்:7-11 kg.

18 மாத குழந்தை : ஆண்:9-13 kg ; பெண்:8-13 kg.

24 மாத குழந்தை : ஆண்:10-15 kg ; பெண்:9-15 kg.

மேலும் சில சந்தேகமான சந்தர்ப்பங்களில்,குழந்தையின் எடையை மட்டும் கொண்டு மதிப்பீடு செய்ய முடியாது என்றும்,எடையுடன் உயரத்தை சேர்த்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர் கூறுகிறார்.

 

உங்கள் குழந்தையின் எடை குறைவாக உள்ளதா?

குழந்தை எடை குறைவான பிரிவில் இருந்தால் அதற்கு முதலில் மதிப்பீடு தேவை. இந்த வகை குழந்தைகள் மருத்துவ பரிசோதனை செய்து எந்த வகை பிரச்சனையும் இல்லையெனில் மருந்துகள் தேவை இல்லை.

ஆனால் குழந்தைகளின் எடை குறைவிற்கு காரணம் குறைந்த அளவு கலோரி உட்கொண்டதே ஆகும்.அதனால் முதலில் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு,உயரத்திற்கு ஏற்ற எடைக்குத் தேவையான கலோரி கொடுக்கச் செய்ய வேண்டும்.

 

எடை குறைவிற்காக காரணங்கள் :

ADHD(பசியின்மை) உணவு ஒவ்வாமை, ஹார்மோன் பிரச்சனை (அ) செரிமான பிரச்சனைகள்.

குழந்தைகளின் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகரிக்க என்ன செய்யலாம்?

குழந்தைகளின் உணவில் நல்லக் கொழுப்பினை சேர்க்க வேண்டும்.ஆனால் நிறைவுற்ற கொழுப்பினை தவிர்க்க வேண்டும்.

வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கவும்.குழந்தைகள் உண்ணும் பழங்களுடன் சேர்த்து கொடுக்கலாம்.

செக்கில் ஆட்டிய எண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் ஆகியவை மருத்துவரின் பரிந்துரையின்படி எடுக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

is your child really underweight

Health tips to improve weight of your children if they are underweight,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter